Pages

Sunday 14 July 2013

அன்பார்ந்த அறிஞர் பெருமக்களே! ஓர் பணிவான வேண்டுகோள்!
         
தயை கூர்ந்து, இப்பதிவினை படித்து, தங்களது மேலான,
கீழான, நேர்மறையான, எதிர்மறையான ஏதோவொரு கருத்தினை
பதிவிட்டுச் செல்லுமாறு, தாழ்மையுடன் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்!                                                                 
                                                                  நன்றி!
 
 தாயே
பராசக்தி!


            21+


            தாயே பராசக்தி!          

                                             ப. சிவக்குமார்                         
                             21/1 ராவாளீஸ்வரன் காம்பவுண்ட்,
                             3வது வீதி, லஷ்மி நகர்,
                             நல்லாம்பாளையம் சாலை,
                            சங்கனூர்,
                            கோயமுத்தூர் - 641027

தலைப்பு       :  தாயே பராசக்தி! 21+
                      ப. சிவக்குமார்

முதற்பதிப்பு    :  2013


பிரதிகளின்
எண்ணிக்கை    :  35


காப்புரிமை     :   பெறப்படவில்லை.


விலை         :   நிர்ணயிக்கப்படவில்லை.


அச்சிட்டது     :  வீட்டில்.இதை என் தாய்தந்தை, பார்வதி பரமசிவன் அவர்களுக்கும்;
என் மனைவிமகள், முத்துமாரி M.S சத்யஸ்ரீ அவர்களுக்கும்;
மற்றும் சத்தியத்திற்க்கும் சமர்ப்பிக்கிறேன்.                             சத்யமேவ ஜெயதே

வணக்கம்,
     என் பெயர் சிவக்குமார். இது   நான் எழுதும்,  இரண்டாவது மற்றும் பெண் விடுதலையை பற்றிய ஒரு கட்டுரை.* சமுதாயத்தில் பெண்ணிற்க்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை கொடுமைகளில்                                             இருந்து, பெண்களை எப்படி மீட்பது?* குடும்பத்தில்  பெண்களுக்கும் சம மதிப்பையும், உரிமைகளையும்  எப்படி பெற்றுத் தருவது?


* முதலில் பெண்களுக்கு எதற்காக விடுதலை தேவை?

* எதிலிருந்து பெண்களுக்கு விடுதலை தேவை?

* பெண்கள் ஏன் இதுவரை விடுதலை பெற முடியவில்லை?                                                         

* அப்படி பெண்களுக்கு சம வாழ்க்கை, சம சுதந்திரம் அளிப்பதால் சமுதாயத்தில் என்ன                 
மாற்றம் நிகழும்?

* பெண்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதால் சமுதாயத்தில் என்ன சீரழிவுகள் நிகழ்கிறது?

* ஆண்கள் செய்யும் தவறுகள் என்ன?

* பெண்கள் செய்யும் தவறுகள் என்ன?

* பெற்றோர் செய்யும் தவறுகள் என்ன?

* ஊடகங்கள் செய்யும் தவறுகள் என்ன?

* அரசாங்கம் செய்யும் தவறுகள் என்ன?

இதைப்பற்றிய, ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரைதான் இது.

சரி, இதையெல்லாம் எழுத நான் யார் என்பதற்க்கான ஒரு சிறுகுறிப்பு. பெண்களின் அங்கங்களை கண்டு ரசிக்கும், ஒரு பொம்பளை பொருக்கி. இன்னும் நிறைய இருக்கு அதை பிறகு சொல்கிறேன்.

                                                                                                                                                                                       

                                         1
                                                                              
                                    

                     

                  ஒப்புதல்  தீர்மானம், மற்றும்  எச்சரிக்கை அறிவிப்பு

* இது தணிக்கை செய்யப்படாத, காப்புரிமை பெறாத, தனி ஒருவனால் எழுதப்பட்டு, அச்சிடப்பட்ட ஒரு கட்டுரை.

* நான் முதலில் கிரேக், பிரெஞ்ச் மொழிகளில்தான், எழுத நினைத்தேன். ஆனால் பாருங்க, எனக்கு தமிழ் மொழி மட்டும்தான், முக்கால் பாகம் தெரியும். அதனால், நான் தமிழை பயன்படுதிக் கொண்டேன்.

* தமிழுக்கே உரித்தான, பாரம்பரிய மரியாதையை நான் கெடுத்திருந்தாலும், இதிலுள்ள சொல்பிழை, வரிபிழை, வாக்கியபிழை, பத்திபிழை, ஏன் மொத்தமும் பிழையாக இருந்தாலும்,  தமிழ் தாத்தாக்களே, பாட்டிகளே தயவுசெய்து இச்சிறுவனை மன்னிக்கவும்.

* புத்தகத்திற்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. இதைதான் அச்சிடவேண்டும், இப்படித்தான் ஒரு புத்தகம் இருக்க வேண்டும், என்று ஒரு இலக்கண வரையறை உண்டு. அதையும் நான் மீரியதர்க்கும், புத்தக புழுக்களே, பிரியர்களே, என்னை மன்னிக்கவும்.

* நான் சொல்ல நினைப்பதை, ஒரு குரும்படமாகவோ, ஒரு திரைப்படமாகவோ அல்லது பொது அரங்கத்தில் நின்று சொல்லவோ என்னிடம் போதுமான பணம் இல்லை.

* எனக்கு தெரிந்து மலிவான, எளிமையான, வலிமையான எனக்கு பிடித்த ஒரு ஊடகம்  புத்தகம். அதனால் நான் புத்தக வடிவத்தை எடுத்துக் கொண்டேன்.

* இருப்பினும், இது ஒரு புத்தகமும் அல்ல, நான் ஒரு எழுத்தாளனும் அல்ல,  எழுதுவது எனது பொழுதுபோக்கும் அல்ல, இதன் மூலம் பணம் சம்பாதிப்பது, என் பிழைப்பும் அல்ல.

* நான் பிறந்து 30 ஆண்டுகளும்,  எனக்கு திருமணமாகி 4 ஆண்டுகளும், பெண் குழந்தை பிறந்து 2 ஆண்டுகளும் ஆகிறது. அதனால் இதை எழுதுவதற்க்கான தகுதி ஓரளவிற்காவது எனக்கு இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

* நான் வேற்றுகிரகவாசி அல்ல,  நானும் உங்களோடு இதே பூமியில்தான் வாழ்கிறேன். என்னுடைய கருத்துக்களை இங்கு பதிவு செய்ய முழுஉரிமையும், எனக்கு தெரிந்த நல்வழிகளை இச்சமுதாயத்திற்கு சொல்லவேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. அதனால் இதை எழுத நீ யார்?, உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று என்னை யாரும் கேட்காதீர்.

* இதற்க்கு தாயே பராசக்தி என்று தலைப்பை வைத்திருந்தாலும், இது காமத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஒரு கட்டுரையே. அதனால் 21 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் மட்டுமே இதை படிக்க வேண்டுகிறேன்.          

* இது சூப்பர்ஸ்டார் சொல்லிய வசனம், இது S.J சூர்யா அவர் படத்தில் சொல்லியது, இது வள்ளுவர் சொல்லியது, இது காந்தி, பாரதியார் சொல்லியதை எழுதியிருக்கிறான், என்று யாரும் கோபப்பட வேண்டாம். நானே ஒப்புக்கொள்கிறேன்.                                    

 * பிறரால் ஏற்க்கனவே சொல்லப்பட்ட கருத்துக்களை படியெடுத்தும், எனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்தும், அதை புதுவிதமான கலவையில் என்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.

                                         2
* காந்தி, பாரதியார், நேரு இன்னும் யார்யாரோ பெண் விடுதலையைப் பற்றி சொல்லக்கேட்காத இச்சமுதாயம், நான் சொல்லியா கேட்கப்போகிறது? என்றாலும், சொல்லக்கூடிய விதத்தை மாற்றி அமைத்தால் கேட்பார்களா? என்று ஒரு சிறுமுயற்சி அவ்வளவுதான்.

* இதில் என்னுடைய கருத்துக்களை மிகைப்படுத்தியும், எதையுமே முழுமையாக ஆராயப்படாமலும், நானாக கற்பனை செய்தே கதை எழுதியிருக்கலாம். எது எப்படி எழுதப்பட்டாலும், அதை நன்கு ஆராய்ந்து, நான்கு பேரிடம் விசாரித்த பின், இக்கருத்தை ஏற்கலாமா?  வேண்டாமா? என்று முடிவெடுப்பது,  உங்கள் தனிப்பட்ட விருப்பமே.

     இனி உள்ளே போகலாம். இப்போ நம்ம வீட்டில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. அதற்க்கு கொசுபத்தி வைத்தாலும் போவதில்லை, கொசுமருந்து அடித்தாலும் சாவதில்லை, கொசுவலைக்கு உள்ளேதான், எவ்வளவு நேரம் இருக்கமுடியும்? சரி ஒரு கொசு பேட் நம்கையில் வைத்திருந்தால், நன்றாக இருக்கும். ஆனால் நாம் நாள்முழுவதும், வாழ்நாள் முழுவதும், ஒரு கொசுபேட்டும் கையுமாக, நம்மை எதிர்கொள்கிற கொசுக்களை, ஒவ்வொன்றாக அடித்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா? அதற்க்கு பதில், கொசு எங்கே உருவாகிறது?  எப்படி உற்பத்தியாகிறது? என்பதை தெரிந்து கொண்டால், கொசுவை அளித்து நிம்மதியாக உறங்கலாம்.

     அதைப்போல, சமுதாயத்தில் பெண்ணிற்கு எதிரான பாலியல் கொடுமைகள், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு குற்றவாளியாக பிடித்து தண்டித்துக்கொண்டும், தலைவலி தைலத்தை தடவிக்கொண்டும் இருப்பதைவிட, குற்றவாளி எப்படி உருவாகிறான், என்ற கதையை தெரிந்துகொண்டால், அடுத்த குற்றவாளி உருவாவதை தடுக்க முடியும். இதுதான் இக்கட்டுரையின் கோட்பாடு. இனி உங்களால் இதை கீழே வைக்கவும் முடியாது, படித்துமுடித்தால் தூங்கவும் முடியாது.

     பெண்ணாக பிறந்தாலே பிரச்சனைதான். காலையில் எழுந்து வாசல் கூட்டும்போதே ஒரு கையால் தன் மார்பை மறைக்க வேண்டும். கீழே விழுந்த ஒரு பொருளை எடுக்கவேண்டும் என்றால், தன் எதிரே யாரேனும் உள்ளனரா, என்று பார்த்த பின் தான், குனிந்து அப்பொருளை எடுக்கமுடியும்.  கடைக்கு போனால் மேலும் ஒரு துணியால், தன் மார்பை மறைத்தபடி போகனும்.
    
     பஸ்ஸில் ஏறவும் கஷ்டம், இறங்கவும் கஷ்டம், உயர்வாக உள்ள கம்பியை பிடித்துக்கொள்ளவும் முடியாது, நிமிடத்திற்கு ஒரு முறை தன் ஆடையை சரிசெய்து கொண்டெயிருக்கனும்.  அப்படி செய்யத் தவறினால், இவள் எல்லாம் ஒரு பெண்ணா?  என்கிறார்கள். தூங்கும் போது கூட, இழுத்து போர்த்திக்கொண்டுதான் தூங்கமுடியும். அதுவே ஆண், என் கைலி எங்கே போனால் எனக்கென்ன? என்று நிம்மதியாக தூங்குகிறான்.  

           பெண்கள் சகஜமாக ஆண்களிடம் பேசக்கூடாது,  சூர்யா அழகாக இருக்கார், என்று சொல்லக்கூடாது, தலை குனிந்துதான் நடக்கனும், கணவனை தவிர மற்ற ஆண்களை அண்ணா என்று தான் கூப்பிடனும், அதுவே ஆண்களுக்கு, பார்க்கிற பெண்கள் எல்லாமே தன் மனைவியாகத்தான் தெரியும். கணவன் எப்போது வேண்டுமானாலும் தன் மனைவியை அணைக்கலாம், அதையே மனைவி செய்யக்கூடாது. இப்படி பெண் மீது கம்பளிப் புழுவாக ஊரிக்கொண்டிருக்கிறான் ஆண்.
                                         
                                         3

     பெண் அழகை ரசிக்காத ஆண்களே கிடையாது. ஆண்கள் பாலக பருவத்திலிருந்து இளமை பருவத்தை அடையும் போது, பெண் மார்பையும், அவள் உடல் அழகையும் உற்றுநோக்க தொடங்குகிறான். திருமணம் ஆகாத ஒரு இளைஞன், எந்த பெண்ணை எப்படி பார்த்தாலும் தவறில்லை. அது அவனுக்குள் இருக்கும் ஹார்மோன் அவனை தூண்டுகிறது எனலாம்.

     அதுவே மணமானவர்களும், மதபோதகர்களும், ஏன் ஆசிரியர்களும் கூட பெண்களை கீழ்தனமாகத்தான் பார்கிறார்கள், அவர்களும் பாலியல் குற்றங்களில் பங்கு கொள்கிறார்கள் என்பது  ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.


    
    
     இப்படி நம் வாழ்வில் பல கட்டங்கள் இருக்கும் இல்லையா? அதில் ஏதாவது ஒரு கட்டத்தை நிறைவு செய்யாமல், நாம் அடுத்த கட்டத்திற்கு நாமாகவோ, அல்லது பிறர் கட்டாயத்தினாலோ, செல்ல நேர்ந்தால் நாம் நிறைவு பெறாத கட்டத்தையே நினைத்துக் கொண்டிருப்போம். அதுபோல இந்த நிறைவு பெறாத காமம், அதை பற்றியே அதிகம் சிந்திக்க வைக்கிறது. இந்த அளவு கடந்த காமசிந்தனை, காமகுற்றவாளியை உருவாக்குகிறது. இப்படி யாரும் மாறிவிடக்கூடாது என்பதற்க்காகவும், காமத்தை ஒரு ஒழுங்கு நெறிப்படுத்தவே, திருமணம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படை கோட்பாடே தனக்குள்  ஏற்ப்படும் காம இச்சைகளை, தன் துணையோடு  மட்டும்  பகிர்ந்துகொள்தல்.  இந்த வழக்கம் சரியாகத்தான் போய்கொண்டிருந்தது, ஆனால் ஏன் மீண்டும் பாலியல் கொடுமைகள் ஆரம்பித்தது? எப்போதிருந்து ஆரம்பித்தது?

     பெண்ணிற்க்கு எதிரான கொடுமைகள், காலம் காலமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் என்றைக்கு பெண் தன்னை கொடுமைப் படுத்துகிறார்கள் என்று உணர்ந்தாளோ,  என்றைக்கு  தனக்கும்  சமுதாயதில்  சம அங்கீகாரம் வேண்டும் என்று
நினைத்தாளோ, என்றைக்கு அவளுக்குள் சுதந்திர தாகம் ஏற்ப்பட்டதோ அன்றிலிருந்து இப்பிரச்சனை பன்மடங்கானது. எப்படி?
                           
     அந்த காலத்தில் கணவன் கூப்பிட்டால், உடனே மனைவி வந்து கூட படுத்துக்கனும். அதுவே இன்று கணவன், மனைவியால் உதாசீனப்படுத்தபடுகிறான். நான் இந்த குடும்பத்திற்க்காக மாடாக உழைக்கிறேன், நீ குழந்தை பெற்றுக்கொள்ள, குழந்தைக்கு பாடம் கற்றுக்கொடுக்க, உங்களை கோவிலுக்கு அழைத்துச் செல்ல, ஊர் சுற்றிக்காட்ட, ஆடம்பரபொருள் வாங்க, பாதுகாப்பிற்க்காக, மொத்ததில் பணம் சம்பாதிக்கும் ஒரு இயந்திரமாக உன்னோடு வாழவேண்டும், ஆனால் என் காமயிச்சையை தீர்த்து வைக்க உன்னால் முடியாது இல்லையா? என்று ஆண் வெறுப்படைகிறான். காமசிந்தனைகளில், செயல்களில் ஆண்கள் ஒரு கனிந்த மோரிஸ் பழம் மாதிரி, அதுவே பெண் நெற்றுத் தேங்காயைப் போல. வாழைத்தார் அருகே சென்று ஒரு பழத்தை தொட்டால் 2, 3 கீழே விழும். எடுத்து சாப்பிட்டால் ஒரு நிமிடத்தில் வயிறு நிறையும். ஆனால் தேங்காய் அப்படியா?

                                         4

     பெண்களுக்கு மூடு வருமா? என்பதே கேள்விக்குறிதான். இதில் சின்னச் சின்ன சச்சரவுகள் வந்துவிட்டால் அவ்வளவுதான், மனைவி ஒரு புடவை கேட்டு அதை கணவன்  வாங்கிதர  முடியாது  என்றால்,  இனிமேல் என் பக்கத்தில் வராதே  என்பாள்.
5 ரூபாய் ரப்பர் பேண்டு, தனக்கு கிடைக்கவில்லை என்றால், இன்றைக்கு கிடையாது என்பாள்.

     பெண்களைப் பொருத்தவரை உடலுறவு என்பது குழந்தை பெற்றுக்கொள்ள, கணவனுக்கு சந்தோசம் தர, ஏதொ ஒரு கடமைக்கே. அதையும் மீறி வற்ப்புறுத்தி சம்மதிக்க வைத்தால், அது ஒரு பிணத்தோடு உடலுறவு வைத்துக்கொண்டதற்க்கு சமம். அதில் ஒன்றுமே இருக்காது. மனைவி சமைக்கவில்லை என்றால், கடையில் போய் சாப்பிடலாம், மனைவி துவைக்கவில்லை என்றால், அதெல்லாம் ஒரு பெரிய வேலையே இல்லை. ஆனால் மனைவி ஒத்துலைக்கவில்லை என்றால், நீ எங்கே போய்வாய்?

     ஆண் உடலுறவில் கொண்ட தீராத ஆசை, விருப்பங்கள், நிறைவேறவில்லை என்றால், அது நாளடைவில் வெறுப்பு, விரக்தியாக ஒரு நடைப்பிணமாக ஆணை மாற்றி விடக்கூடிய வலிமை காமத்திற்க்கு உண்டு. தன் மனைவி மீது கொண்ட கோபம் பிறர் மனைவியின் அழகை ரசிக்க தூண்டுகிறது. ஆபாச படங்கள், கவர்ச்சி நடிகையின் நடனங்கள், காமகதைகள், கவர்ச்சி புத்தகங்கள், உள்ளாடை விளம்பரங்கள், என்று இப்படி தன் வாழ்நாளில் காமத்தைப் பற்றிய சிந்தனையிலேயே, பெரும் பகுதியை அர்ப்பனித்து விடுகிறான் ஆண். தன்னுடைய மனைவி இப்படி இருக்கனும், அப்படி இருக்கனும், என்று ஒவ்வொரு நாளும் ஏங்கியே சாகிறான்.
    
     மனைவி கேட்பது என்ன, கேட்காதது கூட வாங்கிதந்து, சந்தோசப்படுத்தி பார்க்க முன்வந்தாலும், மனைவியும் அதே அளவிக்கு கணவனுக்கு மகிழ்ச்சி தர முன்வருவது இல்லை. இதனால் தன் குழந்தைக்கு பாடம் கற்றுத்தரவோ, கூட விளையாடவோ, தன் வேலையில் கவனம் செலுத்தவோ, ஏன் வாழ்க்கையிலேயே விருப்பம் இல்லாமல் போகிறது. நான் எதற்க்காக என்னை வருத்திக்கொண்டு அதிகம் சம்பாதிக்கவேண்டும், அளவாக சம்பாதித்தால் போதுமானது, என்ற எண்ணம் உருவாகிறது. தன் நண்பர்களுடனே அதிக நேரத்தை செலவிடுகிறான்.

     வீடு என்பது தூங்கவும், காலையில் எழுந்தால் கக்கூஸ் போக, பல் தேய்க்க, குளிக்க, தன் ஆடைகளை மாற்றிக்கொள்ள, நேரத்திற்க்கு சாப்பிட மட்டுமே. இதற்க்கு ஒரு நல்ல ஓட்டலில் தங்கிக்கொள்ளலாம். தினமும் மனைவியிடம் திட்டு வாங்குவது மிச்சம். இந்த கணவன், மனைவி பிரச்சனைகளுக்கு காரணம், இரண்டு பேருடைய நோக்கங்களும் வேறுவேறாக இருப்பதுதான். ஆண் காமத்திற்க்கு முக்கியதுவம் அளிப்பவன். ஆனால் பெண்ணோ, பொருளீட்டளுக்கும், தன் சுயமரியாதைக்கும், சுதந்திரத்திற்க்கும், முக்கியதுவம் அளிப்பவளாக இருப்பாள்.

     பெண்களுக்கு மூடே வராது என்று நினைத்தேன், இல்லை அது தவறு. பெண்களுக்கும் மூடு வரும், அது என்றைக்கு வரும் என்றால்? கணவன் காலையில் பாய் சொல்லும்போது சாதாரணமாகத்தான் இருப்பாள், அதுவே மாலை வீடு திரும்பும் போது இது நம்ம வீடுதானா? என்ற சந்தேகத்தோடு உள்நுளைவான். வீடு சாம்ராணி புகையால் நிரம்பியிருக்கும், கினிமனி ஓசை ஒலிக்கும், சாமி படங்களுக்கு பூ போடப்பட்டிருக்கும், மனைவி வாங்க என்று நிரைந்த புன்னகையோடு வரவேற்ப்பாள். மஞ்சள் பூசி, தலைமுழுகி, பூ வைத்து, லேசான வாயில் சேலை கட்டியிருப்பாள்.

                                         5

     அன்று இரவு அவளே உணவு பரிமாறி, யாரும் பார்க்காத நேரத்தில் ஊட்டியும் விடுவாள். இன்றைக்கு என்ன ஏதோ ஒரு மார்கமா இருக்கியே? என்று கேட்டால், அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க, சும்மா சாமி கும்பிட்டேன் அவ்வளவுதான், என்பாள். என்னது சும்மா சாமி கும்பிட்டதுக்கே இவ்வளவா! இனிமேல் நீ தினமும் நல்லாவே கும்பிடு. சீப்போங்க. பிறகு அவளே அறையை தாளிடுவா, பக்கத்தில் வருவா, சிரிப்பா, கணவன் மடியில் அமர்வாள், நெற்றியில் முத்தமிடுவா, மூக்கை கிள்ளிவைப்பா, பிறகு முகத்தோடு முகமிழைத்து, இமைகள் துடிதுடிக்க, ................... அந்த நேரத்தில் தன் கணவன் காதை வருடிக்கொண்டே ஒரு கேள்வி கேட்பாளே!

     என்னங்க?  ம்? என்னாங்க? சொல்லுமா?  நாம! ம்? நாம தனிகுடித்தனம் போகலாமா? என்று. அதெல்லாம் முடியாது. அப்படியா? இனி இந்த ஜென்மத்தில் எங்கிட்ட வந்துறாதிங்க. என்பாள் மனைவி. அடிப்பாவி மவளே!

     இப்படி தங்கள் விருப்பங்கள், தேவைகளை தன் கணவனிடம் சொல்ல நினைத்த நாட்களில் மட்டும் தான் பெண்களுக்கு மூடு வரும். ஏன் இப்படி பெண்கள் தங்கள் கணவனை ஏற்க மறுக்கிறார்கள்? தான் ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக எப்படி ஒரு ஆண் ஆதங்கப்படுகிறானோ, அதே மாதிரி பெண்ணும் ஆதங்கப்படுகிறாள் எதற்க்கு? குடும்பத்தில் தன் சுயமரியாதையை இழந்தும், தன் பெற்றோர், உடன்பிறந்தவர்களை தரம்தாழ்திப் பேசியவர்களுக்கும், சேவகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், தான் இதிலிருந்து விடுபட முடியாததாலும், பெண்களுக்குள்ளும் பகை எரிந்து கொண்டுதான் இருக்கிறது. தன்னுடைய சுய விருப்பங்களை செயல்படுத்த, எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல், தவிக்கும் பெண்களால் எப்படி தங்கள் கணவனுடன் சிரித்து உறவுகொண்டாட முடியும்?

     அப்போது முதலில் பெண்களுக்கு ஒரு அமைதியான வாழ்க்கையை பெற்றுத் தந்துவிட்டால், மொத்த பிரச்சனையும் முடிவுக்கு வரும் இல்லையா? பெண்கள் சுயமரியாதைக்கு எதிராக செயல்படுபவர்கள் யார்? ஒரு குடும்பத்தில் ஒரு அம்மா, அப்பா, ஒரு பையன், ஒரு பொண்ணு என்று வாழ்கிறார்கள். இதில் பையனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், அந்த பெண்ணிற்க்கு திருமணம் முடிந்தால், தம் மருமகனுக்கு மரியாதை செய்வதையே, தங்கள் வாழ்நாள் வேலையாக கொண்டிருப்பார்கள்.

     உதாரணத்திற்க்கு என் வீட்டுக் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எங்க வீட்டில் அம்மா, அப்பா, அக்கா, நான். என் அம்மா, அக்காவின் திருமணத்திற்க்கு முன்பு வரை, தன் சாதியை பற்றி பெருமையாகவும், மற்ற சாதிக்காரர்களை தரம் தாழ்த்தியும் பேசுவாங்க. அப்படி என் அம்மா தரக்குறைவாக பேசிய அந்த சாதிக்கார பையன் தன் மகளை காதலித்து திருமணம் செய்யும்போது, அவர்கள் புகழ்பாடவும், அவர்களுக்கு சேவை செய்வதுமாக மாறிவிட்டாங்க. ஏனென்றால் மாப்பிள்ளை பல லட்சத்திற்க்கு அதிபதியாம். அப்போது இத்தனை நாளாக உன் சாதிப் பெருமையை பற்றிப் பேசிக்கொண்டிருந்தீர்களே அம்மா அது என்னாச்சு???
    
     இதுவே, நான் என் சொந்தத்தில் வறுமையில் வாடும், என் அத்தை மகளைத்தான் நிச்சயிக்கப்பட்டு, திருமணம் செய்திருக்கிறேன். அதற்க்கு என் அம்மா, சொந்த வீடு இருக்கென்று தெரிந்து என் மகனை வழைத்து போட்டாயோ? என்று என் மனைவியிடம் கேட்பது சரியா? நீங்க இதே கேள்வியை, உங்க மருமகனிடம் கேட்கமுடியுமா அம்மா?

   
                                         6
     என் அம்மா, பால்காரர் வந்துவிட்டார், பால்சாப்பிடுகிறாயா?, பால் கலக்கவா, இப்படி பால் என்ற வார்த்தையை தவறுதலாக உச்சரித்துவிட்டால், உடனே கண்ணத்தில் தட்டிக்கொண்டு, தன் காதை பிடித்து தோப்புக்கரணம் போட ஆரம்பித்துவிடுவார்கள். நீங்க யாராவது போய் என் அம்மாவிடம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் என்னம்மா சிறப்பு என்று கேட்டால், அதற்க்கு அவங்க சொல்வாங்க, மில்க்கோவா என்று. என் அம்மா நினைவிலிருந்தே பால் என்ற வார்த்தை அழிந்துவிட்டது. ஏன் தெரியுமா? அவங்க மருமகன் பெயர் பாலுவாம்.
    
     ஏனம்மா பார்வதி உனக்கு எவ்வளவு, எவ்வளவு, எவ்வளவு, எவ்வளவு, ஏத்தம் இருக்கனும்? மருமகன் பெயரை உச்சரிக்க பயந்து நடுங்குபவள், மருமகளை நாள் முழுவதும் தரம்தாழ்திப் பேசிக்கொண்டிருப்பதை, நான் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பேன் என்று நினைத்தாயோ? அம்மா.

     என்  அம்மா  என்  மனைவியை  தினமும்  தகாத வார்தைகளாலும், புரம்பேசியும்
காயப்படுத்துகிறார்கள்.  பொறுமை  இழந்த என் மனைவி என்னிடம் வந்து சொல்கிறாள்,
என்னங்க உங்கம்மா என்னை திட்டுவது மட்டுமில்லாமல், என் குடும்பத்தையும் அவதூறாக பேசுகிறார்கள் என்று. நான் எங்கம்மாவிடம் போய் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால், அதற்க்கு அவங்க, மகனே உன்னை 9 மாதம் சுமந்து பெற்றவள் நான், உன்னை மில்க்ஊட்டி, சிராட்டி, படிக்கவைத்து, பாடுபட்டு வளர்த்து ஆளாக்கியிருக்கேன். அதனால் உன் மனைவியை கண்டிக்கும் முழுஉரிமை எனக்கு உண்டு, இதைப்போய் கேட்க வந்துட்டான், என்கிறார்கள்.

      அதற்க்கும், இதற்க்கும் என்ன சம்பந்தம்? எனக்கு புரியவில்லை! அம்மா. நீங்க என்னை 10 ஆண்டுகள் சுமந்து பெற்றவளாகவே இருந்தாலும், 18 ஆண்டுகள் பாலுட்டி வளர்த்தவளாகவே இருந்தாலும், அதற்க்காக என் மனைவியைத் தரம்தாழ்திப் பேசுவதக்கான உரிமையை, உங்களுக்கு தர முடியாதம்மா முடியாது. என் மனைவி நேற்று வந்தவளாகவே இருந்தாலும், நாளை வரப்போகிறவளாகவே இருந்தாலும் அல்லது வந்து 10 ஆண்டுகள் ஆனாலும் என் மனைவி என் மனைவி தானே. தரம் மங்கிப்போவதற்க்கோ, இதை போட்டுவிட்டு வேறொன்றை எடுத்துக்கொள்ளவோ என் மனைவி ஒன்றும் ஜடப்பொருள் அல்லவே.

     என் அம்மா சொல்வாங்க, நான் ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருந்தாலும், அந்த வீட்டில் யாரெனும் தவறு செய்தால் நான் தட்டிக்கேட்பேன். அதுபோல, உன் மனைவி செய்யும் தவறுகளை சொல்வதில் என்ன தவறு? என்று. நல்லதுதான், அப்போது உன் மருமகன் செய்த தவறுகளை ஏனம்மா சுட்டிக்காட்டவில்லை? இரவு    11 மணிக்கு சாப்பிடுகிறார், டி.வி சத்தத்தை அதிகமாக வைக்கிறார், என்று எத்தனை நாள் என்னிடம் புளம்பியிருப்பாய் அம்மா? ஒரு நாள், ஒருநாளாவது உன் மருமகனை நிற்க்க வைத்து கேள்வி கேட்க முடியுமா?, அவர் காது படும்படி ஒரு வார்த்தை தவறாக பேசமுடியுமா? அம்மா. முடியாதுதானே? பிறகு ஏன் மருமகளை மட்டும் அவதூராக பேசுகிறீர்கள்?
    
     நான் 4 வயதில் பள்ளிக்குச் செல்கையில் நீங்களும் என்னோடு வந்து, என் அருகில் அமர்ந்து பாடம் படிக்கவில்லை, நான் 14 வயதில் வேலைக்குச் செல்கையில் நீங்களும்  என்னோடு வேலை செய்யவில்லை, நான் கிரிகெட் விளையடும் போது, நீங்க ஓடி வந்து பந்து போடவில்லை, இது எதுவுமே உங்களால் முடியாதபோது, எனக்கு திருமணம் முடிந்து என் வாழ்க்கையை துவங்கிய பின்னரும், என்னோடு பொழுதைக்கழிக்க விரும்புவது சரிதானா?  
                                         7

     என்ன வசியம் செய்தாளோ தெரியவில்லை, வெட்கமே இல்லாமல் இரவு         9 மணிக்கே மனைவி பின்னாடியே போய் கதவை தாழிட்டுக்கொள்கிறானே?, என்று உறக்க புலம்புவது சரிதானா? காமசிந்தனையிலேயே ஊரி வளர்ந்த எனக்கு ஒரு அழகான பெண்ணை கட்டிவைத்தால் இரவு 9 மணி என்ன? பகல் 9 மணிக்கு கூட கதவை சாத்திக்கொள்வேன். அதிலென்ன தவறு? அம்மா நான் திருமணத்திற்க்கு முன்போ அல்லது பிறர் மனைவியுடனோ தொடர்பு வைத்துக்கொண்டேனா? சொல்லுங்க? என் மனைவியுடன், என் அறையில், நான் எப்போ படுத்தால், அதில் யாருக்கு என்ன எரிச்சல்? இதற்க்கு நான் ஏன் வெட்க்கப்படனும்?

     இவ்வளவு அகங்காரத்தை என் மனைவி மீது வைதிருப்பீர்கலேயானால், இவ்வளவு அன்பை என் மீது வைதிருப்பீர்கலேயானால் ஏன் அம்மா என்னை வேறொரு பெண்ணிற்க்கு திருமணம் முடிக்க வேண்டும்? பேசாமல் நீங்களே என்னை திருமணம் செய்திருக்கலாமே. அல்லது நான் குழந்தையாக இருக்கும்போதெ, என் ஆண் உறுப்பை அறுத்து காகத்திற்க்கு வீசியிருந்தால், காலம் முழுவதும் உங்கள் காலடியிலே கிடந்திருப்பேனே அம்மா.

     பெற்ற தாய்க்கு தன் குழந்தையை குப்பையில் வீசவோ, விசம் கொடுத்து கொல்வதற்க்கோ, தன் குழந்தை வாழ்க்கையை நாசம் செய்வதற்க்கோ எந்த உரிமையும் கிடையாது. இதில் மற்றவர் குழந்தையை கொடுமைப்படுத்த உங்களுக்கு என்னம்மா உரிமை இருக்கிறது? என் மனைவி உங்க சோற்றில் மண்ணைப் போட்டாளா? உங்க சொத்தில் பங்கு கேட்டாளா? அல்லது வேறு யாருக்காவது ஏதேனும் தீங்கு செய்தாளா? அவள் செய்த உண்மையான குற்றம் தான் என்ன? ஒரு வேளை என் மனைவி 200 பவுன் நகையும், 100 ஏக்கர் நிலத்திற்க்கும் சொந்தக்காரியாக இருந்தால், அப்போது என்ன செய்திருப்பீர்கள்? யாருடைய அன்பும் தாயுடைய அன்பைப் போல் இருப்பதில்லை. ஆனால் சில சமயம் அதுவும் காணாமல் போகிறது.

     பணம் படைத்தவன் காலிலே வீழ்வதும், அது இல்லாதவனை தன் காலிலே விழவைப்பதும் தானா நாகரிகம்? இதைத்தான் இவ்வளவு காலம் வாழ்ந்து கற்றுக்கொண்டீர்களா? இதைத்தான் நானும் கடைபிடிக்க வேண்டுமா? இதைத்தான் என் சந்ததிகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டுமா? மேம்பட்ட நாகரீகத்தை உருவாக்க, வேறு வழியே கிடையாதா? அம்மா என்ற வார்த்தைக்கான அர்த்தம்தான் என்ன?

* குழந்தை பெற்றுக்கொள்வதால் மட்டும்தான், ஒரு பெண் தாய்மை அடைய முடியுமா?
* குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்ணை, அம்மா என்று அழைக்க முடியாதா?
* அப்போது திருமணமும் ஆகாமல், குழந்தையும் பெறாமல், வாழ்ந்த ஒரு பெண்ணை அன்னை என்று அழைத்து, அவள் கைகளிலே நோபல் பரிசையும் கொடுத்தது ஏனோ?
* தாய்மை அடைவது தாய்மையா?
(அதாவது குழந்தை பெறுவது)
* தாய்மை என்ற உணர்வை அடைவது தாய்மையா?
* தகாத உறவால் தனக்கு பிறந்த குழந்தையை, குப்பையில் வீசிச்செல்பவளைக் கண்டால், அம்மா என்று அழைக்க முடியுமா?
* தன் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த, தன் மகனை வெட்டிக்கூறு போட்டவளை கண்டால், அம்மா என்று அழைக்க முடியுமா?
* அப்போது யார்தான் அந்த உண்மையான அம்மா?
* தாய்மை என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம்தான் என்ன?
* ஏன் மருமகளை மட்டும் ஏற்க்க மறுக்கிறார்கள்?

                                         8

     உறவுகளுக்குள் தங்களுக்கான உரிமைகளை, பங்கிட்டுக் கொள்வதில்தான் சிக்கல். யார் யாருக்கு சொந்தம்? பெண் பிறந்தால், குழந்தை பெற்றவர்களுக்கு சொந்தம். அந்த குழந்தையை வளர்த்து திருமணம் முடித்தால் அவள், கணவன் வீட்டிலுள்ள அனைவருக்கும் சொந்தம். அவர்கள் தங்களுக்கான வேலையைச் செய்ய கட்டளையிட்டுக் கொள்ளலாம். அதுவே ஆண் பிறந்தால், குழந்தை பெற்றவர்களுக்கு சொந்தம். இந்த குழந்தையை வளர்த்து திருமணம் முடித்தால் இவன், மனைவிக்கு கூட சொந்தமாவதில்லை.      
    
     அதாவது, நான் எழுதுகின்ற பேனா எனக்கு சொந்தம். ஆனால் பேனா என்னை சொந்தம் என்று சொல்லமுடியுமா? அதுபோல மனைவி என்பவளும் ஒரு ஜடப் பொருளே, என்ற கருத்தை நன்கு பற்றிக்கொண்டு நிற்க்கிறது சமுதாயம். இதிலிருந்து எப்படி பெண்ணை விடுவிப்பது? பெண்ணிற்க்கும் உணர்வுகள் உண்டு, என்பதை எப்படி நிரூபிப்பது?

1) மனிதனின் வாழ்க்கையின் துவக்கம் என்று எதைச் சொல்கிறோம்?
* குழந்தை பிறந்ததையா?
* பள்ளிக்கு செல்வதையா?
* வேலைக்கு செல்வதையா? * அல்லது வேறு எதை?

2) மனிதன் தன் வாழ்வில் புதிதாக தனக்கு கிடைக்கப்போகும், எந்த ஒரு
உறவிற்க்காக அல்லது ஒரே ஒரு நபருக்காக, விழா எடுத்து சிறப்பிக்கிறான்?
* தாய்க்கு தன் குழந்தை கிடைப்பதையா?
* தந்தைக்கு தன் மகன் கிடைப்பதையா?
* அக்காவிற்க்கு ஒரு தங்கை?
* மாணவனுக்கு ஒரு நல்ல ஆசிரியர்?  * அல்லது வேறு யார்?

3) எல்லைகளே இல்லாத அபரிவிதமான அற்ப்புதமான ஒரு உறவு என்று நாம்
எதை குறிப்பிடலாம்?
* தாய்க்கும் தன் குழந்தைக்கும் இருக்கின்ற உறவு?
* அப்பா மகன்?
* அம்மா மகள்?
* அண்ணன் தம்பி?
* குரு சீடன்?
* ஓரினச்சேர்க்கை?  * அல்லது வேறு எதை?
  
     இந்த 3 கேள்விகளுக்கும், எல்லோருக்குமே பதில் தெரிந்தாலும் கூட, யாரும் அதற்க்கான மரியாதையை, முக்கியத்துவத்தை உணர்ந்தார்ப் போல் இல்லை. கலாச்சாரம் என்ற போர்வையை போர்திக்கொண்டு, நாகரீகமாக, எல்லோருக்கும் சம உரிமைகள், சம உணர்வுகள் உண்டு என்பதை ஏற்க்க மறுக்கிறோம். அதற்க்கு என்ன செய்யலாம்? கலாச்சாரத்தில் நல்ல மாற்றங்களை கொண்டுவர வேண்டும். அதற்க்கு முதலில் கலாச்சாரம், என்ற வார்த்தைக்கான அர்த்தம் தெரியனும்.

     ஆதி காலத்தில் இருந்தே நெருப்பை கண்டால், எல்லா மிருகங்களும் பயந்து ஓடும். ஆனால் மனிதன் மட்டும் நெருப்பை கையாளவும், தனக்கு வேண்டிய இடத்தில் அதை உருவாக்கிக்கொள்வதற்க்கும் கற்றுக்கொண்டான். ஆரம்பதில் விறகு குவியலாக பற்றவைத்து, அதைச் சுற்றி படுத்து உறங்க தொடங்கினர்.

                                         9

     பிறகு அதையே வெளிச்சத்திற்காக தீப்பந்தம் தயாரித்தனர், பிறகு எண்ணை விளக்குகளை தயாரித்தனர், பிறகு லாந்தர் விளக்கு தயாரித்தனர். அதன் பிறகுதான் பெட்ரோ மேக்ஸ். இந்த வார்த்தயை கேட்டாலே, மக்கள் ஏழு ஊர் தாண்டி ஜமீன் வீட்டு திருமணங்களை வேடிக்கை பார்க்க வந்துவிடுவார்கள். விடியும் வரை அந்த பிரகாசமான ஒளியை பார்த்தபடியே இருப்பாங்க. அதன் பிறகு மின்சாரம் கண்டுபிடித்து சில காலங்களுக்கு பிறகு குண்டு பல்ப் கண்டுபிடித்தார்கள்.

     மனிதன் கண்டுபிடித்ததிலேயே, அதிக மதிப்பை பெற்றது இந்த குண்டு பல்ப். பரம்வீர்ச்சக்ரா விருது பெற்றவர், நம் பக்கத்து வீட்டில் குடியிருந்தால், நாம் அவரை எப்படி ஆச்சர்யமாக பார்போமோ, அப்படி அந்த காலத்தில் தன் வீட்டில் குண்டு பல்ப் மாட்டியவரை பார்த்து மக்கள் வியந்தனர். ஆனால் இப்போது யாரேனும் வீட்டில் குண்டு பல்ப் மாட்டியிருந்தால் குண்டர் சட்டத்தில் போடுவோம், என்று விளம்பரம் செய்கிறது மின்வாரியம். என்ன ஒரு ஆச்சர்யம்!!!

     அதன் பிறகு, வாழைத்தண்டு பல்ப். இது பகல் வெளிச்சத்தை போன்றே வெண்மையாக இருப்பதால், மக்கள் இதையே அதிகம் விரும்பினர். கோவில் விசேசங்களில் இந்த பல்புகளை பார்ப்பதற்க்கென்றே கூட்டம் அலைமோதும், இதற்க்கும் ஒரு தனி மரியாதை இருந்தது. வாழைத்தண்டு பல்ப் என்றால் என்னவென்பதை உங்களால் யூகிக்க முடிந்தாலும், அதன் பெருமையை, உங்க தத்தா, பாட்டியை கேட்டால்தான் தெரியும். அதன் பிறகு CFL பல்ப். சாதாரண பல்ப் 40W மின்சாரத்தில் தருகின்ற வெளிச்சத்தை CFL பல்ப் 15W மின்சாரத்திலே தரவல்லது. இது ஒரு சிறந்த பல்ப், எல்லோரும் வாங்கி வீட்டில் மாட்டிக்கோங்கோ, என்று அரசாங்கம் பரிந்துரைக்கிறது. அடுத்தபடியாக L.E.D லைட். இது ஒரு அடேங்கப்பா லைட். இது கீழே விழுந்தாலும் உடையாது, பீஸ் போகாது, தரம் மங்காத தலைசிறந்த லைட்.
  
     உலகத்திலேயே L.E.D லைட் தான்  மிகச்சிறந்தது, இதை விட ஒரு சிறப்பான ஒரு லைட் கிடையாது, என்று இன்றைக்கு சொல்லலாம், ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு சொல்லமுடியுமா?, 100 ஆண்டுகளுக்கு பிறகு சொல்லமுடியுமா? முடியாது. ஏனென்றால், இதை விட பிரம்மாண்டமான ஒளி விளக்குகளை, நாம் உருவாக்கிக் கொண்டே இருப்போம். இதுதான் கடைசி செல்போன், இதுதான் கடைசி மாடல் டீ.வி, இதுதான் கடைசி பல் தேய்க்கும் பிரஸ், என்று உங்களால் எதையாவது ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியுமா? ஒவ்வொன்றையும் எளிமைப்படுத்தி, முன்பை விட சிறப்பாக செயல்படக் கூடியதாக உருவாக்குகிறோம். அல்லது உருவாக்க முயற்ச்சிக்கிறோம்.

     அதுபோல கருப்பு, வெள்ளை டீ.வியை இப்போது யாரும் வாங்கி தன் வீட்டில் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை, குண்டு பல்ப்பை இப்போது யாரும் தன் வீட்டில் மாட்டிக்கொள்ள விரும்புவதில்லை. என்ன இவன் கலாச்சாரத்தை பற்றித்தானே சொல்லிக்கொண்டிருந்தான்? திடீரென பல்பு கதையைச் சொல்கிறானே? என்று யோசிக்கிறீர்களா?, இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

     கலாச்சாரத்திற்க்கும், நாகரீகத்திற்க்கும் என்ன வித்யாசம்?

* நம்முடைய முன்னோர்களின் பழக்க வழக்கங்களை, அப்படியே நாமும் பின்பற்றி நடப்பது கலாச்சாரம்.
* நம்முடைய முன்னோர்களின் பழக்க வழக்கங்களில் உள்ள தவறுகளை, திருத்திக் கொண்டு நடப்பது நாகரீகம். 

                                         10
     கலாச்சாரம் பல வகைப்படும். உணவு கலாச்சாரம், உடை கலாச்சாரம், உறவுமுறை கலாச்சாரம், மேற்க்கத்திய கலாச்சாரம், பண்டைய கலாச்சாரம், என்று பல. இதில் உறவுமுறை கலாச்சாரத்தை பார்ப்போம், ஆதிகாலத்தில் யார் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம். அதன் பிறகு, அதிக பலம் கொண்டவன் அதிக துணைகளை வைத்துக்கொள்வது பெருமையாக பேசப்பட்டது. அதன் பிறகு, எல்லா ஆண்களும் ஒன்றிற்க்கு மேற்ப்பட்ட துணையை வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு, வசதி படைத்தவன் வைப்பாட்டி வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு, தனக்கு மச்சினி இருந்தால் அவளையும் வைத்துக்கொள்ளலாம்.

    அதன் பிறகு, குழந்தை திருமணம். இதைத்தான் மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். ஆனால் இப்போது யாராவது தன் குழந்தைக்கு திருமணம் செய்தால் குண்டர் சட்டம் பாயும். அதன் பிறகு, கணவன் இறந்தால் மனைவியையும் அவனோடே அனுப்பிவைப்பர். அவள் இனி வாழக்கூடாது. அதன் பிறகு, கணவன் இறந்தால் மனைவிக்கு மொட்டையடித்து, வீட்டின் மூலையில் அமரச்செய்வர். அதன் பிறகுதான், ஒருவனுக்கு ஒருத்தி. தன் துணையை இழந்துவிட்டால் தனக்கு பிடித்த இன்னொருவருடன் மீண்டும் வாழ்க்கையை துவங்கலாம், என்ற ஒரு நாகரீகமான வாழ்க்கை முறை பிறந்தது. ஆக இந்த ஒருவனுக்கு ஒருத்தி, என்ற வாழ்க்கை முறைதான் மிகச்சிறந்தது.
    
     இப்போது, இந்த இரண்டு உதாரணங்களையும் ஒன்றாக இணைத்து பல கேள்விகள்
கேட்கலாம். எப்படி இதுதான் கடைசி மாடல் செல்போன், என்று நம்மால் ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியவில்லையோ, அதுபோல இதுதான் கடைசி வாழ்க்கைமுறை, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் முறைதான், மிகச்சிறந்தது என்று எப்படி சொல்லமுடியும்? அப்படி சொல்லிவிட்டால், நம் மண்டையில் மசால் முடிந்துவிட்டது என்றுதானே அர்த்தம்? எப்படி நேற்றைய கலாச்சாரம் இன்றைக்கு கேவலமாகத் தெரிகிறதோ? அதுபோல இன்றைய கலாச்சாரம் நாளைக்கு கேவலமாகத் தெரியலாம் இல்லையா?

     அப்போது, இன்றைய வாழ்க்கை முறையில் உள்ள தவறுகளை திருத்தி, எளிமைப்படுத்தி, மேலும் சிறப்பாக வாழும் ஒரு வாழ்க்கைமுறையை, நாம் அடுத்த தலை முறையினருக்கு, கற்றுத்தர வேண்டியது நம்முடைய கடமைதானே? ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையில், இருபாலருக்கும் சம உரிமை, சம உணர்வு, சம சுதந்திரம், சம வாய்ப்பு, சம அறிவு உண்டு, என்று சமுதாயம் ஏற்றுக்கொள்கிறதா? இல்லை. பெண்களால் தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை வாழமுடிகிறதா? இல்லை. பிறகெப்படி ஐயா! இது மேம்பட்ட கலாச்சாரம் என்று சொல்லிக்கொள்ள முடியும்? இதை சரி செய்வது எப்படி?

     பெண்களை மூன்று விதமான கொடுக்குகள், மாறி, மாறி அவர்கள் வாழ்நாள் முழுவதும் கொட்டிக்கொண்டே இருக்கிறது. முதலாவது இயற்க்கை: 1) மாதவிடாய். இது ஆரம்பித்ததிலிருந்தே மாதாமாதம், தன் பிறப்புறுப்பை, சம்மட்டியால் யாரோ அடிப்பதை போன்ற வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும். 2) தாய்மை. இது உச்சக்கட்ட மரண வேதனை. 3) மாதவிடாய் நிற்க்கும் காலம். இதில் அளவு கடந்த மன அழுத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.                       
                                    
                                         11
     இரண்டாவது ஆண்: எப்படி பீடி, சிகரெட், கோட்டர் அடித்தால் போதை ஏறுகிறதோ அதுபோல, பெண்ணும் ஒரு போதைப் பொருள்தான், அதற்க்கு உணர்வுகள் கிடையாது, என்று வாதாடுபவன்தான் ஆண். இருந்தும் ஆணிடமிருந்து விடுதலை பெறுவது மிக சுலபம்.

     ஆனால் மூன்றாவதாக உள்ள, அதிவிஷம் கொண்ட கொடுக்கு யார் கைகளில் உள்ளது தெரியுமா? அதுவும் ஒரு பெண்ணிடம்!. அவள் பெயர் தான், மாமியார். மாமியாரை வழிக்கு கொண்டுவருவது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்க்கு அதிபயங்கர ஆராய்ச்சி செய்தாகனும். மாமியாருக்கு சவக்குழி தோண்டுவதைப் பற்றியது இல்லை என் முயற்சி. மாமியாரையும், மருமகளையும் கைகோர்த்தபடி திரையறங்கத்திற்க்கு செல்ல வைப்பதற்க்கான ஒரு முயற்ச்சி, விவாகரத்து பெற்றவர்களும், அதை பெறவேண்டும் என்று துடிப்பவர்களும், கண்ணீர் மல்க தன் துணையை கட்டித் தழுவச் செய்வதற்கான ஒரு முயற்சி, காண்டோம் விற்ப்பனையில் கலைகட்டச் செய்வதற்கான ஒரு முயற்சி.

     ஐயையோ! என்று யாரும் சிரித்துக்கொண்டோ, கோபத்திலோ படித்தால், ஒன்றுமே புரியாது. சிறிது நேரம் இதை மூடி வைத்துவிட்டு, உங்க பக்கத்தில் தண்ணீர் வைத்திருந்தால் அதை கொஞ்சம் குடித்துவிட்டு, ஜன்னலை சற்று வேடிக்கை பாருங்க, மனதை அமைதியாக்கிக்கொண்டு, பின் மீண்டும் நிதானமாக படிக்கவும். பக்கம் எண் 12.

      நான் முன்னமே கூரியதைப் போல, உறவுகளுக்குள் தங்களுக்கான உரிமைகளை பங்கிட்டுக் கொள்வதில்தான் சிக்கல். யார் யாருக்கு சொந்தாம்? பெண்ணிற்க்கு திருமணம் முடிந்தால் அவள், கணவனுக்கு சொந்தம். அதுவே ஆணுக்கு திருமணம் முடிந்தால் அவன், மனைவிக்கு சொந்தமா? இல்லை அவன் அம்மாவிற்க்குத்தான், எப்போதும் சொந்தமா? இது என் பையன், இது என் புருஷன், இல்லை இது என் பையந்தான், இல்லவேயில்லை இது என் புருஷந்தான். ஐய்யகோ ராமா, கிரிஷ்னா நீ எங்கப்பா இருக்கே? தயவுசெய்து கொஞ்சம் கீழ் இறங்கி வாயேம்ப்பா. என்று ஆண்களை தலையை பற்றிக்கொண்டு காசிக்கே ஓட வைப்பர் இந்த மாமியாரும், மருமகளும்.

     யார் யாருக்கு சொந்தம்? என்ற கேள்விக்கு பதில் தெரியவேண்டும் என்றால், முதலில் நாம் எதற்க்காக பிறந்தோம்? என்ற கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கனும்.

* நான் எதற்க்காக பள்ளிக்குச் செல்கிறேன்?

* நான் எதற்க்காக வேலைக்கு செல்கிறேன்?

* நான் எதற்க்காக திருமணம் செய்கிறேன்?

* நான் எதற்க்காக குழந்தை பெற்றுக்கொள்கிறேன்?

* நான் எதற்க்காக உயிர் வாழ்கிறேன்?

* நான் எதற்க்காக இறக்கிறேன்?

     முதலில் நான் எதற்க்காக பிறந்தேன்? என்ற கேள்விக்கான சரியான பதில் தெரியாமல், நம்மால் வேறு எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. இது ஒரு சிக்கலான கேள்வி, அதற்கான பதிலும் அதுபோலவே இருக்கும்.

        
                                         12
    
     இதைப் போன்றே, நான் எப்படி பிறந்தேன்? என்ற கேள்வி, குவின்டிலியன் டாலர் மதிப்பு வாய்ந்தது. கோடிக்கணக்கான பணம் செலவு செய்தும், லட்சக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேடியும், நூற்றுக்கணக்கான தத்துவ மேதைகள், இதைப் பற்றி புத்தகங்கள் எழுதியும் இன்னும் கிடைக்கவில்லை, இந்த கேள்விக்கான அதியற்ப்புதமான பதில். உயிர் எப்படி உருவானது? என்று கண்டுபிடித்தால்தான், நாம் வேற்றுகிரகத்தில் புதிதாக உயிர்களை உருவாக்க முடியும், நாமும் அங்கு குடிபெயர முடியும். இல்லையேல் நாம் இந்த பூமியிலேயே மடிந்து போவோம். அதுபோல நாம் எதற்க்காக பிறந்திருக்கிறோம்? என்ற கேள்விக்கான பதில், நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்றால், அதை தேடிச் செல்வதிலும் ஒரு சுவாரஸ்யம்தான்.

     உயிரினங்கள் எல்லாமே தகவல்களின் தொகுப்புகள்தான். தாய்தந்தை தனக்கு கொடுத்த தகவல்களை, தன் அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கும் ஒரு ஊடகமாக உயிர்கள் செயல்படுகின்றன. என்னென்ன தகவல்கள்? உணவைத் தேடுவது, தன்னை தற்க்காத்துக் கொள்வது, தன் சந்ததிகளை உருவாக்குவது. என பல தகவல்களை உள்ளடக்கியதுதான் மரபணு.

     வைரஸ் தன் மரபணுவில் 7 அல்லது 8 தகவல்களை கொண்டிருக்கும்.  வைரஸ் ஒரு விசித்திரமான உயிரினம். அதில் ஒன்றை எடுத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால், அது எவ்வளவு காலம் ஆனாலும் அப்படியே இருக்கும். அதை எடுத்து மீண்டும் ஒரு உடலில் செலுத்தினால், அது தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொண்டே இருக்கும். உயிரினத்திற்க்கும், ஜடப்பொருளுக்கும் இடைப்பட்ட ஒரு உயிர்ப்பொருள் வைரஸ். அதுபோல மனிதனும் ஒரு விசித்திரமான உயிரினம். மனிதனின் மரபணுவில் கிட்டத்தட்ட 25,000 தகவல்கள் பதிவாகியிருக்கும். ஒரு உயிரினம் தன் வாழ்நாளில் என்னென்ன செயல்களை செய்கிறது, என்னென்ன குணங்களைப் பெற்றிருக்கிறது, என்ற குறிப்பை எழுதினால், அதுதான் அந்த உயிரினத்தின் மரபணு தகவல்.

     உதாரணத்திற்க்கு அமெரிக்காவில் ஒரு பூனை குட்டி போடுகிறது. அந்த குட்டியை உடனே தமிழ்நாட்டிற்க்கு கொண்டுவந்து பால் கொடுத்தாலும், அது மியாவ் என்றுதான் கத்தும். வளர்ந்ததும் எலியைப் பார்த்தால், துரத்திக்கொண்டு ஓடும். ஒரு குட்டி பூனையின் நான்கு கால்களையும் தலைகீழாக பிடித்து, நிலத்திற்க்கு ஒரு அடி உயரத்தில் இருந்து அதை விடுவித்தால், ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் அதன் நான்கு கால்களும் நிலத்தை தொடும், பூனையும் நேராக நிற்க்கும். இதே சோதனையை நாய்க்குட்டிக்கு செய்து பார்த்தால், அது தன் முதுகெழும்பில் அடிபட்டதால் கத்த ஆரம்பிக்கும். இப்படி ஒவ்வொரு உயிரினமும் அடிப்படை தகவல்களில், சில விசித்திர குணங்களையும் பெற்றிருக்கும். 

     பூனைக்குட்டி தன் தாய்தந்தையை பார்க்காவிட்டாலும், யாருமே தனக்கு எதையுமே கற்றுத்தர வில்லை என்றாலும், தன் தாய்தந்தை என்ன செயல்களை செய்ததோ, அதையே இந்த பூனைக் குட்டியும் மிக துள்ளியமாக செய்யும். மற்ற எல்லா உயிர்களுமே இப்படித்தான் இருக்கும். ஆனால் மனிதன் இதிலிருந்து மாறுபட்டவன். தமிழ்நாட்டில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஒரு பரம்பரையில் பிறந்த ஒரு தமிழ்க் குழந்தையை அமெரிக்காவில் வளர்த்தால், அது அம்மா என்று சொல்லுமா? மற்ற உயிரினங்கள் தங்கள் மரபணுவில் பதிவாகியுள்ள தகவல்களை மட்டுமே பின்பற்றி வாழும். ஆனால் மனிதன் தன் மரபணுவில் புதிதாக தகவல்களை பதிக்கவும், தனக்கு வேண்டாத தகவல்களை அழிக்கவும் முடியும்.  

                                         13


     மரபணுவில் பலவகையான தகவல்கள் பதிவாகியிருக்கும்.
குழந்தை
பருவத்தில்
பின்பற்ற
வேண்டிய
தகவல்
இளமை
பருவத்தில்
பின்பற்ற
வேண்டிய
தகவல்
நடுத்தர
பருவத்தில்
பின்பற்ற
வேண்டிய
தகவல்
முதுமை
பருவத்தில்
பின்பற்ற
வேண்டிய
தகவல்
ஆண்
உயிரினம்
பின்பற்ற
வேண்டிய
தகவல்
பெண்
உயிரினம்
பின்பற்ற
வேண்டிய
தகவல்
ஒரு
உயிரினமாக
இருந்தால், அது
பின்பற்ற
வேண்டிய
தகவல்
    
     இப்படி பல வகையான தலைப்புகளில், பலநூறு வகையான தகவல்கள் அதன் கீழே பதியப்பெறும். எந்த உயிரினம், எந்த பருவத்தில், எந்த தகவலை பின்பற்ற வேண்டும், என்ற குறிப்பை உள்ளடக்கியதுதான் மரபணு. ஒவ்வொரு உயிரினமும் அது பிறப்பதற்க்கு முன்பாகவே அதன் மரபணுவில் அதற்க்கான எல்லா தகவல்களும் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும்.

     உதாரணத்திற்க்கு 2 வயசு பையனை கடைத்தெரு வழியாக அழைத்துச் சென்றால், அவன் எந்த கடையில் எந்த பொம்மை இருக்கு? என்று வேடிக்கை பார்த்தபடி வருவான். அதுவே, 20 வயசு பையன் அதே கடைத்தெரு வழியாகச் சென்றால், அவன் எந்த கடையில் எந்த பெண் இருக்கிறாள், என்று பார்த்தபடி செல்வான். 2 வயசு பையன் அழகான பெண்களை ரசிக்க முடியாது. 20 வயசு பையன் கையில் யானை பொம்மையை கொடுத்தால், அவன் அதை வைத்து விளையாட முடியாது. மரபணுவைப் பற்றிய மேம்போக்கான விபரங்களை புரிந்துகொள்வதே கஷ்டம். இதில் இன்னும் சற்று ஆழம் சென்று பார்த்தால் தலைசுற்றும்.

     மரணுவை ஒரு புத்தகம் என்று வைத்துக்கொள்வோம். மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தங்கள் தகவல்களை மாற்றி எழுத முடியாதபடி அதன் பக்கங்கள் அமைந்திருக்கும். ஆனால் மனிதனுக்கு தங்கள் தகவல்களை மாற்றி எழுத முடியாதபடி  சில பக்கங்களும், தங்கள் விருப்பத்திற்க்கு தகவல்களை எழுதிக்கொள்ள சில பக்கங்களும் அமைந்திருக்கும். உதாரணத்திற்க்கு என் கை விரலை நான் எப்படி வேண்டுமானாலும் அசைக்கலாம், மடக்கலாம், நீட்டலாம். அதனால் என் கை விரல் என் முழு கட்டுப்பாட்டில்தான், இருக்கிறது என்று சொல்லமுடியாது. ஏனென்றால், அதே விரலை நீட்டி அதன் நுனியில் இருக்கும் நகத்தை பார்த்து, ஏய் நீ வளராதே! என்று சொன்னால் அது கேட்குமா? இல்லை, நான் நாளை காலை எழுந்து பார்க்கும் போது நீ 3 ன்ச் வளர்ந்திருக்க வேண்டும், என்று சொன்னால் அது கேட்குமா?
    
     நடைப்பயணத்தில் நம்முடைய கால்கள் எங்கு நிற்க்க வேண்டும், என்று கட்டளையிடலாம், ஆனால் வாழ்க்கை பயணத்தில் நம்முடைய இதயம் எங்கு நிற்க்க வேண்டும், என்று கட்டளையிட முடியாது. இப்படி நாம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை, என்பதற்க்கு பல உதாரணம் சொல்லலாம். நான் இயங்குகிறேனா? இயக்கப்படுகிறேனா? நான் என் சுயகட்டுப்பாட்டில் வாழ்கிறேன் என்றால், என்னுடைய வளர்ச்சிதை மாற்றங்களை ஏன் என்னால் கட்டுப்படுத்த முடிவதில்லை? நான் குழந்தையாக இருந்த போது என் பெற்றோர் கட்டுப்பாட்டில் இருந்தேன், நான் வளர்ந்த பிறகு என் வாழ்க்கையை நான்தான் தீர்மானித்தேன், என்று சொல்வது சரிதானா?


                                         14

     நான் எப்படி பிறக்கனும், எப்படி அழனும், எப்படி விளையாடனும், எப்படி பெண்களை சைட் அடிக்கனும், எப்படி என் துணையோடு இணையனும், எப்படி குடும்பத்தை நிர்வகிக்கனும், எப்படி ஓய்வு பெறனும், என்ற எல்லா தகவல்களையும் புரோகிராம் செய்யப்பட்ட, ஒரு ரோபோ தான் நானா? அப்போது எனக்குள் நான் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை, நான் எங்கே போய் தேடுவது? நான் எதற்க்காக பிறந்தேன்? என்ற கேள்வியில், முன்னால் நான், பின்னால் தேன் அழிந்துவிட்டது. மிச்சம் என்ன இருக்கிறது?  ... எதற்க்காக பிறந்..? அதில் எதையாவது போடுவோம், உயிர் எதற்க்காக பிறந்தது? சரி வாங்க இதைத் தேடுவோம். விளங்கும்!.

     மனிதன் தன் மரபணுவில் இருந்தும், தன் சுற்றுப்புற சூழ்நிலைகளில் இருந்தும் பெறப்பட்ட தகவல்கள், அனுபவங்களை அடிப்படையாக கொண்டு, தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறான். ஒரு குடிகாரனுக்கு மகனாக பிறப்பவன், விவேகானந்தராக முடியாது. விவேகானந்தருக்கு மகன் பிறந்திருந்தால், அவன் குடிகாரனாகியிருக்க முடியாது. இந்த தத்துவம் சரியாக அமைவதும், தவறாக அமைவதும் தனி நபர் முயற்சியை பொருத்தது. தன்னை உணராதவன், தன் தாய்தந்தை என்ன தகவல்களை தனக்கு கொடுத்தார்களோ, அதை மட்டும் அப்படியே பின்பற்றி வாழ்ந்து முடிக்கிறான்.

தன்னை உணர்ந்தவன்,
1) தன் மரபணுவில் உள்ள தவறான தகவல்களை திருத்திக்கொள்கிறான்.
2) சுயமுயற்ச்சியால், தன் பெற்றோரிடமிருந்து பெறப்பட்டதைவிட அதிக தகவல்களை எழுதிக்கொள்கிறான்.
3) இவனிடமிருந்து பெறப்படாத தவறான தகவல்களை, இவனால் உருவாக்கப்பட்ட சந்ததிகள் பின்பற்றுவதை தடுக்க முயற்ச்சிக்கிறான்.

     ஆனால் மொழி ஏன் மரபணுவில் பதிவதில்லை? மொழி என்பது ஒரு அறிவு, ஒரு பாடம். அது நமக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. கோபம், அன்பு, கருணை, பொறாமை, சுறுசுறுப்பு, சோம்பல் இம்மாதிரியான விஷயங்கள் எல்லாமே குணங்கள். அறிவும், குணங்களும், நம் விருப்பத்திற்க்கு தகவல்களை எழுதிக்கொள்ள சில பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளதல்லவா, அதில் அடங்கும். அறிவும், குணங்களும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறி அமையும். இதில் தன்னை உணர்ந்தவன் இதை கூட்டவோ, குறைக்கவோ செய்கிறான். ஆனால் அடிப்படை தகவல்களை மாற்ற முடியாது. அது எல்லா உயிகளுக்கும் பொதுவானது. உதாரணத்திற்க்கு ஒரு பாடகருக்கு பிறக்கின்ற குழந்தை பாடவும், ஒரு இசையமைப்பாளரின் குழந்தை இசையமைக்கவும், ஒரு நடிகரின் குழந்தை நடிக்கவும், ஒரு அரசியல்வாதி மகன் அரசியலில் இருப்பதும், ஒரு மருத்துவர், ஒரு எஜ்ஜினியர், ஒரு விஞ்ஞானி இப்படி இவர்களின் குழந்தைகளும் தன் பெற்றோரின் குணங்களை ஒத்திருப்பதையும், அவர்களின் தொழிலையே பின்பற்றுவதையும், நாம் அதிகம் பார்த்திருப்போம். இது எப்படி சாத்தியமாகிறது?

1) பெற்றோர்கள், தான் தேர்தெடுத்த துறையில் வெற்றிகரமான ஒரு பாதையை அமைத்துக்கொண்டார்கள் என்றால், தங்கள் குழந்தைகளையும் அதே பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்.
2) குழந்தைகளுக்கு தங்கள் கலையை கற்றுத் தரவில்லை என்றாலும், அவர்கள் தன் பெற்றோர் சமுதாயத்தினால் எப்படி அங்கீகரிக்கப்படுகிறார், என்பதை பார்த்துக் கொண்டே வளர்கிறார்கள். தன் பெற்றோரையே அதிகம் விரும்புவதால், பெற்றோர் சென்ற பாதையையே அவர்களும் விரும்புகிறார்கள்.
3) குழந்தை, யாரல் வளர்க்கப்படுகிறதோ, அவர்களின் செயல்களை அப்படியே காப்பியடித்துக் கொண்டே வளரும்.
                                         15

* டீக்கடையில் யாரோ ஒருவர் புகைப்பிடிப்பதை பார்த்தால், எந்த எண்ணமும் தோன்றாத குழந்தைக்கு, தன் தந்தை புகைப்பிடிப்பதை பார்த்தால், தானும் அதை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும்.
* செல்போனை காதில் வைத்து hallo சொன்னால், குழந்தையும் அப்படியே சொல்லும்.
* சீப்பை எடுத்து தலை சீவினால், அதுவும் அப்படியே செய்யும்.
*  பால் சூடாக இருக்கு அதை ஒரு டம்ளரில் ஆற்றினால், அதையும் அப்படியே செய்யும்.
* கொஞ்சம் விபூதியை குழந்தை நெற்றியில் பூசினால், அது கொஞ்சம் விபூதியை எடுத்து நமக்கு பூசும்.

     இது 10 வயது குழந்தையின் செயல்கள் அல்ல. ஒரு வயதிற்க்கும் குறைவான குழந்தையின் செயல்கள். அப்போது 10 வயது குழந்தை எவ்வளவு செயல்களைச் செய்யும்!

* ஒரு செயல் ஒருவர் மரபணுவில் தகவலாக பதியப்பெற்றால், அதற்க்கான சுற்றுப்புற சூல்நிலைகளும் சாதகமாக அமையப்பெற்றால், அந்த செயலை அவரால் மிக எளிதாக செய்யமுடியும்.
* ஒரு செயல் ஒருவர் மரபணுவில் பதியப்பெறவில்லை, ஆனால் சூல்நிலைகள் அதை செய்ய தூண்டுதலாக அமையப்பெற்றால், அதைச் செய்து பார்க்க மனிதன் முயற்ச்சிக்கிறான்.
* ஒரு செயல் ஒருவர் மரபணுவில் மட்டும் பதிகின்றது, ஆனால் மாறுபட்ட சூல்நிலைகள் அமையப்பெற்றால், அந்த செயலை அவர் செய்வாரா? என்பது ? தான்.

     மற்ற உயிரினங்கள் தங்கள் மரபணுவில், அடிப்படை தகவல்கள் என்ன உள்ளதோ, அதை மட்டும் பின்பற்றுகிறது. தன் செயல்களை கற்றுக்கொண்டு பிறக்கிறது. ஆனால் மனிதன் பிறந்த பிறகுதான், எல்லா செயல்களையும் கற்றுக்கொள்கிறான். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மனிதனின் மரபணுவில் அடிப்படை தகவல்கள் பட்டியலில் அமைந்திருக்கிறது. இதனால்தான், மனிதன் மற்ற உயிர்களிடமிருந்து மாறுபட்டவனாக வாழ்கிறான்.

மற்ற உயிர்களின் மரபணு
              மனிதனின் மரபணு
அடிப்படை தகவல்கள்
அடிப்படை தகவல்கள்
சூழ்நிலை தகவல்கள்
* உணவை தேடுவது.

*தன்னை      தற்க்காத்துக்கொள்வது.

*தன் சந்ததிகளை உருவாக்குவது.

*தன் சந்ததிகளை
பராமரித்து வளர்ப்பது.


* உணவை தேடுவது.

*தன்னை      தற்க்காத்துக்கொள்வது.

*தன் சந்ததிகளை உருவாக்குவது.

*தன் சந்ததிகளை
பராமரித்து வளர்ப்பது.

*கற்றுக்கொள்ளும்
ஆர்வம்.


*மொழி, கலை, குணம்,
நோய்.    


       

    

    


                                         16
     இது எல்லாம் போக, மரபணு பிழை என்று ஒன்றிருக்கிறது. இது எல்லா உயிர்களிடமும் காணப்படும். இரட்டை தலை தவளை, 6 கால் பசு, மூன்று கால் மனிதன், 6 விரல் மனிதன், பிறவி ஊனம், குள்ள உருவம், நெற்றிக்கண், இப்படி பிறப்பிலேயே பல விசித்திரங்களை பார்க்கிறோம். சிலர் பார்க்க சாதாரணமாக தெரிவர், ஆனால் அவர்கள் அசாதாரணமான நினைவாற்றலை பெற்றிருப்பர், விசித்திர குணங்களை பெற்றிருப்பர், உடலை ரப்பராக வளைப்பர்.

     சில பெற்றோர் நன்றாகத்தான் இருப்பாங்க, ஆனால் அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தை புத்திஸ்வாதீனமாக இருக்கும். சிலர் ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல், திருநங்கைகளாக பிறக்கின்றனர். இது எல்லாமே மரபணுவில் ஏற்ப்படும் பிழைகளே. மரபணுவில் எப்படி பிழைகள் ஏற்ப்படுகிறது, எப்படி அதை கருவிலே கண்டறிவது, எப்படி அதை சரி செய்வது, என்பதை பற்றியும், மரபணுவை பற்றியும் பல ஆய்வுகள், தொடர்ந்து நடந்து கொண்டடேதான் இருக்கிறது.

     இப்ப சொல்லுங்க, உங்களை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? உங்க பெற்றோரின் குணங்களுக்கும், செயல்களுக்கும், உங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக உங்களால் உணர முடிகிறதா? நீங்க இன்றைக்கு இருக்கின்ற நிலைக்கு, எப்படி வந்தீர்கள் என்ற காரணத்தை உங்களால் கண்டரிய முடிகிறதா? நாம் எல்லோருமே, எல்லா உயிர்களுமே ரோபோதான், என்று சொன்னால் இக்கருத்தை உங்களால் ஏற்க்கமுடிகிறதா? நீங்க எப்படி உங்க நிலையை அடைந்தீர்கள்? என்பதை கண்டறிந்தீர்கள் என்றால்,

* காந்தி எப்படி அவர் நிலையை அடைந்தார், என்பதை உங்களால் சொல்ல முடியும்.
* ஒபாமா எப்படி அவர் நிலையை அடைந்தார், என்பதை உங்களால் சொல்ல முடியும்.
* ஒரு குற்றவாளி எப்படி வளர்ந்தான், என்பதையும் உங்களால் சொல்ல முடியும்.

     அப்போது, ஒரு குற்றவாளி எப்படி வளர்கிறான்? என்பதை உங்களால் சொல்ல முடிந்தால், ஒருவன் குற்றவாளியாக வளர்வதை எப்படி தடுப்பது? என்ற கேள்விக்கும் உங்களால் எளிதாக பதில் சொல்லமுடியும், குற்றத்திற்க்கான காரணிகள் என்னென்ன? என்பதையும் சொல்லமுடியும். இப்போ சொல்லுங்க, நாம் எதற்க்காக வாழ்கிறோம்? விருப்பம் கொள்வதற்க்காக, கொண்ட விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்க்காக வாழ்கிறோம். எதற்க்காக உயிர் பிறந்தது? வாழ்வதற்க்காக, தன் சந்ததிகளை வாழ வைப்பதற்க்காக பிறந்தது.

     நாம் நம்முடைய விருப்பங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதைபோலத்தான், பிறரும் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளும் எண்ணம் இருக்கும். தன்னுடைய கட்டளைக்கு மற்றவர் கீழ்ப்படிய வேண்டும், என்பது ஜனநாயகம் ஆகுமா? பிறகெப்படி இது மிகப்பெரும் ஜனநாயக நாடு என்று சொல்ல முடியும்? எத்தனையோ பெண்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கவோ, குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்க்கு வளர்க்கவோ முடிவதில்லை. குழந்தைக்கு பசித்தால் பாலூட்டனும், கக்கா போனா வளித்து போடனும். இது மட்டும்தான், ஒரு தாயின் வேலையாக இருக்கனும். மற்றவை எல்லாம் வீட்டின் பெரியவங்க பொறுப்பாம்.
தன் சொந்தம், உடன்பிறந்தவர், தாய்தந்தை என்று எல்லோறையும் மறந்து, தன் புகுந்த வீடே தன் வாழ்க்கை என்று தன்னை அர்ப்பனித்துக் கொண்டாலும் கூட, மருமகளும் ஒரு மனித இனம்தான், என்ற அங்கீகாரத்தை கூட யாரும் அவளுக்கு தருவதில்லை. இதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறாள், தன் கணவனின் அன்பைக் கூட பெறமுடியவில்லையே என்று ஏங்குகிறாள், பெண்.
                                         17  
     மாமியாருக்கு, தன் மகனை எங்கு இழந்து விடுவோமோ என்ற ஆதங்கத்தினால்தான், தன் மருமகளை கொடுமைபடுத்துகிறாளா? அப்படியானால் மகளை இழந்ததற்க்கு, தன் மருமகனை கொடுமைபடுத்துவதில்லையே ஏன்? அப்போ இது தன் அன்பை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற போராட்டம் அல்ல, தன் அதிகாரத்தை நிலைநிறுத்த முடியவில்லையே, என்பதற்க்கான போராட்டம். புதிதாக வந்தவள் இந்த வீட்டின் பெரும்பான்மையை பெற்றுவிட்டால், தான் எங்கு தொலைந்து விடுவோமோ, என்ற பயம் மாமியாரை தொற்றிக்கொள்கிறது. 

* மருமகள் என்ற வார்த்தைக்கான அர்த்தம், சக்காளத்தி என்று நினைப்பவள் மாமியார்.
* மாமியார் என்ற வார்த்தைக்கான அர்த்தம், ராட்சசி என்று நினைப்பவள் மருமகள்.

     இந்த அக்கப்போரில் இருந்து வெளியேற நினைத்தால், கேடுகெட்ட குடும்பத்தில் பிறந்தவள், என்ற அவப்பெயரை மருமகள் மீது சுமத்துகிறார்கள். சரி தனிக்குடித்தனம் சென்ற தம்பதிகள் நிம்மதியாக வாழ்கிறார்களா? அதுவும் இல்லை. தங்களுக்குள் ஏற்ப்படுகின்ற சிறு பிரச்சனைகளுக்கும் கூட, தன் துணையின் பெற்றோர்களை தரம்தாழ்த்தி பேசிக்கொள்கிறார்கள். இதனால் இருவருக்குள்ளும் அன்பு, காதல், காமம் என்று எல்லாமே விரிசல் அடைகிறது. அவர்கள் வாழ்க்கையில், மூலம் லேசாக நீர் தெளித்து கோலம் போட ஆரம்பிக்கும். இந்த கோபத்தின் வெளிப்பாட்டை தன் கணவனிடமும், குழந்தைகளிடமும் வெளிப்படுத்துகிறாள் பெண்.  

     கணவனோ, தன் காம இச்சையை யாரிடம் தீர்த்துக்கொள்வது, என்று தெரியாமல் திக்கற்றுத் திரிகிறான். காமத்தை ஒரு ஒழுங்குநெறி படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திருமணம், இன்று காமகொடூரர்களை உற்ப்பத்தி செய்வதுதான், திருமணம் என்றாகிவிட்டது. ஆண் தனக்கு கிடைக்காத, தன்னால் நிறைவு பெற்று வெளியேற முடியாத காமத்தையே, எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறான். பெண்ணை பழிவாங்க வேண்டும், என்ற கோபம் அவன் மனதில் ஆழப்பதிகின்றது.

     இந்த எண்ணங்கள் அப்படியே, அவன் மரபணுவிலும் தகவலாக பதிவு பெறுகிறது. இவனுக்கு பிறக்கின்ற பையன் வளர்ந்து இளைஞனாகிறான். இவனும் காமசிந்தனையில் கைதேர்ந்தவனாக இருப்பான். இவன் தன் வாழ்வில், ஒரு பெண்ணால் அவமதிக்கப்படும் போதும், தனக்கு கிடைத்த தவறான தகவலுக்கு ஏற்ப்ப, சூழ்நிலையும் சாதகமாக அமையப் பெரும்போதும், போய் பெண்ணை பழிவாங்கு, என்று இவன் மரபணு உள்ளிருந்து இவனுக்கு கட்டளையிடும். தனக்கு கிடைக்கின்ற தகவலும், அதற்க்கு சாதகமாக அமையும் சூழ்நிலையும், ஒரு செயலை மிக துள்ளியமாக செய்ய வைக்கும். இப்படித்தான் காமகொடூரர்களும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையாளர்களும் உருவாகிறார்கள்.

     பெண் தனக்கு கிடைக்காத விடுதலையையும், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையையும், எண்ணி ஏங்குகிறாள். தன்னை அடிமையாக வைதிருக்கும் தன் மாமியாரையும், தன் கணவனையும் பழிவாங்க துடிக்கிறாள். இந்த எண்ணங்கள் அப்படியே அவள் மரபணுவில் தகவலாக பதிவுபெறுகிறது. அவளுக்கு பிறக்கின்ற பெண் குழந்தையும், சுதந்திர தாகம் கொண்டதாகத்தான் இருக்கும். ஆணுக்கு எதிரி பெண் மட்டும்தான். ஆனால் பெண்ணிற்க்கோ, ஆணும் எதிரிதான், பெண்ணும் எதிரிதான். பெண்களுக்கு பெண்களையே பிடிப்பதில்லை. நாத்தனார்-கொழுந்தியா சண்டை, பக்கத்து வீடு, எதிர்வீடு சண்டை, தண்ணீர் பிடிக்கச் சென்றால், ரேசன் கடைக்குச் சென்றால் சண்டை, அம்மா-மகள் சண்டை, அக்கா-தங்கை சண்டை, என்று நீங்களே பல பேரை பார்த்திருப்பீர்கள்.
                                         18
     இது எல்லா பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக இருப்பது, இந்த மாமியார் மருமகள் பிரச்சனைதான். இது எப்போது ஆரம்பித்தது என்றால், பெண்ணிற்க்கு எப்போதிருந்து சுதந்திர தாகம் ஏற்ப்பட்டதோ, அப்போதிருந்து. பெண்களே! நீங்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமையாகத்தானே வாழ்கிறீர்கள், உங்களுக்கு ஏன் இந்த திடீர் தாகம்? உங்களுடைய போராட்டத்தை கைவிடுங்கள், உங்களுடைய படிப்பு, வேலை, பதவி எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் முடங்கியிருங்க. என்ன கொடுமை செய்தாலும் சட்டை செய்யாமல் அதை தாங்கிக்கொள்ளவும், கணவன் எப்போதெல்லாம் அழைக்கின்றானோ, அப்போதெல்லாம் அவனுக்கு மகிழ்ச்சியை தந்துவிட்டு, அவன் போடுகின்ற சோற்றை திண்றுவிட்டு, வீட்டின் மூலையில் அமரவும். எருமை மீது மழை பெய்தால், எப்படி நடந்து செல்லுமோ அதைப்போல, உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டீர்கள் என்றால் வீட்டிலும், நாட்டிலும் எந்த பிரச்சனையும் இருக்காது.

     இல்லை, இனி அப்படி எங்களால் மாறமுடியாது, எங்களுக்கும் எல்லாவற்றிலும் சம உரிமை வேண்டும் என்று விரும்பினால், முதலில் சுதந்திரம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை, பெண்களில் யாராவது தெரிந்து வைத்திருக்கிறீர்களா? சமைக்கவே தெரியாமல் சமைக்கலாம், ஆனால் அதை சாப்பிடமுடியுமா? அது போலத்தான் இதுவும்.

* பெண்களுக்கு எதற்க்காக விடுதலை தேவை?
* எதிலிருந்து விடுதலை தேவை?
* விடுதலை கிடைத்தபின் என்ன செய்யவேண்டும்?
இதில் எதற்க்காவது பதில் தெரியுமா?

     உதாரணத்திற்க்கு இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இந்தியாவிற்க்கு எப்போது சுதந்திரம் என்று ஆரம்பிபதற்குள்ளாகவே 1947, என்று எல்லோராலும் பதில் சொல்லிவிட முடியும். ஆனால் என்னுடைய கேள்வி அது இல்லை. * இந்தியாவிற்க்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது? * இந்தியா எப்படி அடிமை நாடாக மாறியது?

     இந்த கேள்விகளுக்குகான பதிலை உணர்ந்தால்தான், பெண்களுக்கு விடுதலை கிடைக்கும். பெண்கள் ஆட்டோ ஓட்டுகின்றனர், பஸ், விமானம் ஓட்டுகின்றனர், ராக்கெட்டில் போராங்க, ஆகாயத்தில் 6 மாதம் தங்கி ஆராய்ச்சி செய்கிறார்கள், அமைச்சர், முதலமைச்சர் ஆக இருக்கிறார்கள், மந்திரி, பிரதமமந்திரி, ஜனாதிபதி என்று ஆச்சர்யப்படும் வகையில், பெண்கள் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், இந்திய சுதந்திரத்தை பற்றி, இந்திய நாட்டின் வரலாற்றைப் பற்றி யாதொரு பெண்ணிற்க்கும் தெரியாதது அதை விட ஆச்சர்யமே!!!!!!!!!!!!!!!!

     இந்தியா சுதந்திரத்திற்க்காக போராடி வெற்றிகண்டது, என்பதுதான் உலகத்திற்க்கே தெரியுமே! அப்போது அந்த போராட்டத்தின் குறிப்புகளை காப்பி செய்து, அதை உங்கள் வாழ்க்கையில் பேஸ்ட் செய்திருந்தால், பெண்கள் விடுதலை பெற்று இந்நேரம்         65 ஆண்டுகள் ஆகியிருக்குமே?

     பீட்ரூட் கோலா உருண்டை எப்படி செய்வது? என்று டி.வியில் பார்த்தால், உடனே அதை குறிப்பு எழுதிக்கொண்டு செய்ய ஆரம்பிக்கிறீர்கள், அதே மாதிரி செய்து சுடச்சுட நன்றாக உள்ளே இறக்குகிறீர்களே! அதைப்போல, இந்திய சுதந்திர போராட்டத்திலிருந்து ஏன் குறிப்புகளை எடுத்துக்கொள்ளவில்லை? இதனால் எனக்கு ஒரு சந்தேகம், பெண்கள் போராடுகிறார்கள், ஆனால் அவர்கள் சுதந்திரத்திற்க்காகத்தான் போராடுகிறார்களா? என்பதுதான் புரியவில்லை.

                                         19
* இந்தியா எப்படி அடிமை நாடாக மாறியது?

     ஆங்கிலேயர் வருவதற்க்கு முன்னால், இந்தியா ஒரே ஒரு அரசனால் ஆட்சி செய்யப்பட்டதா? இல்லை. பேரரசர்கள், அரசர்கள், பிரபுக்கள், ஜமீன்கள், என்று பலரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. தன் எல்லைகளை விரிவுபடுத்துவது, தன் எதிரிகளை வீழ்த்துவது, தன் மக்களையும், கலாச்சாரத்தையும் காப்பது, இதுதான் அரசர்களின் வேலை. ஆங்கிலேயர் ஆட்சியை பிடிப்பதற்க்காக இந்தியா வரவில்லை. ஆனால் நாம்தான், அவர்களை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தோம்.

     அவர்களின் ஆயுத பலத்தை, நாம் நம் எதிரிகளை வீழ்த்த பயன்படுத்திக் கொண்டோம். அதற்க்காக, அவர்களுக்கு பல செல்வங்களை கொடுத்திருக்கிறோம். அப்படி ஒவ்வொரு அரசனுக்கும் விளக்கு வைக்கப்பட்டு, இறுதியில் அரசன் என்ற வார்த்தைக்கே, விளக்கு வைத்தான் ஆங்கிலேயன். இப்படி ஒற்றுமையை இழந்ததால்தான், இந்தியா அடிமை நாடானது.

* இந்தியாவிற்க்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது?

     ஆங்கிலேயன், ஆயுத பலம் கொண்டவனாக இருந்தான். அவனை எதிர்த்து கம்பை நீட்டிக்கொண்டு 2அடி ஓடுவதற்க்குள், அவன் தன் துப்பாக்கியால் டுமீல் ஆக்கிவிடுவான். நமக்கு தெரிந்தது வயிறு புடைக்க தின்றுவிட்டு, திண்ணையில் அமர்ந்து பாடியே மழைவர வைப்பது. அவனிடம் இருக்கும் ஆயுதத்தை விட சிறப்பான ஆயுதம் செய்ய நமக்கு தெரியாது. அதனாலேயே பல ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்தோம். ஆனால் ஆயுதங்களை விட, அகிம்சைக்குதான் அதிக பலம் உண்டு என்பதையும், நம் ஒற்றுமையை இழந்ததால்தான், அடிமைப்பட்டோம் என்பதையும், ஒற்றுமையாக போராடினால்தான், விடுதலை பெறுவோம் என்பதையும் உணர்ந்தோம், நாம் விடுதலை பெற்றோம். பெண்களே! இப்போதவது புரிகிறதா? நீங்கள் ஒற்றுமையை இழந்து தவிக்கிறீர்கள், என்பதை உணர்ந்தால் பாதி சுதந்திரம் கிடைத்ததற்க்கு சமம். ஒருமித்த குரல் எழுப்பினால், கிடைக்காதது ஒன்றுமே இல்லை.

     பெண்களை நினைத்தால் அந்தோ பரிதாபம், என்ற கதைதான் ஞாபகம் வருகிறது. ஸ்டார் டி.வியில் திரு. அமீர்கான் ஒரு நிகழ்ச்சியை வழங்குகிறார். அதில் ஒருவர் தன் வாழ்க்கை அனுபவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டார்.

     வட இந்தியாவில் ஒரு சிறு குடும்பம் இருந்தது. அதில் அண்ணன் துப்புறவு தொழிலாளி, அரசு வேலை. தம்பி தன் பள்ளிபடிப்பை முடித்ததும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்க்காக செல்கிறார். அங்கு, நீ என்ன படித்தாலும் உன் அண்ணன் வேலையைத்தானே செய்யப்போகிறாய், என்று ஏளனமாக பேசுகின்றனர். அவரும் பதிவு செய்துவிட்டு வெளியேருகிறார். தம்பிக்கு ஒரே யோசனை, தன் அண்ணன் நகரத்தில் துப்புறவு தொழிலாளியாக வேலை செய்கிறார், என்பது தெரியும். ஆனால், அது எந்த மாதிரியான வேலை என்பது தெரியாது. அதனால் தன் அண்ணன் என்ன வேலை செய்கிறார், என்பதை பார்க்கச் செல்கிறார் தம்பி.

     அது ஒரு பொதுக்கழிப்பிடம். அங்கு தன் அண்ணன், செய்யத்தகாத வேலையை செய்து கொண்டிருப்பதை பார்த்த தம்பி, மிரண்டு நிற்க்கிறார். மற்ற எல்லோரும் மலம் கழித்த பிறகு, அதை தன்னிடம் உள்ள முறத்தால் வளித்து பக்கெட்டில் போடனும், பக்கெட் நிரம்பியதும் அதை வெளியில் உள்ள கீழ்நிலைத் தொட்டியில் கொட்டனும், தொட்டி நிரம்பியதும் அதை ஒரு டிராக்டரில் எடுத்துச்சென்று, நகரத்திற்க்கு வெளியே கொட்டிவிடுவர்.                           
                                         20
     இதுதான், தன் அண்ணனின் அன்றாட பணி, என்பதை தெரிந்துகொண்ட தம்பிக்கு தாங்கொணா கோபம். நம் குடும்பத்திற்க்காக, என் படிப்பிற்க்காக நீ இந்த வேலையைத்தான் செய்யவேண்டுமா? இது மனித நாகரீகத்திற்க்கு அவப்பெயர் ஏற்ப்படுத்தும் செயல் அண்ணா, என்று சண்டை போடுகிறார். இல்லை தம்பி, இதை நாம் காலம் காலமாக செய்கிறோம், இது ஒன்றும் தவறில்லை. இல்லை இது தவறுதான், என்று இருவரும் போட்ட சண்டையில், அண்ணன் கையில் இருந்த பக்கெட் தவறி, மலத்தொட்டியில் விழுந்துவிட்டது. ஐயோ தம்பி! எனக்கு இருந்ததோ ஒரே ஒரு பக்கெட், நான் இன்னும் நிறைய இடங்களை சுத்தம் செய்யவேண்டி உள்ளது, என் மேலதிகாரி வந்தால் நான் என்ன பதில் சொல்வது, என்று சொல்லியவர் சட்டென்று மண்டியிட்டு, அந்த மலத்தொட்டியில் தன் முழு கையையும் விட்டு தேடுகிறார், சக ஊழியர்களும் அவருக்கு உதவ, அவர்களும் கையை விட்டு தேடுகின்றனர். அதைப்பார்த்த தம்பிக்கு கண்ணீர் பொத்துக்கொண்டு வருகிறது. தன் உடலெங்கும் மனித மலத்தை பூசிக்கொண்ட அண்ணன் முகத்திலோ சந்தோசம், ஏ! பக்கெட் கிடைச்சிருச்சு!

     என்னது! பக்கெட் கிடைச்சிருச்சா? ஐய்யகோ! அண்ணா நான் என்ன சொல்லி புரியவைப்பது? அண்ணா நாம் எல்லோரும் சமுதாயத்தினால் அவமதிக்கப்படுகிறோம், ஒதுக்கப்படுகிறோம் என்று அழுதுபுலம்புகிறார் தம்பி. அதற்க்கு அண்ணன், ஒரு கேள்வி கேட்கிறார், அப்படியா? அன்றிலிருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இச்செயலை எதிர்த்து, இந்தியா முழுவதும் போராடிவருகிறார் தம்பி. இன்னும் அவருக்கு முழு வெற்றி கிடைக்கவில்லை.
    
     இந்த கதைக்கும் பெண்களுக்கும் தொடர்பு உண்டு. பெண்கள் அவமதிக்கப்படுகிறார்கள், அடிமைப்பட்டு கிடக்கிறார்கள், என்று எத்தனை பேர் எடுத்துச் சொன்னாலும், அப்படியா? என்றுதான் கேள்வி கேட்கிறார்களே தவிர, அவர்கள் படும் வேதனையை, அவமானங்களை அவர்களாலேயே உணர முடிவதில்லை. பொதுவாக அவமானம் என்பது, நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்ப்பட்டிருக்கும். ஒரு செயலை தவறாக செய்யும் போதும், பிறருக்கு தவறிழைக்கும் போதும், நாம் அவமானத்தை சந்தித்திருப்போம். வறுமை, அறிவின்மை, உடல் ஊனம் அவமானத்தை தருகிறது. இதுபோக வாழ்நாளில் பெரும் பகுதியை, அவமானத்தினால் கழிப்பவர்கள் 3 பிரிவினர்.
        
1) அனாதை. அப்பா பெயர் தெரியாதவன், தப்பான வழியில் பிறந்தவன், என்று அவமானப்படுத்த படுகின்றனர். ஆனாலும் இந்த வேதனை சில காலம்தான். தனக்கென்று ஒரு உறவை ஏற்ப்படுத்திக் கொண்டால், அனாதை என்ற வட்டத்திலிருந்து வெளியே வந்துவிடலாம்.

2) திருநங்கை. இவர்கள் தங்களை அறியும் வரை, எந்த பிரச்சனையும் இல்லை. முதலில் பிறர்தான் இவர்களுக்கு, இவர்கள் தன்மையை கேலிசெய்து உணர்த்துகின்றனர். பிறர் நம்மை கேலிசெய்யும் போதுதான், நாம் நம்மை கவனிக்கின்றோம். அப்படி தோற்றத்தில் ஆணாக இருப்பவர், தன்னுடைய நடை, பாவனை, குணம் அனைத்தும் பெண்ணைப் போல் இருக்கிறதே, என்ற கவனம் தன் மீது விழுகிறது. பிறகு, தான் ஆணாகவும் இல்லை, பெண்ணாகவும் இல்லை, இவற்றிற்க்கு அப்பாற்ப்பட்ட, அறுவறுப்பாக சமுதாயம் பார்க்கும் ஒரு இனமாக தாம் இருப்பதை உணரும் தருணம், ஐய்யகோ! முருகா! என்னவென்று சொல்வது? எதனோடு ஒப்பிடமுடியும் அந்த வேதனையை? தாழ்வுமனப்பான்மையின் உச்சகட்டம். ஏய்! உன்னால் முடியாது! என்று சமுதாயம் நம்மை பார்த்து சொல்கிறதே, அப்படி என்ன நம்மால் முடியாது? எதனால் நம்மை ஏற்க மறுக்கிறார்கள்? என்பதை அவர்களால் உணரவும் முடியாது, அதற்க்காக முயற்ச்சிக்கவும் முடியாது.  
                                         21
     ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்ப்படுகின்ற காம உணர்வுகளை உணர முடியாது, இனவிருத்தி செய்யமுடியாது. இது கூட ஒரு பிரச்சனையே கிடையாது. உடலுறவு கொள்ளாமல் வாழ முடியாதா என்ன? ஆனால் உறவுகளால், சமுதாயத்தினால் புறக்கணிக்கப்படும் போதுதான், அது தாங்கிக்கொள்ள முடியாத வேதனையை தருகிறது. உறவுகள் இல்லாமல், யாராலும் உயிர் வாழமுடியாது.

     இவர்களுக்கு மறுவாழ்வு தரமுடியும், ஆறுதல் கூறமுடியும், வீட்டுக்குள் சேர்க்க முடியும் என்றால், அது இதற்க்குமுன் இதே பாதிப்புக்குள்ளான இதே பிரிவினரால் மட்டும்தான் முடிகிறது. வருங்கால மருத்துவ விஞ்ஞானம், கண்டிப்பாக இந்த பிரிவினர் பிறப்பதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும், என்று என்னுகிறேன். அதே சமயம் உதாசினப்படுத்திய உறவுகளே, இவர்களை தேடிச்செல்ல வைப்பதும் என் நோக்கம்தான்.
    
கடைசியாக உச்சக்கட்ட பேரவமானத்தை சந்திக்கும் ஒரே பிரிவினர்,

3) பெண்.
     பெண்ணிற்க்கு திருமணம் ஆகவில்லை என்றால், மூதேவி. குழந்தை பிறக்கவில்லை என்றால், மலடி. கணவனை இழந்தவள் முண்டச்சி. ஆனால் என்ன நடந்தாலும் ஆண் அவமானப்படுவதே இல்லை. மாறாக, மனைவியை இழந்தவன் புதுமாப்பிள்ளை, திருமணம் ஆகவில்லை என்றால் பிரம்மச்சாரி. திருமணத்தின் போது ஆணைவிட பெண் வயது, வசதி, படிப்பு, அறிவு குறைவாகத்தான் இருக்கனும், தாலி கட்டிக்கனும், நெற்றியில் பொட்டு வைக்கனும், தலை குனிந்துதான் நடக்கனும், அடக்க ஒடுக்கமா இருக்கனும், ஆமாம் யார் இதையேல்லாம் நிர்னயித்தது?

     இதையேல்லாம் நம் முன்னோர்கள் மிக துள்ளியமாக வடிவமைத்தார்கள் என்றால், எந்த ஒரு ஆணும், தனக்கு 4 பேரன் பேத்தியை கொண்டவனாக இருந்தாலும், அவனுக்கு திருமணம் ஆனதற்க்கான, எந்த ஒரு அங்க அடையாளமும், அவனிடத்தில் ஏன்  காணப்படவில்லை? இதனால் எத்தனையோ பெண்கள் ஏமாற்றப்படுகிறார்களே!

     அப்போது ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஏமாற்றலாம், ஆனால் பெண், எந்த ஒரு ஆணையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்க்காகத்தான், பெண்களின் அங்கத்தில் இத்தனை அடையாளங்களா? எனக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம் என் மனதை உருத்துகிறது. யாரிடம் கேட்டால் சரியான பதில் சொல்வார்கள், என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் எனக்கு புரியவையுங்க. pls.   

     அதாவது, சமுதாயம், சமுதாயம் என்று சொல்கிறார்களே! சமூக ஆர்வலர்கள், சமூக வலைதளங்கள், ஜனநாயகம், மக்கள், அரசாங்கம், ஊடகங்கள், என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய இந்த சமுதாயம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் ஆண் தானா? ஏனென்றால்,

1) சூப்பர் ஸ்டார் சார், ரஜினி சார், நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். அதில் அவருக்கு துணையாக நடித்தவர், மதிப்பிற்க்குறிய ஸ்ரீவித்யா. அதே சூப்பர் ஸ்டார் சார், ரஜினி சார், நடித்த 135வது படம் தளபதி. அதில் அவருக்கு அம்மாவாக நடித்தவர், அதே மதிப்பிற்க்குறிய ஸ்ரீவித்யா. என்ன கொடுமை சார் இது?  திரைத்துறையில் பெண்களுக்கு மட்டும் வயதாகி விடுகிறது. ஆனால், ஆண்களுக்கு மட்டும் வயதாவதில்லையே ஏன்? ஆண்களுக்கு மட்டும்தான், நடிப்பு திறமை இருக்குமா? ஏன் ஆண்கள் மட்டும் 60 வயதானாலும், கதாநாயகனாகவே இருக்கிறார்கள்? பெண்களுக்கு வயதானால் கதாநாயகி, என்ற இடத்திலிருந்து புறக்கணிப்பது ஏன்?
                                        
                                         22
2) ஆண்களின் முகம் எவ்வளவு அவலட்சனமாக இருந்தாலும், அவன் கதாநாயகன். அதுவே பெண்கள் முகலட்சனமாக, இளம் குட்டிகளாக இருந்தால் மட்டுமே, கதாநாயகி. பெண்கள் முகம் சற்று கோனலாக இருந்தால், அவர்கள் முகத்திலேயே துப்புகிறார்கள். உதாரணத்திற்க்கு இரு படங்கள், 1) அழகர்சாமியின் குதிரை, 2) ஒரு கல் ஒரு கண்ணாடி.
3) பெண்களை அரைகுறை ஆடையில், படம் பிடிக்க ஆர்வம் கொண்டது சினிமா. முதலில் சுடிதார் போட்டுக்கொண்டு நடனமாட வைத்தனர். பிறகு அந்த துப்பட்டா வேண்டாம் என்றனர். பிறகு பெண்களை, கால்ச்சட்டையை கழட்டிக்கொண்டு ஆட வைத்தனர். அதன் பிறகு, மேல்ச்சட்டையையும் கழட்டிவிட்டு வெறும் ஜட்டி, பாடியுடன் கதாநாயகனுடன் ஆட வைக்கின்றனர். நாளை நிர்வாணமாக ஆட வைப்பார்களோ?

4) பெண்களை அவமானப்படுத்தி, அதை நகைச்சுவை என்று நிரூபிக்கிறது சினிமா. சிறுத்தை படத்தில், கதாநாயகன் பெண்களை ஏமாற்றி அவர்கள் தலையில் பாதி மொட்டையடித்து சென்றுவிடுவார், அவருக்கு பின்னால் வரும் நகைச்சுவை நடிகர், அதே பெண்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மீதி தலையை மொட்டையடித்து செல்கிறார். இதை நகைச்சுவையாக பார்க்க வேண்டுமாம். இன்றைக்கு பெண்கள் தலையில் மொட்டையடித்தவர்கள், நாளை மூத்திரமும் அடிப்பார்களோ? அதையும் நகைச்சுவை என்பார்களோ?

     இதையேல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், சமுதாயம் இதைத்தான் பார்த்து, ரசித்து, கைதட்டி, விருது வழங்கி, மகிழ்கிறது என்றால், இந்த சமுதாயம் என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் வேரென்னவோ?

1) பெண்களுக்கு வயதானால், கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதில்லை.
2) அவலட்சனமான பெண்களை அவமதிப்பது.
3) பெண்களை அரை நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்துவது.
4) பெண்களை அவமானப்படுத்தி அதை நகைச்சுவையாக படம்பிடிப்பது.
இவை எல்லாம் தணிக்கை குழுவினர் பார்வைக்கு புலப்படாதது ஏனோ?

     காந்தி சிலையை அவமதித்தால், நாடே கொந்தளிக்கிறது. ஆனால் காந்தி உயர்வாக நினைத்து போற்றிய பெண்களை, அவமதித்து வெளிவரும் படங்களை ரசிப்பதா? இதை காந்தி ஏற்றுகொள்வாரா? வெள்ளித்திரை மட்டும் அல்ல, சின்னதிரை, பத்திரிக்கைகள், வாரஇதழ்கள், விளம்பரங்கள், என்று எல்லாவித ஊடகங்களும், பெண்களை இழிவுபடுத்தியும் பணம் சம்பாதிக்கின்றது. வானொலியும், நூலக புத்தகங்களும் தான், இதிலிருந்து விலகி நிற்க்கின்றது.

     [அப்போது இவைகளை எல்லாம், முறையாக தணிக்கை செய்யத் தெரியாத அரசாங்கத்திடம், ஐயா, என் கட்டுரையை தணிக்கை செய்து, அதற்க்கு காப்புரிமை தாருங்கள், என்று கேட்பதை நான் விரும்பவில்லை என்பதனால், நானே அச்சடித்து நேரடியாக வெளியிட்டேன்.]

     இவர்கள் ஒருபக்கம் இருக்க, பெண்களை விபச்சாரத்தில் தள்ளி பணம் சம்பாதிப்பவர்களும், பலவந்தமாக தன் காம இச்சைகளை தீர்துக்கொள்பவர்களும் ஆண்களே. பாவம் பலகீனமான பெண்களால், ஆண்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடிவதில்லை.

                                         
                                         23
     ஆயினும் தன்னையும் காத்து, ஆணையும் பெற்றெடுப்பவள் பெண், ஆண் பிறந்ததை பெருமையாக கொண்டாடுபவள் பெண், தன் குழந்தைக்கு பசி வரும் முன்னே உணவு அளிப்பவள் பெண், அத்தனை பணிவிடைகளும் செய்து ஆணை வளர்ப்பவள் பெண், ஆண் வீட்டை சுத்தமாகவும், பத்திரமாகவும் பார்த்துக் கொள்பவள் பெண், ஆணின் இச்சைகளை தீர்த்து வைப்பவள் பெண். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் தன்னை ஆண்களுகே அர்ப்பனிப்பவளாக பெண் இருந்தாலும், பிரபஞ்சத்தின் பொக்கிஷமாக கருதப்பட வேண்டிய பெண்களை, அடிமைப்படுத்தவே விரும்புகிறார்கள் ஆண்கள்.

     பெண்ணுக்குள், ஆயிரமாயிரம் சுகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உலகத்திலேயே தாலியை விட, ஒரு கேவலமான அடிமைச் சின்னம் இருக்கவே முடியாது. அதை பெண் கழுத்தில் கட்டி, அத்தனை சுகங்களையும் அனுபவித்து, சுகபோக சுதந்திர வாழ்க்கை வாழ்கிறான் ஆண். இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அந்த தாலியையும் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, ஆண் கால்களில் விழுந்து வணங்குகிறாளே பெண்! ஆண் எப்படி சித்ரவதை செய்தாலும், அவமானப்படுத்தினாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு, உயிர் வாழ்கிறாளே பெண்!

     மனிதன் அன்றாடம் உபயோகிக்கும் உபகரணங்களை அனைத்தையும் உருவாக்கியவன் ஆணாக இருக்கலாம், வீரத்திலும், விவேகத்திலும், தைரியத்திலும் முன்னோடியாகத் திகழ்பவன் ஆணாக இருக்கலாம், ஆனால் என்ன அறிவு இருந்து என்ன பயன்? தன் அதிகாரபலத்தினால், பலகீனமானவர்களுக்கு எவ்வளவோ அளவில்லாத கொடுமைகளை செய்து வருவதனால், ஆண்களை விட கேடுகெட்ட, கீழ்த்தனமாக வாழும் ஒரு இனம் இந்த பிரபஞ்சத்திலேயே கிடையாது, என்பதைத்தான் உணரமுடிகிறது. இதையெல்லாம் ஏன் பெண்கள் உணர மறுக்கின்றனர்? இதையெல்லாம் ஏன் எதிர்த்து, ஒருமித்த குரல் எழுப்பவில்லை?

     ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி அமைத்ததற்க்கும், உலகப்போர்கள் நடந்ததற்க்கும், ஆண்கள் ஆட்சியில் இருப்பதற்க்கும், ஒரே காரணம்தான். தன் எதிரியை விட பலம் கொண்ட நபருடன் நட்பை ஏற்ப்படுத்திக் கொண்டால், தன் எதிரியை சுலபத்தில் வீழ்த்திவிட முடியும். அதைப்போலவே, பெண்களும் சம சுதந்திரத்திற்க்காக போரடுவதில்லை. அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்க்காகத்தான், போராடுகிறார்கள். தன் மகனை பயன்படுத்தி மருமகளை அடிமைப்படுத்திக்கொள்வதும், தன் கணவனை பயன்படுத்தி மாமியாரை பழிதீர்ப்பதும், பெண்களுக்கு கைவந்த கலை. ஆனால், தங்களின் உண்மையான எதிரி ஆண்கள்தான், என்பதை உணரமுடிவதில்லை.

     இந்தியா சுதந்திரத்திற்க்கு பிறகு எப்படி நடந்துகொள்கிறது? தன்னை காயப்படுத்திய நாடாக இருந்தாலும், தன்னை காயப்படுத்திக் கொண்டிருக்கும் நாடாக இருந்தாலும், அல்லது வேறெந்த நாடாக இருந்தாலும் சரி, எல்லோரிடமும் நட்பை மட்டுமே விரும்பும் நாடு. தன்னுள் அளவில்லாத ஆற்றலை கொண்டிருந்தாலும், தன் அதிகாரங்களை, மற்ற எந்த நாட்டின் மீதும் ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்யாத நாடு இந்தியா. நாம் ஆங்கிலேயருக்கு அடிமையாகவே வாழ்ந்திருந்தால், எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் எப்போது நாம் நம்மை நிர்வகித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக உணர்ந்தோமோ, எப்போது நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை உணர்ந்தோமோ, அப்போது இருபக்களிலும் பல உயிர்ச்சேதங்கள். யாருக்கும் நிம்மதியான உறக்கம் இல்லை. அது நாட்டுக்கே தலைவலி. தங்களை உணர்ந்து கொண்டவர்களை அடிமைப்படுத்த முடியாது, என்பதை உணர்ந்த ஆங்கிலேயன் பின்வாங்கிச் சென்றான்.
                                         24
     ஆனால் இன்று, இது நாம் அடிமையாக வைத்திருந்த நாடு, இது நம்மை அடிமைப் படுத்திய நாடு, என்று மனதில் நினைத்துக்கொண்டு, இரு நாடுகளும் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுகிறதா? இல்லை. இரு நாட்டினரும் வாணிபம் செய்கிறார்கள், வந்து செல்கிறார்கள். நட்புறவோடு பழகுகிறார்கள். உலகம் என்ற குடும்பத்தில் இந்தியாவும் சம அங்கீகாரம் பெற்று வாழ்கிறது. இதுபோல, இந்தியாவிடமிருந்து பல தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்ளலாம்.

     அதுபோல,  பெண்களும் ஆட்டுமந்தையை போல, அடிபணிந்து வாழ்ந்தபோது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தன்னையும் வீட்டில் ஒரு நபராக மதிக்கப்பட வேண்டும், தன் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற உரிமை தனக்கு வேண்டும், தானும் இச்சமுதாயத்தில் சமசுதந்திரம் பெற்று வாழவேண்டும், என்று ஒற்றுமையாக போராடியிருந்தால், ஆணும், பெண்ணும் என்றோ சமநிலையை அடைந்திருக்க முடியும். ஆனால் பெண்களின் நோக்கம் அதுவல்ல.

     தன்னை அடிமைப்படுத்திய ஆண்களை, தான் ஆட்சி செய்யவேண்டும், தன் வார்த்தைக்கு கீழ்ப்படியச் செய்யவேண்டும், தன்னை இழிவுபடுத்தியவர்களை, தான் அவமதித்து, அவர்களை தன் காலடியில் விழவைப்பதற்க்கான போராட்டம்தான், சுதந்திர போராட்டம், என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் பெண்கள். பெண்களுக்கு எதிலிருந்து விடுதலை தேவை? ஆணிடமிருந்து?, பெண்ணிடமிருந்து?, பிறவியிலிருந்து? இவை எல்லாவற்றையும் விட அறியாமை எனும் பிடியிலிருந்துதான், முதலில் பெண்களுக்கு விடுதலை தேவை.

     ஆண்களை எப்படி வெற்றிகொள்வது, என்று வழி தெரியாத பெண்களுக்கு, எப்படி  பழிவாங்க வேண்டும் என்று தெரியும். தன்னிடம் உள்ள ஒரே ஒரு ஆயுதம் சிற்றின்பம் மட்டும்தான், என்று நினைத்துக் கொள்கிறாள். இதை தரமறுத்தாலே, ஆண் துவண்டுவிடுவான். இந்த ஒரு தண்டனையை மட்டும்தான், ஆண்களுக்கு தரமுடிகிறது. ஆண்களுக்கு இதில் ஏற்ப்படும் ஏமாற்றமும், வெறுப்பும்தான், தன்னை சுகப்படுத்திக் கொள்ள வேறு ஏதாவது ஒன்றை தேடிச்செல்ல வைக்கிறது. முதலில் சிகரெட், பிறகு பீர், பிறகு hot.  தன் காயப்பட்ட மனதிற்க்கு மருந்தாக, ஒரு விலைமகளையும் தேடிச்செல்ல வைக்கிறது. இப்படி காமத்தை முழுமையாக கடக்க முடியாதவன்தான், காமக்குற்றவாளி ஆகிறான். ஆண் மது மீது கொண்ட விருப்பத்திற்க்கு காரணம், மாது மீது கொண்ட வெறுப்பே.

     இப்படி கணவனும், மனைவியும் போடுகின்ற சண்டையில், குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. தகாத வார்த்தைகளினால் தங்களை மட்டுமல்ல, சில நேரங்களில், குழந்தைகளையும் திட்டி விடுகின்றனர். இதனால் குழந்தைகளினால், கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. தங்களுடைய வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதற்க்கான, சரியான வழி காட்டுதல் இல்லாமல் போவதால், மாறுபட்ட கலாச்சாரங்கள் உருவாகின்றன. உதாரணத்திற்க்கு, சிறு வயதிலேயே போதை பழக்கங்களுக்கு அடிமையாவது, ஓரினச்சேர்க்கை, விலங்குகளுடன் உடலுறவு, குழந்தைகளுடன் உடலுறவு, கல்லக்காதல், பாலியல் குற்றங்கள், பிரம்மச்சர்யம், துறவு வாழ்க்கை.

     ஒருபக்கம் குழந்தைகளின் வாழ்க்கை அழிவுப்பாதையை நோக்கிச் செல்கிறது. மறுபக்கம் முதியவர்களின் வாழ்க்கை அவமதிப்பிற்க்கு உள்ளாகிறது. நடுத்தர வயதினர்
வாழ்க்கையோ, செய்வதறியாது கேள்விக்குறியாக நிற்க்கிறது. இதிலிருந்து மீண்டு எல்லோருக்கும் சமச்சீரான வாழ்க்கையை எப்படி உருவாக்குவது?
                                         25
    
   
     மனிதன் இன்றைக்கு இருக்கின்ற அறிவைப் பெற 40 லட்சம் ஆண்டுகளை செலவிட்டிருக்கிறான், பல கொடுமைகளை கடந்து வந்திருக்கிறான். பூமியில் 85 லட்ச வகையான உயிரினங்கள் உள்ளன. அதில் மனிதனுக்கு மட்டும் தான் கேள்வி ஞானம் உண்டு. ஆனால் நாம் இப்படி மானம், வீண்கவுரவம், பணத்திற்க்காக, சுயநலத்திற்க்காக, அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்க்காக, உறவுகளை சிதைப்பதனால் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போதே நாம் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு அழிந்து போய்விட்டால், நம் எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி உயிர் கொடுப்பது? அப்படி மனித இனம் அழிந்தால், மற்றொரு இனம் நம்மைப் போன்ற அறிவை பெற முடியுமா? அதற்க்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியாது? அப்படி மனித இனம் அழிந்தால் மற்ற உயிரினங்களிடம் நாம் தோற்று விடுவோமே! பின் நமக்கு இந்த அபரிவிதமான அறிவு கிடைத்துத்தான், என்ன பயன்? நாம் நம் இனத்தையும் நேசிக்கனும், மற்ற ஜீவராசிகள் வாழ இடமும் கொடுக்கனும். அதனால் நம் கவனத்தை எதிர்காலத்தை நோக்கி திருப்புவோம். வழுவான எதிர்கால சமுதாயத்தை எப்படி உருவாக்குவது, என்பதைப் பற்றி சிந்திப்போம்.

     பூமி தன் ஆயுள் காலத்தில் பாதியை கடந்து விட்டது. பூமிக்கு ஏதாவது ஆபத்து வரும்போது, அதை சமாளிக்கின்ற அறிவையோ, அல்லது நாம் இங்கிருந்து தப்பிச் செல்கின்ற அறிவையோ நாம் பெற்றாகனும். பூமி இப்படியேதான் இருக்கும், இதற்க்கு அழிவே கிடையாது என்று நிரூபித்தாலும், இங்கேயே உட்கார்ந்து கொள்வதற்க்கு, எண்ணிக்கையில் அறிவை கொண்டவன் அல்ல மனிதன். இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர மற்ற கிரகங்களிலும் உயிர்கள் உள்ளனவா? இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் எப்படி உயிர் தோன்றியது? என்ற தேடல்கள் எல்லாமே, நாம் புதிதாக உயிர்களை உருவாக்கத்தான். கிரகங்களில் உயிர் வாழ்வதற்க்கான சூல்நிலையை ஏற்ப்படுத்துவது, புதிதாக உயிர்களை உருவாக்குவது, கிரகங்களில் குடிபெயர்வது, கிரகங்களும், சூரியனும் எப்படி தோன்றியது என்பதை கண்டறிந்து, புதிதாக சூரியக் குடும்பத்தை உருவாக்குவது, பிரபஞ்சம் முழுவதும் உயிர்களை கொண்டு சென்று சேர்ப்பது, என்று நமக்கு பல வேலைகள் இருக்கிறது.
  
     இம் மாதிரியான ஆய்வுகளை 100க்கு, 1, 2 பேர்தான் செய்கிறார்கள். ஒரு பெரிய வண்டியை இரண்டு பேர் இழுப்பதற்க்கும், 50, 80 பேர் சேர்ந்து இழுப்பதற்க்கும் வித்தியாசம் இருப்பதை போல, எல்லோருடைய கவனத்தையும் அறிவியலை நோக்கி திருப்பினால், நாம் சாதிக்கின்ற காலம் வெகு குறைவுதான். இல்லையென்றால் நாம் அழிகின்ற காலமும் வெகு குறைவுதான்.

     நம் அடிப்படை தேவைகள், பிரச்சனைகளை தீர்ப்பதற்க்குள்ளாகவே ஆயுள் முடிந்து விடுகிறது. இதில் அறிவியலை பற்றிச் சிந்திக்க ஏதுநேரம்? நம்மை அழித்துக் கொள்வதற்க்காகவா இந்த அர்ப்புத அறிவைப் பெற்றோம்? இல்லை. வேதியலை உயிரியலாக மாற்றுவதற்க்காக பெற்றோம். பிரபஞ்சத்தை உயிரோட்டமாக மாற்றும் பொறுப்பை இயற்க்கை நமக்கு தந்திருக்கிறது. அதை வீனாக்கலாமா?

     எல்லோருக்கும் சம உரிமை கொடுத்து நம் வீட்டை அழகாக வடிவமைத்தால், நாடு சிறந்த வடிவம் பெரும். அப்படி சிறப்பாக வடிவம் பெற்ற ஜனநாயக நாடுகள்தான், உலக அமைதிக்கு வழிவகுக்கும். அப்போதுதான், பிரபஞ்சத்தை மிகச் சிறப்பானதாக வடிவமைத்து நம் கடமையை நிறைவேற்ற முடியும்.

    
                                         26
    
     அதற்க்கு  முதலில்,  அடிப்படை  வாழ்க்கையை  சீரமைப்பது   பற்றி  பார்ப்போம். பெண்கள் விபரம் தெரிந்த நாள் முதலே, ஒரு கைகுழந்தையுடன் விளையாடி இருப்பார்கள், அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை மற்றவர்களின் குழந்தைகளை தூக்கி கொஞ்சியிருப்பார்கள், எல்லா குழந்தைகளுமே எப்போது அழப்போகிறது, எப்போது ஆய் போகிறது, என்று யாரும் சொல்ல முடியாது. பொதுவாக ஒரு குழந்தை இப்படித்தான், இருக்கும் என்று புரிந்துகொள்ள முடிவதால், தங்களுக்கும் ஒரு குழந்தை பிறந்தால், அது செய்யும் அறியாமை செயல்களை பொறுத்துக் கொண்டு, குழந்தையை சுலபமாக வளர்க்க முடிகிறது. அதுபோல பெண்கள் விபரம் தெரிந்த நாள் முதலே பல ஆண்களுடன் விளையாடியிருப்பார்கள், அப்பா, மாமா, அண்ணன், தம்பி, நண்பன் என்று பல வகையான ஆண்களை, அவர்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்துக்கொண்டு, ஒரு பொதுவான ஆண் இப்படித்தான் இருப்பான், என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் மற்ற எல்லா ஆண்களையும் விட கணவன் என்பவன் முற்றிலும் மாறுபட்டவனாக, தன் எதிர்பார்ப்புகளுக்கு அப்பார்ப்பட்டவனாக இருப்பதை, பெண்கள் திருமணத்திற்க்கு பிறகுதான் தெரிந்துகொள்கிறார்கள்.

     காலையில் வெள்ளை வேட்டியும் சட்டையுமாக இருக்கிறான், அதுவே இரவு வந்து விட்டால் கொரிலா குரங்காகிவிடுகிறானே! இவனை எப்படி சமாளிப்பது? என்று புரியாமல் தவிக்கிறார்கள் பெண்கள். பெண்களை பொறுத்தவரை, தங்களுக்கு அன்பையும், பாதுகாப்பையும் தருபவனாக தன் கணவன் இருக்கவேண்டும், என்று எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் அப்படி இல்லை. ஆண்களுக்கு எதற்க்கு பாதுகாப்பு? ஆண்களுக்கு  திருமணம் செய்ய பல காரணங்கள் இருந்தாலும், பெண்ணை தொட்டு ரசிக்கனும் என்ற காரணம்தான், அதிக சதவீதத்தை பெற்றிருக்கும்.

     பெண்களுக்கு உடலுறவு பற்றிய அறிவு கற்றுத்தரபடுவதில்லை. மாறாக உடலுறவு பற்றி சிந்திப்பதும், அதைப்பற்றி படிப்பதும், பேசுவதும் கீழ்த்தனமான செயல் என்று கற்றுத்தரப்படுகிறது. அதனாலேயே பல பெண்கள், சுலபமாக ஏமாறுவது மட்டுமில்லாமல் பலவித நோய்களுக்கும் ஆளாகிறார்கள். ஆண்களின் சந்தேக புத்திக்கு பயந்தே, பல பெண்கள் இதைப் பற்றி தெரிந்துகொள்ள பயப்படுகின்றனர். உடலுறவு என்றால் என்ன?, கரு எப்படி உருவாகிறது?, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை எந்த வழியாக வெளியே வரும்? இது எல்லாவற்றையும் பல பெண்கள் தங்கள் திருமணத்திற்க்கு பிறகுதான் தெரிந்துகொள்கிறார்கள்.

     ஆனால் ஆண் அப்படி இல்லை. பல வகையான காமகதைகளை படித்து, பல வகையான பலான படங்களை பார்த்து, பேசி, ரசித்து, அதில் பல கற்ப்பனைகளை வளர்த்துகொள்கிறான். தன் மனைவி இப்படி இருக்கனும், தன்னிடம் அப்படி நடந்துக்கனும் என்ற அளவு கடந்த எதிர்பார்ப்புகளை கொண்டவனாக ஆண் இருக்கிறான். கணவன் எதிர்பார்த்தபடி மனைவி இருப்பதில்லை, மனைவி எதிர்பார்க்க முடியாதபடி கணவன் இருக்கிறான். இந்த வாழைப் பழத்திற்க்கும், தேங்காய்க்கும் திருமணம் செய்துவைத்தால் குடும்பம் நடக்குமா?

     திருமணம் என்பது, காமத்தை கடக்கின்ற ஒரு பாலமாகவும் இருந்தன. ஆனால்  இன்றோ திருமணம் என்றால் வெறும் வியாபாரம்தான். உன்னிடம் எவ்வளவு இருக்கிறது, என்னிடம் எவ்வளவு இருக்கிறது, திருமணத்திற்க்கு பிறகு தனக்கு எவ்வளவு கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிகிறது. இப்படி, சரியாக தங்கள் திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாததால், பாலத்தில் தள்ளாடி காமத்திலேயே விழுந்து கிடக்கிறார்கள்.
                                         27

     சமுதாய சீரழிவிற்க்கு பெரியவர்களின் பங்குதான், பெரும் பங்கு வகிக்கிறது. இளம் தம்பதிகளை சந்தோஷமாக வாழவிடாமல், அவர்களுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை, விருப்பங்களை மற்றவர் முன் வைப்பது தவறில்லை. ஆனால் அதை கட்டளையாக முன் வைப்பது தவறு.

     இந்த வாழ்க்கைக்கான அர்த்தமே, நம் சந்ததிகளை உருவாக்கி, வளர்த்து அவர்களை, அவர்கள் சொந்த காலில் நிற்க்க வைப்பதற்க்கான போராட்டம்தான். அப்படி தங்களுடைய வாழ்க்கையை, தீர்மானிக்கின்ற அறிவை குழந்தைகள் பெற்றுவிட்டால், பெற்றவர்களுக்கு வந்த வேலை முடிந்துவிட்டது. அதனால் சற்று ஒதுங்கிக் கொள்வதுதான் சிறந்தது. ஆனால் திருமணத்திற்க்கு பிறகும் தங்களின் குழந்தை, தங்கள் பேச்சைத்தான் கேட்கவேண்டும், என்று எதிர்பார்ப்பது சரியா???

     இவை எல்லாவற்றையும் விட, குழந்தை பெற்றுக்கொள்வதே, அவர்களை வளர்த்து ஆளாக்குவதே, தங்களை கடைசி காலத்தில் காப்பாற்ற ஆள் வேண்டுமே என்பதற்க்காகத்தான், என்பது எவ்வளவு கீழ்த்தனமான எண்ணங்கள்? மிருகங்கள்கூட இப்படி வாழ்வதில்லையே? இந்த ஒரே ஒரு எண்ணத்தின் விளைவுதான், இன்று சமுதாயத்தில் அத்தனை குற்றவாளிகளையும் உருவாக்குகிறது. தன் மகளைத்தான் வேறொரு வீட்டிற்க்கு அனுப்பிவிட்டோம், மகளை இழந்த பிரிவே பெரும் வேதனை. இதில் மகனும் போய் விட்டால், நாம் அனாதையாகி விடுவோமோ! என்ற பயம், பெற்றவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்ப்படுத்துகிறது.

     தன் மகன் மீது கொண்ட அளவுகடந்த அன்பு, தன் மருமகள் மீது அளவுகடந்த வெறுப்பிற்க்கு காரணமாக அமைகிறது. மகனும், மருமகளும் மகிழ்ச்சியாக இருப்பதை பெற்றவர்களால் குறிப்பாக மாமியாரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எங்கு தன் மீது உள்ள அன்பு மகனுக்கு குறைந்துவிடுமோ?, மகனை தன்னிடமிருந்து பிரித்துவிடுவாளோ? இந்த மருமகள், என்ற பயம் மாமியாரின் எண்ணத்தை தாருமாறாக சிந்திக்க வைக்கிறது. இதற்க்கு மருமகள் என்ன சும்மாவா? மாமியார் 8 அடி பாய்ந்தால், மருமகள் 80 அடி பாய்கிறாள்.

     நிலைகுலைந்த பெற்றோரோ, குழைந்தைகள் மீது பழி சுமர்த்திவிட்டு, முதியோர் இல்லம் சென்றுவிடுகிறனர். பிறகு, ஆமாமா! தென்னையை வைத்தால் தண்ணீரு, பிள்ளையை பெற்றால் கண்ணீரு, என்று பழமொழி பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பர்.  ஆமாம் பெரியவர்களே, இந்த பழமொழி உங்க திருமணத்திற்க்கு முன்பே தெரியும்தானே? பிறகு எதற்க்காக குழந்தை பெற்றுக்கொண்டீர்கள்? ஓ! உங்களுடைய ஆண்மையையும், பெண்மையையும் நிரூபிப்பதற்க்காக பெற்றீர்கள். சரிதானே? முதலில், தான் எதற்க்காக பிறந்தேன்? என்ற கேள்விக்கே பதில் தெரியாத போது, வேறெந்த கேள்விக்கு பதில் சொல்லப் போகிறீர்கள்?

     பிறந்ததே வாழ்வதற்க்காகத்தான், பெற்றுக்கொண்டதே வாழ வைப்பதற்க்காகத்தான், என்பதை எத்தனை பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடிந்தது? எத்தனை பேர், தங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறை ஆட்சிக்கு வருவதை ஏற்றுக்கொள்கின்றனர்? தானே தன் ஆயுள் முடியும் வரை, அனைத்து அதிகாரங்களையும் கொண்டவராக இருக்க வேண்டும், என்று தானே நினைக்கின்றீர்கள்? குழந்தையாக இருக்கும் வரைதான், பிள்ளைகள் பெற்றவர்களுக்கு சொந்தம். அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டால், அவரவர் துணைகளுக்குத்தான் சொந்தம். வேறுயாரும் அவர்கள் மீது உரிமை கொண்டாடக் கூடாது.

                                         28
     பெரியோர்களே, தாய்மார்களே, தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் திருமணம் முடிந்த பிறகாவது, அவர்கள் விருப்பங்களுக்கு வாழவிடுங்க, அவர்களுக்கும் அறிவு உண்டு. குடும்ப பொறுப்பை ஏற்று நடத்துவதற்க்கான வாய்ப்பை அவர்களுக்கு கொடுங்க, தம்பதிகளுக்கு சரியான வழிகாட்டியாக இருங்க. குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும், என்று முடிவெடுக்கும் உரிமையை தம்பதிகளுக்கு கொடுங்க. நான் சாகப்போகிறேன், அதற்க்குள் என் பேர குழந்தையை பார்க்கவேண்டும் என்று அடம்பிடிக்காதீர். அப்படி நீங்க கொடுக்கும் நெருக்கடியால், உடனே குழந்தை பெற்றுக்கொள்ளும்  தம்பதிகள், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர். கணவனின் இச்சைகளை தீர்க்க முடியாதவளாக மனைவியும், மனைவின் வலிகளை உணர முடியாதவனாக கணவனும் மாறிப்போனால், குடும்பத்தில் நிம்மதி இருக்குமா?
  
     அதனால் தயவுசெய்து உங்களுடைய அதிகாரங்களை தம்பதிகள் மீது தினிக்காதீர். அப்படி தினிக்கும் போது, தம்பதிகளுக்குள் இருக்கும் அன்பு விரிசலடைகிறது. அவர்களால் நிம்மதியாக, உடலுறவு வைத்துக்கொள்ள முடியாமல் போகிறது. அது நாளடைவில் சண்டை சச்சரவுகளை ஏற்ப்படுத்துகிறது. அதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இப்படி சிதைந்து போகின்ற குடும்பத்திலிருந்துதான் குற்றவாளிகள் உருவாகிறார்கள். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்க்கான வாய்ப்பையும், கால அவகாசத்தையும் தர வேண்டியது பெரியவர்களின் கட்டாயக் கடமை. இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளிப்பதற்க்கு திருமணத்திற்க்கு முன்பாகவே ஒரு ஆண் இப்படித்தான் இருப்பான், ஒரு பெண் இப்படித்தான் இருப்பாள், என்ற அவரவர் மரபணு தகவல்களை முழுவதும் குறிப்பெடுத்துக் கொண்டால், அது தங்களின் வாழ்க்கை துணையை புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும்.

     நான் ராமசாமியை திருமணம் செய்யப்போகிறேன், நான் கந்தசாமியை திருமணம் செய்யப்போகிறேன், என் கணவர் மற்ற ஆண்களை போல இருக்கமாட்டார், அவர் மிக நல்லவர், என்ற நம்பிக்கையில் திருமண வாழ்க்கையை ஆரம்பித்த சில காலங்களிலேயே, ச்சே! இவனும் இப்படித்தான், எல்லா ஆண்களும் ஒரே மாதிரித்தான் இருக்காங்க, என்று வெறுப்படைவதை விட, அடிப்படையில் ஆண் இப்படித்தான் இருப்பான், என்று புரிந்துகொண்ட பிறகு வாழ்க்கையை துவங்கினால், ஆண் மீது கோபம் கொள்வது குறையும். இதே உதாரணம் ஆண்களுக்கும் பொறுந்தும்.

     அதனால் நான் ராமசாமியை திருமணம் செய்யப்போகிறேன், நான் கீதாவை திருமணம் செய்யப்போகிறேன், என்று நினைத்துக்கொள்ளாமல், நான் ஒரு ஆணை திருமணம் செய்யப்போகிறேன், ஒரு ஆணோடு குடும்பம் நடத்தப் போகிறேன், நான் ஒரு பெண்ணோடு என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளப்போகிறேன், என்று நினைத்துக் கொண்டால், வாழ்க்கை அர்ப்புதமாக இருக்கும். அதற்க்கு முன் ஆண், பெண் மரபணுவில் உள்ள அடிப்படை தகவல்களை குறிப்பெடுக்கவேண்டும். அதற்க்காக அமெரிக்காவில் இருந்து விஞ்ஞானிகளையோ, திபெத்திலிருந்து ஜென் துறவிகளையோ வரவழைக்கனும் என்பதில்லை. நீங்களே ஒரு பேப்பரும், பேனாவும் எடுத்துக்கொண்டு எழுத முடியும். பொதுவாக ஆண் உயிரினங்கள் எல்லாமே இனப் பெருக்கத்திற்க்காக, சிற்றின்பத்திற்க்காக பெண் உயிரினங்களை வழுக்கட்டாயமாக இனங்க வைக்கும். இதே செயலை பெண் உயிரினங்கள் செய்வதில்லை. மற்றும் எந்த பெண் உயிரினங்களும், ஆண் உயிரினத்தின் முன் நின்று, என்னை புணர் என்று சொல்வதில்லை. ஆண்; பெண் மீது மோகம் கொண்ட அளவிற்க்கு, பெண்; ஆண் மீது மோகம் கொள்வதில்லை.  
                                     
                                         29  
   
     ஒருவேளை, இரு உயிர்களும் சமஅளவு காம உணர்வுகள் கொண்டவையாக படைக்கப்பட்டிருந்தால், இனப்பெருக்கம் தாருமாறாக போயிருக்கும். அதனால் இனவிருத்தியும் நடக்கனும், அதே சமயம் இனம் பல்கி பெருகிடவும் கூடாது. அதனால், ஒன்றிற்க்கு 90 சதவீதமும், ஒன்றிற்க்கு 10 சதவீதமும், காம உணர்வுகளை கொண்டவைகளாக இருப்பதால்தான், உலகத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எப்போதுமே மயக்கியது ஆண், மயங்கியது பெண்.

     பருவ வயதில் ஆண், பெண்ணின் அங்கங்களை கண்டு ரசிப்பது தவறில்லை, அதை சரி செய்யவும் முடியாது. அது இன விருத்திக்காக இயற்க்கை எழுதிய தகவல். காமம் என்பது ஆணுக்கு அனிச்சை செயல். அது கற்றுக்கொடுக்கப்படுவதும் இல்லை, தானாக கற்றுக்கொள்வதும் இல்லை. அதுவே பெண்களுக்கு அப்படி அல்ல. பருவ வயதில் பெண்களுக்கு ஆண் மீது ஒரு இனம் புரியாத விருப்பம் ஏற்ப்படும், ஆனால் அது உடலுறவை அடிப்படையாக கொண்டது அல்ல.

     சரி இந்த காம விளையாட்டில் பெண்கள் மட்டும், ஏன் முழு வலியையும் அனுபவிக்க வேண்டும்? ஒருவேளை பெண்களின் வாழ்நாள் வேதனைகளுக்கும், இனப்பெருக்கத்திற்க்கும், சந்ததிகளை பராமரித்து வளர்க்கும் குணத்தை பெருவதற்க்கும் சம்பந்தம் இருக்கலாம். பெண் அனுபவிக்கின்ற வலியை நிவர்த்தி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் தாங்கொணா வேதனையை தாங்கி உயிர் வாழ்ந்து காட்டுகிறாளே! என்ற பெருமையையாவது பெற்றுத்தர வேண்டும்.

     பெண்களின் பெருமையையும், அவள்படும் வேதனையையும், எப்படி ஆண்களுக்கு புரியவைப்பது? ஆண்களின் காமயிச்சைகளை தீர்த்து வைப்பதற்க்கான காரணத்தை எப்படி பெண்களுக்கு புரியவைப்பது? பெண்களின் வலியை உணர்ந்த ஆண், மேலும் துன்புருத்துவதை நிருத்திக்கொள்கிறான். அதுவே ஆணின் இச்சைகளை தீர்த்து வைத்தால், பெண் அவள் வலிகளில் இருந்து விடுபட முடியுமா? முடியாது. வலி வலிதான். ஆனால் ஆணிடமிருந்து கிடைக்கப் பெற்ற அன்பும், மரியாதையும் பெண்ணின் வலியை மறக்கச் செய்யும்.
    
     இளம் தம்பதிகளே!, உங்களுக்கு திருமணம் முடிந்த உடனே குழந்தை பெற்றுக் கொள்ளும் செயலில் இறங்காதீர். திருமணம் என்பது, குழந்தை பெற்றுக் கொள்வதற்க்காக மட்டும் அது வடிவமைக்கப் படவில்லை. அதற்க்கு பல காரணங்கள் உள்ளன. அதனால் உங்களுடைய வாழ்க்கையை துவங்கி குறைந்தது, ஒரு வருடமாவது சிற்றின்பத்தில் மூழ்கியிருங்க. அப்போதுதான், மனம் அதிலிருந்து வெளியேரும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைப் பற்றி சிறப்பாக சிந்திக்கும்.

     ஒருவருடத்திற்க்கு பிறகு நாம் எதற்க்காக குழந்தை பெற்றுக்கொள்கிறோம்? என்ற கேள்விக்கான பதிலை எழுதிவைத்து விட்டு, பிறகு பெற்றுக்கொள்ளுங்க. ஆனால் அந்த பதிலை உங்கள் ஆயுள் முடியும் வரை ஞாபகத்தில் வைத்திருங்க. மற்றும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவும், அதாவது உங்களுக்கு எப்போது திருமணம் ஆகிறதோ, அதே காலகட்டத்தில் உங்க அம்மாவும், உங்க மாமியாரும் மாதவிடாய் நிற்க்கும் காலத்தை கிட்டத்தட்ட நெருங்கியிருப்பார்கள். 35-45 வயதுபெண்களுக்கு இது பெரும் வேதனை தரும் காலம். தன் வேதனையை யாராவது புரிந்து கொள்ளமாட்டார்களா? என்ற ஏக்கம் உருவாகும்.

                                         30

     அந்த நேரத்தில் அவர்களை யாரேனும் உதாசீனப்படுத்திவிட்டாலோ, தன் வார்த்தைக்கு யாரேனும் முக்கியத்துவம் தர மறுத்தாலோ, அது மேலும் மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், ஏற்ப்படுத்துகிறது. அதனாலேயே அவர்கள் பல நேரங்களில் கோபம் கொண்டவர்களாக இருப்பாங்க. ஆகவே அவர்களுடைய பிரச்சனைகளையும், மன நிலையையும் புரிந்துகொண்டு, அந்த நேரத்தில் அவர்களுக்கு கொஞ்சம் உதவியாக இருங்க. தயவுசெய்து பெரியவர்களை பழிவாங்கும் செயலில் இறங்காதீர். அதுபோல தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், ஒற்றுமையாக வாழவும், தங்களால் இயன்ற ஒரு முயற்ச்சியை மற்ற துறையினரும் எடுத்துக் கொள்ளனும்.

உதாரணத்திற்க்கு மருத்துவர்:
     மனைவிக்கு, 1) ஒழுங்கற்ற மாதவிலக்கு, 2) பிறப்புறுப்பில் ஏதோ பிரச்சனை,     3) குழந்தை பிறப்பதற்க்கு கால தாமதம் ஆகிறது. இப்படி ஏதோ ஒரு காரணத்திற்க்காக, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான் கணவன். அங்கு பெண் மருத்துவர் ஆணிடம் சொல்லும் முதல் வார்த்தை, தம்பி நீ கொஞ்சம் வெளியே இரு, நாங்க கொஞ்சம் பேசனும் என்று. இந்த இடத்தில் மருத்துவரும், தன் மனைவியும் என்ன பேசிக் கொண்டார்கள், மருத்துவர் என்ன பரிசோதனையை எப்படி செய்தார், என்பதை தெரிந்துகொள்ளும் வாய்ப்பை, வெளியே காத்திருக்கும் கணவன் இழந்து விடுகிறான். 

     மருத்துவர் அந்த பெண்ணை பரிசோதித்து விட்டு, உனக்கு பிறப்புறுப்பில் நோய்த் தொற்று உள்ளது, நான் அதற்க்கு மருந்து தருகிறேன், இது ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பின்நாளில் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்பாக மாறும், இதற்க்கான காரணிகளில், ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளாததும் ஒன்று. இப்படி மருத்துவர் அந்த பெண்ணிடம் சொல்கிறார், என்று வைத்துக்கொள்வோம். இப்போது வெளியே வந்த பெண், தன் கணவரிடம் உள்ளே நடந்ததை எப்படி விளக்கிச் சொல்வாள்? எப்படி தன் வலியை கணவனுக்கு புரியவைப்பாள்? ஒருவேளை உடலுறவு சம்பந்தப்பட்ட ஒரு தகவலை மனைவி, தன் கணவனுக்கு எடுத்துச் சொல்ல முயன்றால் என்னவாகும்? சந்தேகம் என்ற பேய், இருவரில் ஒருவரையாவது பிணவறை மேஜை மீது படுக்கவைத்து விடும்.

     ஆண்களை பொருத்தவரை பெண் அனுபவிக்கின்ற வலிகளை உணர்த்துவதற்க்கான, ஒரு சரியான நபர், அவன் வாழ்நாளில் கிடைப்பதே இல்லை. அம்மாவோ, சகோதரியோ, மகளோ, பாட்டியோ, பேத்தியோ, தோழியோ அவர்கள் வேதனையை ஆண்களிடம் பகிர்ந்து கொள்வதே இல்லை. இதைச் சொல்லக்கூடிய ஒரே ஒரு நபர் மனைவியாக இருந்தாலும், மனைவி மீது மரியாதை இழந்த கணவனால், அதை புரிந்து கொள்ள முடிவதில்லை. பெண்ணை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம், மனதில் ஆழமாக பதிவாகியிருக்கும் ஆண்களால், மேலும் வலியைத்தான் தர முடிகிறது. அதனால் பெண் மருத்துவரே! நீங்க மற்றொரு பெண்ணிற்க்கு உதவிசெய்வதாக நினைத்துக்கொண்டு, வெறும் காயத்திற்க்கு மருந்து தடவும் மருத்துவராக இல்லாமல், சில சமயம் மனோதத்துவ மருத்துவராகவும் செயல்படுங்க. pls.

     உடலுறவைப் பற்றிய அடிப்படை கல்வியை, பெண்களுக்கு அவர்கள் கணவரை அருகில் அமரச்செய்து, நாகரீகமாகவும், மிகச் சரியாகவும் கற்றுத்தர உங்களால் மட்டுமே முடியும். மனைவி சொல் கேளாதவன், குறைந்த பட்சம் மருத்துவர் சொல்லியாவது கேட்ப்பான் இல்லையா? உங்களை சந்திக்க வரும் தம்பதிகள், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்க்கான ஒரு சிறு முயற்ச்சியை, மருத்துவர்கள் எடுத்துக்கனும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகொள்.
                                         31

     வேறெந்த வழியில் பெண்ணின் வலியை, ஆணிற்க்கு உணர்த்தலாம்? பிறசவ அறை. இதற்க்குள் கணவனை அனுமதிப்பதால் என்னவாகும்? தன் மனைவியின் அலரல் குரழுக்கு, தன்னால் இயன்ற ஆருதலை, தன் மனைவியின் கரங்களை பற்றிக்கொண்டு சொல்ல முயற்ச்சிப்பான். அவள் தன் கண்களை இருக்கிக்கொண்டு, வயிற்றை முக்கித் தினறும் போது, பிறப்புறுப்பை கிழித்துக்கொண்டு, குருதியும், கோழையும், மலமும் சேர்ந்த கலவையோடு குழந்தை வெளியே வரும் அந்த காட்சியை பார்த்தால், கணவன் அதிர்ந்து போவான்.

     அதுவரை சூடாக துடிதுடித்துக் கொண்டிருந்த தன் மனைவியின் கரங்கள், அப்படியே செயலற்று ஜில்லென்று ஆனதை உணரும் தருணம், கணவனின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும் அர்ப்புத தருணம். பெண்ணை பழிவாங்க வேண்டும் என்று ஆண் மரபணுவில் எழுதப்பட்ட தவறான தகவலை அழிக்கும் ரப்பராக, பிறசவ அறையை மாற்ற முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.

ஊடகங்கள்:
    
     பெண்களை கேலிச் சித்திரமாக, அவள் அங்கங்களை ஆபாச படங்களாக வெளியிடுவதால், சமுதாயத்தில் பெண்களுடைய மரியாதை, குறைந்து போகிறது. அதனால் பெண்களை பொக்கிஷ உயிர்களாக மதித்து போற்ற வேண்டும், என்ற எண்ணம் மறைந்து, அவளை அடிமைப்படுத்திக்கனும், அனுபவிக்கனும், என்ற எண்ணம்தான், மேலோங்கி நிற்க்கிறது. தகவல்களை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டிய ஊடகங்கள், தவறுகளைதான் அதிகம் சேர்க்கிறது.

     கடைகளில் தொங்கும் பத்திரிக்கைகளும், வார இதழ்களின் அட்டை படங்களும், ஆபசங்களையே தாங்கி நிற்ப்பது, யாரை வேண்டுமானாலும் கேலிச் சித்திரம் வரைவது, நடுநிலையற்ற செய்திகளை வெளியிடுவது, ஓ! இதைத்தான், பத்திரிக்கை சுதந்திரம் என்கிறார்களோ? பத்திரிக்கைகள், எதை அச்சிடுகின்றதோ அதைதான், மக்கள் படிகின்றனர். ஆனால் எப்படியாவது, தங்கள் பத்திரிக்கையை மக்களை வாங்கச் செய்ய வேண்டும், எப்படியாவது, தங்களுடைய பத்திரிக்கை விற்ப்பனையில் முதலிடம் பெறச்செய்ய வேண்டும் என்பதற்க்காக, ஆபாசங்களை அச்சிடுகிறதா? அல்லது இந்த ஆபாச படங்களை பார்த்தாவது நம் பத்திரிக்கையை யாரேனும் வாங்க மாட்டார்களா? என்ற நிலையில் பத்திரிக்கைகள் செயல்படுகிறதா? என்பதை எண்ணிப் பார்த்தால், அந்தோ பரிதாபம்! மத்திய அரசே! மானியம் கொடு! இல்லையேல் பட்டினிச்சாவு அடையப்போகிறது, அல்லது டுமாரோவ் நெவெர் டைஸ் பட வில்லனாகி விடப்போகிறது, பத்திரிக்கை.

     சினிமாவில், பாலியல் குற்றவாளிகளை துவம்சம் செய்வதைப் போல படம் எடுக்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால், அதில் உள்ள பாடல் காட்சிகள் எல்லாமே பெண்களை இழிவு படுத்துவதைப் போன்றுதானே உள்ளது! நீங்க சமுதாயத்திற்க்கு, என்னதான் சொல்ல விரும்புகிறீர்கள்? சினிமாவின் உண்மையான கோட்பாடுதான் என்ன? அதாவது, பெண்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொண்டு, எந்த ஆடையில் வேண்டுமானாலும் நடிக்க வைத்து விட்டு, கடைசியில் பெண்கள் நாட்டின் கண்கள், என்பதா? சின்னத்திரையை எடுத்துக்கொண்டால், வீணாக பொழுதை கழிப்பதற்க்கும், நாடகங்கள் பார்ப்பதற்க்கே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பெண்களை நாடக பைத்தியங்களாக மாற்றுகின்றன. ஊடகங்களுக்கு, மக்களை மேம்பட்ட மக்களாக மாற்றக்கூடிய ஆற்றல் இருந்தும், அதற்க்காக முழு முயற்ச்சி எடுத்துக் கொள்வதில்லை.                   32
     மக்களுக்கு அறிவை கொண்டு சென்று சேர்க்க வேண்டும், என்ற ஆர்வம் கொண்டிருந்தால் தானே, மக்கள் அறிவியலில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆபாசங்களை கொண்டு சென்று சேர்த்தால், காம பேய்களாகத் தானே இருப்பார்கள். நான் சிறு வயதில், டிஷ்கவரி, நேஷ்னல்ஜாக்ரபி சேனல்களை பார்க்கும் போது எனக்கு ஒன்றுமே புரியாது. யாராவது இதை தமிழில் மொழி பெயர்த்து சொல்ல மாட்டார்களா? என்று ஏங்கிய காலங்களும் உண்டு. ஆனால் இதில் என்ன ஒரு ஆச்சர்யம் பாருங்க!, நாம் பிரபஞ்சம் முலுவதும் பல ஆராய்ச்சிகளை செய்து, அதை உலக மக்களுக்கு ஒளிபரப்புகிறோமே, அது உலகத்தின் எந்த ஒரு மூலைக்கும் சென்றடைகிறதா? அது எல்லாவித மொழி சார்ந்த மக்களுக்கும் புரிகின்றதா?, மக்கள் அறிவியலை விரும்புகிறார்களோ இல்லையோ, நம்முடைய  சேனலை பார்க்கிறார்களோ இல்லையோ,

     ஆனால் மக்களுக்கு அறிவியலை, அவர்களுக்கு புரியும்படி சொல்லவேண்டும் என்றால், அது அவரவர் தாய்மொழியில் அமைந்தால் சிறப்பாக இருக்கும், என்று யோசித்து, அதற்க்காக தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பனித்துக்கொண்ட அறிவியல் சார்ந்த சேனல்களுக்கு, எனது நன்றிகளை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். (இதில் என்ன கொடுமை என்றால், இந்த சேனல்களோ என் வீட்டில் ஒழுங்காக தெரிவதில்லை, அதையும் பார்பதற்க்கு கூட என் மனைவியிடம் ரிமோடிற்க்காக சண்டை போடனும்.) மாபெரும் சக்திவாய்ந்த, மதிப்பிற்க்குரிய ஊடகங்களே! சற்று சிந்திப்பீர், நீங்க அவர்கள் போல மற்ற நாடுகளுக்கு சென்று அவர்கள் தாய்மொழியில் அறிவை கற்ப்பிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் உங்கள் நாட்டு மக்களை அறிவு படைத்தவர்களாக, மாற்றும் முயற்ச்சியை நீங்க எடுத்துக்கொள்ளனும் தானே.

கல்வி நிறுவனங்கள்:
     சமுதாயத்தில் பெண்களை பெருமைப் படுத்த உங்களுடைய உதவியும் தேவைப்படுகிறது. குழந்தைகளின் பெயரில் தந்தை பெயரை மட்டும் சேர்த்துக் கொள்வதும், மதிப்பெண் சான்றிதழில் தந்தையிடம் மட்டும் கையொப்பம் வாங்கச் செய்வதும், எதை உணர்த்துகின்றது என்றால், தாய் என்பவள் வீட்டு வேலைக்காரி என்பதைத்தான். குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக்கொள்ளும் போதே, குழந்தையின் பெற்றோரின் பெயர்களை அறிந்து, தாயின் பெயரை முதன்மை படுத்தியும், தந்தையின் பெயரை இரண்டாவதுமாக குழந்தைக்கு இனிசியலை அமைப்பதும், மதிப்பெண் சான்றிதழில் தாய், தந்தை இருவரும் கையொப்பமிட காலொம் ஒதுக்குவதும்,  தாய்மைக்கு பெருமை செய்ததாகத் தானே இருக்கும். தயவு செய்து இன்னும் சிலவற்றையும் முயன்று பாருங்கள் தலைமை ஆசிரியரே.
ரிசர்வ் வங்கி:
     ரிசர்வ் வங்கி கவர்னர்களே! காந்தி தாத்தா ஒருவர் மட்டும்தான், இந்தியாவிற்க்காக போராடி சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர், அதில் எந்த பெண்களும் கலந்து கொள்ளவில்லை, என்று நினைத்துக் கொண்டாலும், குறைந்தபட்சம் பெண்ணை பெருமைப்படுத்தும் விதமான, ஒரு சிறந்த ஓவியம் கூடவா உங்கள் கண்களுக்கு தெரியாமல் போனது? காண்டாமிருகம், புலி, யானை போன்ற மிருகங்களின் உருவங்களை எல்லாம் பெரிதாக ரூபாய் நோட்டில் அச்சிட இடமிருக்கும் போது, ஒரு பெண்ணுடைய உருவத்தை சரியாக அச்சிடுவதால் என்ன குறைந்துவிடும்? ரூபாய் நோட்டில் தேசத் தந்தை இருக்கின்றார், தேசத் தாய் எங்கே? ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகளை சமநிலை படுத்த, அனைத்து மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டிலும் பெண்களின் உருவத்தை அச்சிட்டால், அது சமுதாயத்தில் ஒரு சிறு மரியாதையாவது அவர்களுக்கு பெற்றுத்தரும்.               33

அரசாங்கம்:
    
     அரசாங்கமும், பெற்றோரும் ஒன்றுதான். பெற்றவர்கள் வீட்டை நிர்வாகம் செய்கின்றனர், அரசாங்கம் நாட்டை நிர்வாகம் செய்கிறது. இதில் இரண்டுமே ஒரே தவறைத்தான், தொடர்ந்து செய்கிறது. அது ஓரவஞ்சனை. ஆண்களுக்கே முக்கியதுவம் அளிப்பது. ரேசன் அட்டையில் குடுபத் தலைவர் என்று அச்சிடுவதற்க்கு பதிலாக, குடும்பத் தலைவர்கள் என்று அச்சிட்டு, அதில் இருவரின் புகைப் படங்களும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ரெவினியுவ் ஸ்டாம்ப், முத்திரை தாழ்கள், அரசாங்க முத்திரைகள், அரசு வழங்கும் அனைத்து விருதுகள் என்று எல்லாவற்றிலும் பெண்களின் ஓவியத்தை அச்சிட்டால், அது நிச்சயம், பெண்களுக்கு உயர்வான மதிப்பை பெற்றுத் தரும்.  

     பொழுது விடிந்தால் ஒரு சட்டம், பொழுது அடந்தால் ஒரு சட்டம், என்று சட்டங்களை இயற்றி, ஏன் ஐயா மக்களின் உயிரை வாங்குகின்றீர்? ஒரு நாட்டில் எந்த அளவிற்க்கு கடுமையான  சட்டங்களை இயற்றுகிறார்களோ, அந்த அளவிற்க்கு அறிவீன மக்கள் வாழ்கிறார்கள், என்றுதான் அர்த்தம். இது காலப்போக்கில், பல் தேய்ப்பதற்க்கும், குளிப்பதற்க்கும் கூட, ஒரு சட்டம் இயற்றும் நிலை வரும். சட்டத்தால், மக்களை ஓர் அளவிற்க்கு கட்டுப்படுத்த முடியுமே தவிர, நல்வழிப்படுத்த முடியாது. இதற்க்கு கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து, குழந்தைகளுக்கு பயங்கரமான கல்வியை கொடுத்தால், இன்னும் ஏழே ஆண்டுகளில் நாடு எங்கேயோ போய்விடும், என்பது பலபேர் நம்பிக்கை. ஆனால் எனக்கு இல்லை. முதலில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது, கற்றுகொள்வதற்க்கா?, கருமத்திற்க்கா? என்பதே தெரியவில்லை.

     உதாரணத்திற்க்கு தமிழ் மொழியை எடுத்துக்கொள்வோம், தமிழகம் முழுவதும், தமிழ் பாட புத்தகமும், அதை கற்றுத்தரும் முறையும், என்னவோ ஒரே மாதிரித்தான் உள்ளது. ஆனால், அதை கற்றுகொள்ளும் குழந்தைகள் அனைத்தும், ஒன்று போலத்தான் பேசுகிறார்களா? இல்லை. காரணம், பெற்றோர்கள் வீட்டில் எந்த முறையில் பேசுகிறார்களோ, அதைத்தான் குழந்தைகளும் பின்பற்றுகிறார்கள்.
    
     ஒரு மொழியே இந்த அளவிற்க்கு, உச்சரிப்பு மாற்றங்கள் கொண்டதாக இருக்குமானால், அதை சரி செய்வதும் கடினம் என்றால், மற்ற பழக்க வழக்கங்கள் எவ்வளவு வித்தியாசம் கொண்டதாக இருக்கும்? அதை சரி செய்வது எவ்வளவு கடினமானதாக இருக்கும்? அதனால், குழந்தைகளுக்கு நல்லதை கற்றுத்தரும் அதே நேரத்தில், பெற்றவர்களுக்கும், பெரியவர்களுக்கும் கற்றுத்தர வேண்டும். தனக்கு வயது முதிர்ந்து விட்டது, தான் கற்றுக்கொள்ள இனி எதுவும் இல்லை, தானே எல்லாம் தெரிந்தவர், என்ற முடிவுக்கு முதியவர்கள் வருவது சரிதானா?         
    
     அதனால் கலாச்சாரத்தில், மறு சீரமைப்பை கொண்டுவர வேண்டும். கலாச்சாரம் என்றால், பலபேர் கல்சுரல் புரொகிராமை நினைத்துக்கொள்கிறார்கள். குடியரசு தினத்திற்க்கு வரிசையாக நடந்து செல்வார்களே! அதைப் போல. உண்மையில் கலாச்சாரம் என்றால், பழக்க வழக்கங்கள் என்று அர்த்தம். நம்முடைய பெற்றோர், நம்மை கைகளை நீரில் கழுவிய பிறகு சாப்பிட அனுமதித்தனர். ஆனால் நாம் நம்முடைய குழந்தைகளை, சோப்பு போட்டு கை கழுவிய பிறகே சாப்பிட அனுமதிக்கின்றோம். நம்முடைய பெற்றோர், நமக்கு காலையில் ஒரு முறை பல் தேய்க்க கற்றுக்கொடுத்தனர். நாமோ நம் குழந்தைகளுக்கு, இரவு உறங்குவதற்க்கு முன்பும், ஒரு முறை பல் தேய்க்க கற்றுத்தருகிறோம். இதுதான் கலாச்சார மேம்பாடு.  

                                         34  
     சாலை சந்திப்புகளில் சிக்னல் இருக்கிறது, நான்கு புறமும் காவலர்கள் இருக்கிறார்கள், கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாம் ஒரு நிமிடத்திற்க்கு கூட, பொறுமை இல்லாமல் முன்னேறிச் சென்று கொண்டே இருப்போம். ஏனேன்றால், மஞ்சள் விளக்கு எரிந்தால், கோட்டை தாண்டிச் செல்லக் கூடாது என்பது சட்டம். அதனால்தான், நம்மால் அதை சரிவர பின்பற்ற முடிவதில்லை. அதுவே இந்த செயல் நமக்குள் ஊரிப்போன பழக்க வழக்கமாக இருந்தால் அதை சரியாக செய்வோம்.

     இப்படி உணவு கலாச்சாரம், உடை கலாச்சாரம் என்று எல்லாவற்றிலும் மேம்பட்ட பழக்க வழக்கங்களை நாம் கற்றுகொள்வதாலும், பிறருக்கு கற்றுகொடுப்பதாலும், சட்டத்தின் கடுமையும், நாட்டில் நடக்கும் கொடுமைகளும் குறையும். அதனால் மேன்மக்களே, தினந்தோறும் சட்டங்களை இயற்றுவதை நிறுத்திவிட்டு, சற்று கீழ் இறங்கி வாங்க. அடித்தட்டு மக்களோடு கொஞ்சம் பேசுங்க, பழகுங்க. உங்களுடைய மேன்மையான பழக்க வழக்கங்களை, நற்குணங்களை எங்களுக்கும் கற்றுக் கொடுங்களேன். ஏதோ, எனக்கு தெரிந்த சில வழிகளை சொன்னேன். நீங்களும் யோசியுங்க.  

பெண்களின் மார்பகங்கள்:
    
     எத்தனை பேருக்கு இதைப்பற்றித் தெரியும்? குறிப்பாக பெண்களுக்கு? பெண்களின் மார்பகங்கள் என்றால் என்ன? அது எதற்க்காக பயன்படுகிறது? குழந்தைக்கு பால் கொடுக்கவா? நம் உடலில் கண்கள் பார்க்க மட்டுமா செய்கிறது? சில நேரங்களில் பேசவும் செய்கிறது. வாய் பேச மட்டுமா செய்கிறது? உணவை உள்ளே தள்ளவும் செய்கிறது. மூக்கு சுவாசிக்க மட்டுமா செய்கிறது? சில நேரங்களில் வாசனைகளை கண்டுபிடிக்கிறது. கைகள் பொருளை பற்றிக்கொள்ள மட்டுமா செய்கிறது? நடக்கவும் உதவுகிறது. அடுத்து நான் என்ன எழுதுவேன் என்று தெரிந்தால், கொஞ்சம் சிரித்துக் கொள்ளவும். நோ, நோ, அதிகம் சிரிக்க கூடாது.  

     அது போல நம் உடலில் உள்ள ஒரு சில உறுப்புகள் ஒன்றிற்க்கும் மேற்ப்பட்ட வேலைகளை செய்யும். அப்படியானால் பெண்களின் மார்பகங்கள், குழந்தைக்கு பால் கொடுக்க மட்டும் தானா? இல்லை. அதுதான், ஆண்களின் காம இச்சைக்கான தூண்டுகோள். இது ஆண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆண்களால் இதன் மீது விருப்பம் இல்லாமலோ, பார்க்காமலோ இருக்க முடியாது.

     உதாரணத்திற்க்கு ஒரு மேஜையை எடுத்துக்கொள்வோம், அதன் ஒரு முனையில், ஏதோ ஒரு வண்ண பெட்டியை வைத்து, சற்று தொலைவில் அமரச்செய்த ஒருவரை, அதை மட்டும் உற்றுநோக்க செய்துவிட்டு, மேஜையின் மறு முனையில், பல வண்ண பெட்டிகளை மாற்றிக்கொண்டே இருந்தால், மாற்றப்படும் பெட்டியின் வண்ணத்தை சரியாக மனிதனால் சொல்ல முடியும் என்றால்,

     ஆண்கள், பெண்களிடம் பேசும் போது, அவள் கண்களையோ, தலையையோ, கைகளையோ அல்லது வேறு பக்கத்தில் பார்த்தாலும், ஆண்களின் கடைக்கண்கள், பெண்களின் மார்பகங்களையே பார்க்கும். அவள் கவனம் சற்று திசை திரும்பும் நேரங்களில் ஆண், பெண்களின் மார்பகங்களை நேராக உற்று நோக்குகிறான். இந்த விஷயத்தில் எந்த உயிரினமும் செய்யாத செயல்களை மனித இனத்தில் ஆண் செய்கிறான். இச்சைக்கான தூண்டுதலால்தான், இனப்பெருக்கம் நடக்கிறது. மற்ற உயிரினங்களுக்கு, அதிலும் குறிப்பாக கண்களே இல்லாத உயிரினங்களுக்கு எது இனப் பெருக்கத்திற்க்கான தூண்டுதலாக உள்ளது? என்பது ஆச்சர்யமாக உள்ளது.
                                       
                                         35

     ஆனால் ஆண்களுக்கு இச்சைக்கான தூண்டுதலும், தன் சந்ததிகளுக்கு முதல் உணவு அளிப்பதும் பெண்களின் மார்பகங்கள்தான். இப்படி தனி முக்கியத்துவம் பெற்ற மார்பகங்களை சமுதாயம் எப்படி பார்க்கிறது? அதற்க்கான மரியாதையை சமுதாயம் தருகிறதா? குறிப்பாக பெண்கள்? இந்து கோவில்களில் பெண் தெய்வங்கள் அரை நிர்வாணமாக, அவற்றின் மார்பகங்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, அதை எல்லோரும் பார்க்கும் விதமாக, அமைக்கப்பட்டதற்க்கான காரணம் என்ன? கடவுள் சிலைகளே திறந்த மார்பகங்களுடன் இருக்கும்போது, நாம் மட்டும் ஏன் அதை மறைக்க வேண்டும், என்று எந்த பெண்ணாவது கேள்வி கேட்டதுண்டா?

      பெண்களின் மார்பகங்கள் என்று எழுதப்பட்ட ஒரு துண்டுச் சீட்டை பார்த்தாலே, ஆண் தன் சுயநினைவை இழந்துவிடுகிறான், அதை நேரில் கண்டாலோ தன்னையே இழந்துவிடுகிறான். ஆண், பெண்ணின் மார்பை பார்க்கிறான்; பெண், ஆணின் மார்பை பார்க்கிறாள்; இதில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவது ஆண்தான். இப்படிப்பட்ட ஆண் கோவிலுக்கு சென்றால், அங்கு அரை நிர்வாணமாக காட்சியளிக்கும் சிற்ப்பங்களை கண்டால், எந்த பாதிப்பையும் அவனுக்குள் ஏற்ப்படுவதில்லை. காரணம், அந்த சிலைகள் கடவுளின் உருவத்தையும், சத்தியத்தையும் தாங்கி நிற்க்கிறது. அதனால் அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடிவதில்லை. அதுபோல பெண்களும் தெய்வத்தை போன்று மதிக்கப்பட வேண்டுமானால்,

     அதற்க்கு சத்தியமும், சத்தியத்தை பின்பற்றி நடந்தவர்களும், அவளுக்குள் இருக்க செய்தால், நிச்சயம் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. ஆனால் பெண்களுக்குள் இருக்கும் பெண்மை, தாய்மை, பொறுமை, உண்மைகளை அழித்துவிட்டு அவளையும் ஆணாக மாற்றுபவன் ஆண். மாடலிங் துறையிலும், திரைத் துறையிலும் பெண்கள் மார்பகங்களை, உடல் அழகை வெளிப்படுத்துகின்றனறே, என்று அவர்கள் மீது கோபம் கொண்டு பயனில்லை. யார் செயலைச் செய்கிறார் என்பதை விட, யாரால் யாருக்காக செயல் நடக்கிறது, என்பதுதான் முக்கியம்.
    
     அதனால் பெண் தன்னை உணர வேண்டும், தன்னை உருமாற்றிய ஆணை உணர வேண்டும். லோ நேக் வைத்துக்கொள்வது, மார்பு தசைகளை மேல்நோக்கி இழுத்து கட்டிக்கொண்டு, தனக்கும் பருத்த மார்பகங்கள் உண்டு, என்று எல்லோரையும் பார்க்கச் செய்வது, மார்பகங்கள் மீது டேட்டோக்களை ஒட்டிக்கொள்வது, வெளி ஆடைகளை இருக்கமாக அணிவது, மார்பகங்களுக்கு நேராக, ஆடைகளில் வாசகங்களை எழுதிக் கொள்வது, லோகோக்களை அச்சிட்டுக்கொள்வது, போன்ற செயல்களை தயவுசெய்து பெண்களே! நிறுத்திக்கொள்ளுங்கள். அங்கத்தை அழகுபடுத்துவதை விடுத்து, அகத்தை அழகுபடுத்துங்க. சமுதாயம் உங்களை எப்படி பார்க்கனும், உங்களிடம் எப்படி நடந்துக்கனும் என்பதை, உங்கள் ஆடைதான், முடிவு செய்கிறது. அப்படி இதை எல்லாம் செய்து பார்க்க ஆசையாக இருந்தால், உங்கள் கணவர் வீடு திரும்பும் போது, அவரிடம் அழகை வெளிப்படுத்துங்க. அவரும் மகிழ்ச்சியடைவார், உங்களுக்கும் மகிழ்ச்சியாளிப்பார்.

     ஆனால் பெண்கள் இதை உணராமல், தாங்களும் ஆண்களாகத்தான் இருப்போம், எங்களுக்கும் வெட்கம், மானம் கிடையாது, என்று நடந்து கொள்வதால்தான், சமுதாயம் மேலும் சீரழிகிறது. பச்சிளம் குழந்தைகளும் கூட, பாலியல் கொடுமைக்கு ஆளாகிறது. ஆடை கலாச்சாரத்திற்க்கும், பாலியல் குற்றங்களுக்கும் தொடர்பு இல்லை, என்று பல பெண்கள் வாதிட்டாலும், அது தவறு. இரண்டுக்கும் தொடர்பு உண்டு. பாலியல் குற்றங்கள், ஆபாச ஆடைகளின் மேல்தான் நிற்க்கிறது.
                                         36
                                        
     ஊருகாய் பாட்டில், வாட்டர்கேன், காபி பிளாஷ்க், ஆப்பிள் பலூன், ஊதுபத்தி குழல், தலையனை, கை, கோழி, வாத்து, ஆடு, மாடு, பன்றி, குரங்கு, ஆண் ஆசனவாய் Ect...., Ect………. பெண்களே! இதுவெல்லாம் என்னவென்று தெரியுமா? இதை எல்லாவற்றையும், தன் சுய இன்பத்திற்க்காக பயன்படுத்துபவன் ஆண். இப்போது உங்களுடைய கேள்வியை ஞாபகபடுத்திப் பாருங்க. சிறு குழந்தைகள் என்ன ஆபாச ஆடைகளா அணிந்திருக்கிறது? அதன்மீது ஏன் தன் இச்சையை வெளிப்படுத்துகிறான் ஆண்? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு, ஆபாச ஆடைகளுக்கும் பாலியல் குற்றங்களுக்கும் தொடர்பு இல்லை, என்ற முடிவுக்கு வந்துவிடுகிறீர்கள். உங்கள் கூற்றுப்படி, ஊருகாய் பாட்டிலும், காபி பிளாஷ்க்கும், மாடும், ஆபாச ஆடைகள் அணிந்திருக்கவில்லை. ஆனால் இதை ஏன் புணர்கிறான் ஆண்? என்ற கேள்விக்கு பதில் தெரியுமா? அப்படியா? என்று கேள்வி கேட்கத்தான் தெரியுமே தவிர, உங்களால் இதற்க்கு பதில் சொல்ல முடியாது.

     பெண் தன் உடல் அழகை வெளிப்படுத்துவதாலும், அதை படம் பிடிக்க அனுமதிப்பதாலும், அது அளவு கடந்த தூண்டுதலை ஆணுக்குள் ஏற்ப்படுத்துகிறது.  ஆண் காட்சியாக கண்ட, சிற்றாடை பெண்கள் மீது அதீத மோகம் கொள்கிறான். தன்னால், அவர்களை அடைய முடியாவில்லையே என்ற ஏக்கம், எதன்மீதாவது தன்னுடைய இச்சைகளை தீர்க்க தூண்டுகிறது. தன் கற்ப்பனையில் நினைத்த பெண்ணோடு, உறவு கொள்வதை போன்று எண்ணிக் கொண்டு, எதுவெல்லாம் தனக்கு சாத்தியமாக இருக்கிறதோ, அதை எல்லாம் புணர்கிறான் ஆண். அதனால் சிற்றாடை பெண்களே, நாட்டில் எங்கோ ஒரு பெண் குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாவதற்க்கு, நீங்களும் ஒரு முக்கிய காரணமாக இனியும் இருக்க வேண்டுமா? என்று சிந்திப்பீர்! ஆண் ஆயிரம், லட்சம் தவறுகளை செய்பவனாகவே இருக்கட்டுமே, பெண்களே! அவன் செய்கின்ற தவறுகளுக்கு நீங்க ஏன் துணை போகிறீர்கள்?

     பெண்கள் பொருளீட்டலுக்கு அடிமைகளாக இருப்பதால், சுலபமாக ஆண்களால் வீழ்த்திவிட முடிகிறது. பெண் ஆசைபடுகின்ற எல்லாவற்றையும் வாங்கிக்கொடுத்து, அவளை தன் வழிக்கு இழுத்துக்கொள்கிறான் ஆண். அவளுக்குள் இருக்கும் வெட்கம், பயம், மானம், பெண்மை என்று எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச் செய்துவிடுகிறான் ஆண். தன் தன்மையை இழந்த பெண்ணை, ஆபாச ஆடைகளை அணியச் சொன்னாலும், நிர்வாணமாக நடக்கச் சொன்னாலும், அதை மலர்ந்த முகத்தோடு செய்து முடிக்கின்றாள். கடைசியில் அவப்பெயர் என்னவோ பெண்ணுக்குத்தான். 

     உங்களுடைய ஆழ்மனதில் கேள்விகளை கேட்டுப்பாருங்க, அது எல்லாவற்றிற்க்கும் பதில் சொல்லும். பெண்களை ஆண்களாக மாற்றிகாட்டும் வலிமை, ஆண்களுக்கு உண்டு என்றால், அதை ஏன் பெண்களே! நீங்களும் செய்து பார்க்க கூடாது? நீங்களும் மனித இனம் தானே? இல்லை, அதில் ஏதும் சந்தேகமா? வெறும் 10 சதவீதமே காம உணர்வுகள் கொண்ட பெண்மையை, தொடு உணர்வுகளால் மலரச்செய்து, சிற்றின்பத்தின் உச்சத்திற்க்கு அழைத்துச் சென்று, ஆண் மீது அமர்ந்து புணர்கின்ற அளவிற்க்கு பெண்ணை மாற்றிவிடுகிறான் ஆண். அதுபோல பெண்மைக்குள் இருக்கும் நற்குணங்கள், ஆண்களுக்குள்ளும் 10 சதவீதம் இருக்கிறது. அதை 100 சதவீதமாக மாற்ற, பெண்களே! நீங்கதான் முயற்ச்சிக்கனும். ஒரு சில பெண்கள் மார்பகங்களை வெளிப்படுத்துவதால், அதை பார்த்து பழகிய ஆண் மனம், மற்ற எல்லாவித பெண்களின் மார்பகங்களையும், உற்று நோக்கச் செய்கிறது. இதை சராசரி பெண்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆண்களை சபித்துக்கொண்டு, அன்றாட பணிகளை செய்வது எவ்வளவு மன உளைச்சலை தருகிறது, என்பதை தயவுசெய்து உணருங்க.  
                                         37
     உங்களுக்குள்ளாக, ஒரு ஒருமித்த முடிவை எடுங்க. மார்பகங்கள் என்பது வெரும் கொழுப்பு திசுக்கள்தான். அது கை, கால், வயிறு, கன்னம் என்று உடலில் எல்லா பாகங்களிலும் இருக்கின்ற தசைப்பற்றுதான். அதை ஏன் மூடி, மறைத்து கஷ்டப்படனும், மேற்க்கத்திய கலாச்சாரத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு, ஆண்களைப் போலவே அவிழ்த்து விட்ட கழுதைகளாக இருங்க. இல்லை, அது தவறு என்று உணர்கிறீர்கள் என்றால், அதற்க்கான மரியாதையை ஏன் ஒரு சில பெண்கள் செய்யத் தவறுவதை தடுக்க முயற்ச்சிப்பதில்லை பெண்களே?

     ஆண்களின் காம இச்சைக்கான தூண்டுதலாக உள்ள, பெண்களின் மார்பகங்களின் மீதுள்ள ஆண்களின் கவனத்தை, எப்படி திசை திருப்புவது? என்று கொஞ்சம் யோசித்து பாருங்க. ஆண்களுக்குள் தாய்மையை, வலியை தாங்கும் பொறுமையை, தியாக குணத்தை வளர்க்க உங்களாலும் முடியும். ஆண்களின் காம இச்சைகளை தீர்த்து வைப்பதற்க்கான காரணத்தை, பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி உங்களுடைய தேவைகளை எல்லாம் பூர்த்திசெய்து, ஆண் தன்னுடைய காரியங்களை சாதித்துக் கொள்கிறானோ, அதுபோல ஆண்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து, ஆண்களை மனிதப் பண்பு உள்ளவனாக மாற்றகூடிய ஆற்றல், பெண்களே! உங்களிடம் மட்டும்தான் உள்ளது.

     ஆண்களுடைய அடிப்படை தேவை காமம், என்று உங்களுக்கே நன்கு தெரிந்தும், உங்களுடைய கணவரை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு, நீங்க செய்யும் செயல்களால், உங்களுடைய சந்ததிகளின் வாழ்க்கையும் சேர்ந்து பாழாகிறது. எங்களால் ஆண்களை சமாளிக்க முடியவில்லை, நாங்கள் தனியாக வாழ கற்றுக்கொள்கிறோம், என்று தயவுசெய்து தவறான முடிவை எடுக்காதீர். அப்படி உங்களுக்கென்று ஒரு தனி சமூகத்தை உருவாக்கனும், என்று பெண்களே! நீங்களும் நினைத்தால், ஒரு வேளை தீபாவளிக்கு ஒரு வாரத்திற்க்கு முன், அனாதை குழுக்களின் படத்தை அச்சிட்டு, ஐயா! எங்களையும் கொஞ்சம் நினைத்து பாருங்க, எங்களுக்கும் பலகாரம், பழைய துணி ஏதாவது இருந்தா குடுங்க, என்று பத்திரிக்கையில் விளம்பரம் வருகிறதே, அதை போல உங்களுடைய நிலைமையும் மாறலாம். அல்லது கடை கடையாக சென்று காசு கேட்கும், பரிதாப நிலையில் உயிர் வாழும் திருநங்கைகளை போன்ற நிலையும் ஏற்ப்படலாம்.

     அனாதைகளையும், திருநங்கைகளையும், ஆதரவற்றவர்களையும் மீட்டேடுத்து, அவர்களையும் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கத்தினறாக மாற்றுவதே பெரும் சவாலாக உள்ளது. இதில் பெண்களே, நீங்களும் இணைந்து கொள்ளாதீர். பிரிந்து போய்விட்டால் மீண்டும் சேர்த்துவைப்பது கடினமான காரியமாய்விடும். உதாரணத்திற்க்கு கொரியா, பாக்கிஸ்தான், இலங்கை நாட்டின் கதைகளை படித்துபாருங்க. பாக்கிஸ்தானும், இந்தியாவும் ஒரே நாடாக, ஒரு தாய் பிள்ளைகளாக, சகோதரர்களாக இருந்த நாம் பிரிந்தோம், இன்று நிம்மதியாக இருக்கிறோமா? இலங்கை வாழ் தமிழர்கள், தமக்கென்று ஒரு தனி ராஜியத்தை அமைக்க நினைத்தார்கள், முடிந்ததா? கொரியா இன்றைக்கோ, நாளைக்கோ சாம்பல் மேடாகலாம். நாம் எல்லோரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்தால், மட்டுமே உயிர் வாழ முடியும்.  

     ஒருவேளை தனிமைப்படுத்திய வாழ்க்கை முறையை வெற்றிகரமாக அமைத்துக் கொண்டாலும், அது அமைதியான, சரியான வாழ்க்கைமுறை அல்ல. அதனால் பெண்களே! உங்களை தனிமைபடுத்திக் கொள்ளாதீர். இந்த சமுதாயத்திலிருந்து பிரிந்து நிற்க்காதீர், தயவுசெய்து மகளீர் மட்டும் பேருந்திலோ, ரயில் பெட்டியிலோ ஏறாதீர், அல்லது அதில் ஆண்களையும் ஏற்றிக்கொள்ளவும்.
                                         38
     ஆண்களை எப்படி பழிவாங்குவது, எப்படி வெற்றி கொள்வது, என்பதை விட எப்படி புரிந்துகொள்வது, என்று கொஞ்சம் சிந்தித்துபாருங்க. இழந்த உங்களுடைய மதிப்பும், மரியாதையையும், ஒன்றுபட்டு இந்த சமுதாயத்தில் நிலைநிறுத்த வேண்டியது, ஒவ்வொரு பெண்ணிற்க்கும் உள்ள கட்டாய கடமை.

     எத்தனை பேருடைய வாழ்க்கை நாசமாக, நிர்மூலமாக போயிருக்கும், எத்தனை பெண்களுடைய வாழ்க்கை அபகரிக்கப் பட்டிருக்கும், எத்தனை குழந்தைகளுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக போயிருக்கும், எத்தனை பச்சிளம் குழந்தைகள் அடித்து கொல்லப் பட்டிருக்கும், குப்பையில் வீசப்பட்டிருக்கும் இதற்க்கெல்லாம் யார் விளக்கம் கொடுப்பது? குற்றம் எப்படி நடக்கிறது? எதற்க்காக நடக்கிறது? என்று.

     இதை தெரிந்து கொள்ளாமல், குற்றங்களுக்கு கடும் தண்டனைகளை கொடுத்து விட்டால், குற்றங்களே நடக்காமல் செய்துவிட முடியும், என்பது சரிதானா? அப்படியானால் மக்கள் சமநிலை கோட்பாட்டை அடைய, என்ன சட்டம் இயற்றுவீர்கள்? உங்களுடைய இலக்கை எவ்வளவு காலத்தில் அடைவீர்கள்? சட்டம் மனிதனுக்கு பயத்தை ஏற்ப்படுத்த நினைக்கிறது. ஆனால் தன் பயத்தை உடைத்து வெளியேற நினைத்ததால்தான், நாம் மனிதனாக இருக்கிறோம், என்பதை மறந்துவிடக் கூடாது. நீதிமன்றங்கள் கூட சட்ட புத்தகங்களை விட, சத்தியத்தை தாங்கி நிற்க்கின்ற புத்தகத்திற்க்குத்தான், உயர்வான மதிப்பளிக்கிறது. அதனால் மக்களுக்கு சட்டத்தை போதிக்காதீர். அது நம்மை மீண்டும் மிருகங்களாக்கிவிடும். சத்தியத்தை கற்றுகொடுங்க, அதுதான் மக்களை மேம்பட்ட மக்களாக மாற்றும்.


 


ஆமாம்! நடுவில் யார் இந்த பிச்சைக்காரப்பய, என்று பார்க்கிறீர்களா? இந்த கட்டுரையை எழுதியது நான்தான். ஐயோ! நம்புங்க! இது என்னுடைய புகைப்படம்தான்.  நான் எவ்வளவோ சிரமங்களை கடந்து, இதை ஏன் எழுதினேன் தெரியுமா? நான் யார் தெரியுமா? 1200க்கு 542 மதிப்பெண் பெற்று +2வில் தேர்ச்சி பெற்றதுதான், என் கல்வி தகுதி. நெருப்பால் இரும்பை வெட்டும், ஒரு அடிமட்ட ஒப்பந்த தொழிலாளி. முதல் பக்கத்தில், நான் ஒரு பொம்பளை பொருக்கி, என்று எழுதப்பட்டிருப்பதை இப்போது உங்களால் நம்ப முடிகிறதா? நீங்க என்ன நினைத்தாலும், அதுதான் உண்மை.

                                         39

     நான் ஒரு புகைப்பட கலைஞன். சாலையில் செல்லும் பெண்களை ஆபாசமாக படம் பிடித்தவனாக, காம கதைகள், காம படங்கள் என்று என் வாழ்நாளில் காமத்தை பற்றிய சிந்தனையிலேயே அதிக காலத்தை கழித்தவனாக, என் மனையியை பாலியல் சித்ரவதை செய்தவனாக, என் மனைவிக்கு மலடி என்ற பட்டத்தை பெற்றுத்தர துணிந்தவனாக, என் சகோதரியின் செல்லப் பிராணிகளை கொன்று, அதில் ஆனந்தம் கண்டவனாக, என் பெற்றோரை அடித்து துன்புறுத்தியவனாக, என் தாயின் மீது மண்ணை வீசி சபித்தவனாக, என் தாயையும், அவர் உடன் பிறந்தவர்களையும் தகாத வார்த்தைகளால், திட்டி காயப்படுத்தியவனாக, (என் அம்மா, அவர்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை அடுப்படியிலேயே வெந்து கழித்தார்கள். வீட்டுக்கு வந்த எல்லோருக்கும், வயிறு நிறைய சாப்பாடு போடுவாங்க.) அப்படிப்பட்ட என் தாய், விரகடுப்பை எரித்து கஷ்டப்பட வேண்டும் என்பதற்க்காக, அவர்களிடம் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை அபகரித்துச் சென்றவனாக,

     என் பெற்றோரின் சொத்தை அபகரிக்க துணிந்து, தோல்வியடைந்தவனாக, என் தந்தையை மிரட்டி, அவர் மருத்துவ செலவிற்க்காக வைத்திருந்த பணத்தில், 50 ஆயிரத்தை அபகரித்தவனாக, என் தந்தை அல்சர், மூலம், மன உளைச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தும், அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பிடுங்கிவிட்டு, அவரை வெயிலில், தினமும் 20 கிலோமீட்டர் சைக்கிளில் செல்ல வைத்தவனாக, கீழ்த்தனமாக, கேடுகெட்டவனாக, கொடும் பாவியாக இந்த பூமியில் உயிர் வாழ்கிறேன் நான். அதிர்ச்சியாக இருக்கிறதா? இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நான் செய்த பாவங்களுக்கு, இன்னும் எந்த வித தண்டனையும் எனக்கு கிடைக்கவில்லை, என்பதுதான். இனி நான் உயிர் வாழ தகுதியுடையவன் தானா? ஒரு சிறைக் கைதியாக உயிர்வாழ எனக்கு வாய்ப்பு இருக்கலாம். அது பரவாயில்லை.

     ஆனால், நான் என் மகளுக்கு தந்தையாக இருக்க தகுதியுடையவனா? நிச்சயம் இல்லை. ஒரு வேளை இருந்தால், என் மகளுக்கு நான் எதை கற்றுகொடுப்பேன்? என்னிடமிருந்து எதை கற்றுக்கொள்வாள் என் மகள்? இது ஒரு பக்கம் இருக்க, நான் தவறுகளை உணர்ந்தவனாக என் குடும்பத்தின் முன் நின்றால், ஒரு வேளை என் தாயும், என் மனைவியும் மன்னித்து என்னை ஏற்றுகொள்ளலாம். ஆனால், அவர்கள் ஒருபோதும் இணையப் போவதில்லை. அதற்க்கு நான் என்ன செய்வது? இது ஒரு பக்கம் இருக்க, என் குழந்தையை, என்னைப் போன்ற காமகொடூரர்களிடமிருந்து எப்படி பாதுகாத்து, அவளுக்கு ஒரு அமைதியான வாழ்க்கையை, அமைத்து தர போகிறேன்? என் மகளை நன்கு படிக்க வைத்து, அவளை ஒரு IAS, IPS அதிகாரியாக மாற்றிவிட்டால், என் மகள் தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை அடைந்து விடுவாளா? அவளுக்கு கராத்தே, குங்பு கலைகளை கற்றுக்கொடுத்து அவளை, எஞ்சலினா ஜோலியை போன்ற ஒரு பெண்ணாக மாற்றிவிட்டால், என் மகள் தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை அடைந்து விடுவாளா?

     பெப்பர் ஸ்ப்ரெ டப்பாக்கள், டைடேனியம் உலோகத்தால் ஆன ஜட்டி, ஜாக்கெட்டுகள், ஆசிட் வீச்சிலிருந்து தப்பிக்க வின்வெளி ஆடைகள், கத்தி, துப்பாக்கி, கோடிக்கணக்கில் பணம், என்று எல்லாவற்றையும் என் மகளுக்கு கொடுத்துவிட்டால், அப்போதாவது என் மகள் தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை வாழ முடியுமா? என்றால், அது கண்டிப்பாக முடியாது. தன்னிறைவு பெற்ற வாழ்க்கைக்கான அர்த்தம், தன் பலத்தை அதிகரித்துக் கொள்வதோ, பாதுகாப்பை ஏற்ப்படுத்திக் கொள்வதோ அல்ல, என்பது எனக்கு தெரியும். அதனால், இதில் எதையுமே நான் செய்யப்போவதில்லை. ஆனால், நான் வேறு எதையாவது செய்தாகனும்.
                                         
                                         40

1) நான் என் மிருகத் தன்மையிலிருந்து வெளியேறி, மீண்டும் ஒரு சராசரி மனிதனாக வாழ்க்கையை வாழ கற்றுக்கனும்.

2) என் தாயையும், என் மனைவியையும், கண்டிப்பாக சேர்த்து வைத்தே ஆகனும்.

3) என் மகளுடைய வாழ்க்கை, எந்த ஒரு ஆணாலோ, பெண்ணாலோ பாதிக்க கூடாது. மற்றும் என் மகளால் யாருடைய வாழ்க்கையும் பாதிக்க கூடாது.

4) எனக்கு மட்டும்தான், பெண் குழந்தை இருக்கிறதா? நான் ஒருவன் மட்டும்தான், இதில் சிக்கித் தவிக்கின்றேனா? இல்லை என்றால்,
     
     இந்த எல்லா பிரச்சனைகளுக்கும், ஓரே தீர்வாக இருக்கும் படியான, ஒரு செயலை நான் செய்தாகனும். அதற்க்கு நான் என்ன செய்வது? நான் செய்த குற்றங்களையும், அதற்க்கான காரணங்களையும், அதிலிருந்து மீண்டு வருவதற்க்கான வழிமுறைகளையும், பகிரங்கமாக இவ்வுலகத்தின் முன் நின்று சொல்வதும், என் பாவங்களை, என்னை சார்ந்தவர்கள் மீதும், என் சந்ததிகள் மீதும் படியச்செய்து அவர்களையும் பாவிகளாக்குவதை விட, என் பாவங்களை ஒப்புக்கொண்டு அதற்க்கான தண்டனையை, நானே அனுபவித்துச் செல்வதும்தான், எனக்கு தெரிந்த வழிகள்.

     தொலைந்து போன என்னுடைய வாழ்க்கையை, என்னால் மீட்டெடுக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் என் சந்ததிகளுடைய வாழ்க்கையாவது தொலையாமல் இருக்க வேண்டும். ஒரு வேளை இந்த முயற்ச்சியில் என்னுடைய உயிர் போனாலும், என் குழந்தை வறுமையில் வளர்ந்தாலும், அவளுக்கு தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க, ஒரு சிறு முயற்சியாவது நான் எடுத்துக்கொண்டேன், என்ற சந்தோஷமும், மனநிறைவும் எனக்கு போதும்.

     தாயே பராசக்தி! பார்வதி அம்மா!, உம்மை கொடுமை படுத்தியவன், நான்தான். எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு, என் சோற்றில் விஷம் வையம்மா, அதை நான் அள்ளித் தின்கிறேன். தயவு செய்து என் மனைவியை சபிக்காதீர்கள் அம்மா. அவள் ஒரு பாவமும் செய்யாதவள், அவளுடைய உரிமைகளைத்தான் எடுத்துக் கொண்டாளே தவிர, உங்களுடையதை எதையும், அவள் எடுத்துச் செல்லவில்லை. இதை புரிந்து கொள்ளாமல் மருமகளை அழிக்க நினைத்தால், முதலில் அழிந்து போனது, உன் மகனாகத்தான் இருக்கும் அம்மா. அற்ப்ப ஆயுளில், அவப்பெயரை பெற்றுக்கொண்டு, அழிந்து போவதற்க்காகவா நான் பிறந்தேன்? இல்லையம்மா இல்லை. உன் அறியாமையை அழித்துவிட்டு போவதற்க்காக, நான் பிறந்தேனம்மா.    

     நான் இப்படி கீழ்த்தனமாக வாழ்ந்திருக்க கூடாது. யாரும் எனக்கு சிறு வயது முதலே, பெண்மையின் பெருமைகளைப் பற்றி எடுத்துச் சொல்லவில்லை. அதை நானாக தேடி தெரிந்து கொள்வதற்க்குள், பல பாவங்களை செய்தவனாகிவிட்டேன். பெற்றோர்கள், சமுதாயம், சட்டம், அரசாங்கம், பள்ளிக்கூடம், ஊடகங்கள், ஏன் இந்த உலகமே ஆணாக இருப்பதால், நான் எந்த தவறை செய்தாலும், அது என்னை பெரிதும் பாதிப்பதில்லை. ஆனால், அது என் சந்ததிகளை முழுவதுமாக பாதிக்கிறது. அதை தடுப்பதற்க்காக, நான் இதை எழுதினேன். அதனால் பெரியோர்களே, தாய்மார்களே என்னைப் போன்ற கேடுகெட்டவனாக உங்களுடைய சந்ததிகளும் வளரவேண்டுமா? என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்க. நீங்க வளர்த்து ஆளாக்கினீர்கள், படிக்க வைத்தீர்கள், காசு, பணம் சேர்த்து வைத்தீர்கள், ஆனால் சந்ததிகள் வாழ வழி விட்டீர்களா?

                                         41
     நாம் கடந்து வந்த அதே பாதையில்தான், நம் சந்ததிகளும் கொடுமைகளை அனுபவிக்க வரிசையில் நிற்க்கின்றதே, அது உங்கள் கண்களுக்கு தெரிகின்றதா? அன்றாடம் நாளிதழ்களில் வரும் செய்திகளைப் போல, இனியும் நம் குழந்தைகளின் வாழ்க்கை பாழாகத்தான் வேண்டுமா? உறவுகளுக்கான முக்கியதுவத்தை தயவுசெய்து உணருங்க. உறவுகளுக்குள் விரிசல் ஏற்ப்பட்டால், நடுவில் சுவர்கள் வளரும், அதுவே சுவற்றில் விரிசல் ஏற்ப்பட்டால், உறவுகள் வளருமா? மானம், கல்வி, செல்வம், வீரம், குணம் இவை எல்லாவற்றையும் விட, நாம் பிறப்பதற்க்கு முன்பிருந்து, நாம் இறந்த பின்பும் நம்மோடு இருப்பது உறவுகள் ஒன்று மட்டுமே!

     நம்முடைய சந்ததிகளுக்கு, வழுவான எதிர்கால சமுதாயத்தை உருவாக்க, கற்றுக் கொடுக்க வேண்டும். பிரபஞ்சத்தில் உயிரினங்களை கொண்டு சென்று சேர்த்து, அதை அழகு படுத்த வேண்டும். ஒரு வேளை பிரபஞ்சத்தின் வரலாற்றில், பூமியின் அழிவு எப்படியோ இருக்கட்டும், ஆனால் அது கலாச்சார சீர்கேட்டினால் மட்டும் இருந்துவிடக் கூடாது, என்பதுதான் என் குறிக்கோள்.  தன் தவறுகளை உணர்ந்தவன், தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டும், என்பதில்லை. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, மீண்டும் வாழ முயற்ச்சிக்கலாம். இதைத்தான், இந்த மானுட இயலை கற்றுக்கொள்ளும் மாணவனாகிய நான், செய்து கொண்டிருக்கிறேன்.

இதை எல்லாம், நான் எப்படி செய்தேன் என்றால்,   

1) கடந்த கால் நூற்றாண்டாக, நான் கேனத்தனமாக கேள்வி கேட்பதில் கில்லாடி.      
அடிப்படையில் நான் ஒரு முட்டாளாக இருந்தாலும், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வை கண்டுபிடிக்க கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன். கேள்வி கேட்பது என்னுடைய passion.
2) நான் யார்? என்ற தேடலும், என் மகளுடைய எதிர்கால வாழ்க்கையை பற்றிய சிந்தனையும், என்னுடைய குற்றங்களை உணரச்செய்தது.
3) இதை எல்லாம் சமுதாயத்திற்க்கு முன் நின்று சொல்வதற்க்கான, தைரியத்தை எனக்கு தந்தது, அரிச்சந்திரனின் கதை மட்டுமே.

     நான் எல்லாவற்றையும் சோதித்து பார்த்துதான், ஏற்றுக்கொள்வேன். அப்படி சோதனைக்கு உட்படுத்தாததையும், சோதித்து அதற்க்கு சரியான பதில் கிடைக்காத விஷயங்களையும், நான் கிடப்பில்தான் வைத்திருப்பேன். அந்த வரிசையில், நான் அரிச்சந்திரன் கதையை படித்ததிலிருந்து, எனக்கு சத்தியத்தின் மீது உயர்வான மதிப்பு ஏற்ப்பட்டாலும் கூட, சத்தியத்தை சோதித்து பார்க்க வேண்டும், என்று எனக்கு ஒரு ஆசை. உண்மையிலேயே சத்தியத்திற்க்கு ஆற்றல் உண்டா? சத்தியத்தை மீறுகிறவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்குமா? சத்தியத்தை ஏற்றுக் கொண்டு, அதை மதிக்கத் துவங்கினால், அது நமக்கு சிறப்பான வாழ்க்கையை பெற்றுத் தருமா?

     இதை நான் தெரிந்து கொள்வதற்க்காக, என் தலையை பலிபீடத்தில் வைத்து சோதிக்கப் போகிறேன். சத்தியத்தை முழுமனதாக ஏற்றுக்கொண்டு, என் தவறுகளை சமுதாயத்தின் முன் நின்று ஒப்புக்கொண்டால், இச்சமுதாயம் என் தலையை துண்டிக்குமா? அல்லது என் தலைக்கு மகுடம் சூட்டுமா? துணிந்தால் என்ன நடக்கும்? துணிந்தவனுக்கு என்ன கிடைக்கும்? ஒரு கை பார்த்துடனும் டா சிவா! ஒரு வேளை எனக்கு வெற்றி கிடைத்தால், இதன்மூலமாக மக்கள் எந்த அளவிற்க்கு சத்தியத்தின் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும், தங்களுடைய தவறுகளை ஒப்புக்கொண்டு என்னைப்போல, உலகத்தின் முன் நிற்க துணிவு வரவில்லை என்றாலும், குறைந்த பட்சம் தங்கள் உறவுகளுக்கு முன்பாவது நிற்ப்பார்களா, என்பதை தெரிந்து கொள்ளலாம்.

                                         42
     ஓ! இப்படி எழுதிவிட்டால், யாரும் என்னை தண்டிக்க மாட்டார்கள், என்று அர்த்தம்
இல்லை. 1) உண்மையிலேயே, நான் சத்தியத்தை ஏற்றுக்கொண்டவனாக இருக்கனும்.  2) உண்மையிலேயே, சத்தியத்திற்க்கு ஆற்றல் இருக்கனும். 3) உண்மையிலேயே, மக்கள் சத்தியத்தை மதிப்பவர்களாக இருக்கனும். இந்த மூன்றும் சரியாக இருந்தால் மட்டுமே, நான் உயிரோடு வீடு திரும்ப முடியும். அப்படியே நான் வீடு திரும்பினாலும், நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. இன்னும் வேறு எந்தெந்த வழிகளில் எல்லாம், மக்கள் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை, ஆய்வு செய்து கொண்டே, என் ஆயுளை முடித்துக் கொள்வேன். 

1) பணத்திற்க்கே முக்கியத்துவம் தரும் மக்களுக்கு, மனித நேயத்தின் மதிப்பை உணர்த்துவது,  
2) பல தொழிற்ச்சாலைகளில் கழிப்பிட வசதியில்லை, குடிக்க தண்ணீர் இல்லை, மதிய உணவின் போது கைகளை சுத்தம் செய்ய சோப்பு இல்லை, அடிபட்ட காயங்களுக்கு மருந்து இல்லை, பல தொழிலாளர்கள் தங்கள் உயிரை பிணையம் வைத்துதான் அன்றாட பணிகளை செய்கிறார்கள். ஆனாலும், அதற்க்கான மரியாதையை கூட பெறமுடிவதில்லை. இப்படி தவறிழைக்கும் முதலாளிகளை கண்டறிந்து தண்டிப்பதைவிட முதலாளி, தொழிலாளி என்பவர்களை ஆசிரியர், மாணவர்களாக்குவது, மற்றும் உற்ப்பத்தியை பெறுக்குவது,
3) அனாதைகளையும், திருநங்கைகளையும், ஆதரவற்றோரையும் சமுதாயத்தின் சம அங்கத்தினராக மாற்றுவது,
4) வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும், வீட்டின் முதலாளிகளுக்கும், இடையே சமூக நட்புறவை ஏற்ப்படுத்துவது,
5) மனித கழிவுகளை மனிதனேதான் சுத்தம் செய்தாகனும், வேறு வழியில்லை. இருந்தாலும் துப்புரவு தொழிலாளர்களுக்கும், சமுதாயத்தில் சம மரியாதையையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவது,
6) சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கழைந்து, அனைவரும் சமம், அனைவருக்கும் சம அறிவு உண்டு, சம சுதந்திரம் உண்டு, சம உணர்வுகள் உண்டு என்பதை உணர்த்துவது,
7) மனிதன் தன்னை அறியாமலேயே இயந்திரமாக எப்படியெல்லாம் செயல்படுகிறான், என்பதை பற்றிய ஒரு கட்டுரை,

8) மீனவர்கள். இந்த பிரச்சனையில் நான் இப்போதே சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். இலங்கையில் கடந்த 30 வருடங்களாகத்தான், இன போராட்டங்கள் நடக்கின்றதா? அல்லது அதற்க்கும் பழமையானதா? தமிழன் எப்படி இங்கிருந்து அங்கே குடிபெயர்ந்தான்? எது இரு இனங்களுக்குள்ளும் பிரிவினையை வளர்த்தது? எதற்க்காக  இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகள் பரிக்கப்பட்டது? எதற்க்காக இனப் படுகொலை செய்யப்பட்டது? இதை செய்தவர்கள் பெளத்த மதத்தை பின்பற்றுபவர்கள், என்று சொல்லிக்கொள்வதில் அற்த்தமில்லை. இது ஒரு பக்கம் இருக்க,

     இதை எதிர்க்க துணிந்த தமிழர்களும் அதர்மத்தை கையில் எடுத்துக்கொண்டது பெரும் தவறு. பிரபாகரன் மாவீரன். தன் இன மக்களுக்காக, தன் உயிரை துச்சமென நினைத்து போராடியவர்கள் எல்லோருமே மாவீரர்கள் தான். அந்த வரிசையில் ஹிட்லர், காந்தி, பின்லேடன், பிரபாகரன் மற்றும் இதற்க்கு முன்பு காலத்தில் போராடியவர்கள் எல்லோருமே ஒன்றுதான். எல்லோருமே உணவைத்தான் சாப்பிட்டாங்க, நிலத்தில்தான் நடந்தார்கள், காற்றைதான் சுவாசித்தார்கள்.
                      
                                   
                                         43
     ஆனால் யாருக்கு உண்மையான வெற்றி கிடைத்தது, யாரை இந்த உலகம் முன்மாதிரியாக நினைவில் வைத்திருக்கிறது என்றால், அது சத்தியத்தை மதித்து அதன் பாதையில் சென்றவர்களை மட்டும்தான். இதை அனுபவரீதியாக நமக்கு உணர்த்திச் சென்றவர், காந்தி. இந்தியாவிற்க்கு சுதந்திரம் கிடைத்து 30 40 ஆண்டுகளுக்கு பிறகுதான், இலங்கையில் இனப் போராட்டங்கள் தீவிரம் அடைந்தது.

     அப்போது நமக்கு தெரிந்த அற்ப்புத கலையை, ஏன் இலங்கை வாழ் மக்களுக்கு கற்றுத்தர முன்வரவில்லை. அணு ஆயுதங்களை விட அகிம்சைக்குத்தான், அதிக ஆற்றல் உண்டு என்பதை, குறைந்தபட்சம் இலங்கை வாழ் தமிழர்களுக்காவது கற்றுத்தந்திருக்கலாம். ஆனால் யாரும் அதில் ஆர்வம் காட்டவில்லை. இது ஒரு பக்கம் இருக்க,

     பிரபாகரன் எப்படி இந்த மாபெரும் பணத்தை திரட்டினார்?, யார் வேண்டுமானாலும் தங்கள் உடமைகளை விற்று பணமாக்கலாம், ஆனால் அந்த பணத்தை வைத்து ஆயுதங்களை வாங்கிக் கொள்வது, அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. துப்பாக்கிகள், பீரங்கிகள், போர் விமானங்கள், கப்பல்கள் இவையேல்லாம், விடுதலைப் புலிகளுக்கு எப்படி கிடைத்தது? இவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்து உதவியவர்கள் யார்? யார்?
இது ஒரு பக்கம் இருக்க,

      விடுதலை புலிகள் வேறு, இலங்கை வாழ் தமிழர்கள் வேறு, இலங்கை அரசாங்கம் வேறு என்றும், நாங்கள் இலங்கை வாழ் தமிழர்களுக்காக போராடுகிறோம், என்றும் சில பேர் சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆனால், இந்த புகைப்படங்களை பார்த்தால் அப்படி தெரியவில்லையே? இலங்கை அரசு செய்த இன படுகொலைகளை விவரிக்கும், ஆறு மணி நேரம் ஓடக்கூடிய, ஆவணப் படத்தை கையில் வைத்திருப்பவர்கள், விடுதலை புலிகள் செய்த படுகொலைகளை விவரிக்கும் ஒரு புகைப்படத்தையாவது, தங்கள் நினைவில் வைத்திருக்கிறார்களா? இது ஒரு பக்கம் இருக்க,

     கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்க்கு, இப்போது மட்டும் இந்தியாவில் போராட்டங்கள் நடப்பதற்க்கு காரணம் என்ன? இலங்கையில் தமிழன் தோல்வி அடைந்துவிட்டான் ஐயா!. அதற்க்கு பழிதீர்க்க வேண்டாமா? இலங்கை அதிபர்களின் தலையை கொய்திட வேண்டாமா? அதற்க்கு என்ன செய்யலாம்? யாரை கூப்பிடலாம்? அமெரிக்கர்களை கூப்பிடலாம். அவங்கதான் எந்த நாட்டிற்க்குள்ளும் சென்று, யார் தலையை வேண்டுமானால் எடுக்க துணிவு கொண்டவர்கள்.

     ஆமாம், நமக்கும் அமெரிக்கர்களுக்கும் ஏற்க்கனவே வாய்க்கால் தகராறு இருக்கும் போது, நாம் ஏன் அமெரிக்கர்களை அழைக்கனும், அவர்களுக்கு அதரவு அளிக்கனும்? இந்தியாவின் மீது பொருளாதார தடை விதித்த போதும், ஐயா கலாம் அவர்கள் அமெரிக்கா சென்ற போது அவரை பரிசோதித்த போதும், அமெரிக்க ராணுவ வீரர்கள் USS Nimitz போர்க் கப்பலில் சென்னைக்கு, நட்பை மட்டுமே நாடிவந்த போதிலும், தமிழன் என்ன வசனம் பேசினான், என்பது ஞாபகம் இருக்கிறதா?

     ஐயோ பாவம்! தமிழன், சஞ்ஜய் ராமசாமி ஆகிவிட்டானே? இப்படி சமீபத்திய நிகழ்வுகளே, ஞாபகத்தில் இல்லாத போது, கி.பி 1991ம் வருடத்தில் தமிழர்களின் கூட்டு சதியால், இந்திய தேசத்தின் பிரதமரையும், அப்பாவி மக்களையும், பீஸ் பீஸாக வெடிக்க செய்ததையா, ஞாபகம் வைத்திருக்க போகிறார்கள்? ஏன் மத்திய அரசாங்கம் தமிழன் குரலுக்கு செவிசாய்ப்பதில்லை? என்ற கேள்விக்கான பதில், இதுவாகவும் இருக்கலாம். ஏன் தமிழர்கள் அவ்வாறு செய்தார்கள்? எதனால் தமிழனுக்கு கோபம் தலைக்கேறியது? அப்படியானால், அமைதியை நிலை நாட்ட இலங்கைக்கு சென்ற, அகிம்சையை சாராம்சமாக கொண்ட இந்திய நாட்டின் ராணுவ வீரர்கள், பல அற்ப்புதங்களை செய்திருப்பார்கள் போல் தெரிகிறதே? இது ஒரு பக்கம் இருக்க,      

     சரி நடுவன் உதவியில்லை என்றால் என்ன, நமக்கு அமெரிக்கா கைகொடுக்கும். சாதாம் தலையை கொய்தது போல, ராஜபக்சே தலையையும் தொங்கவிட வேண்டும் என்றால், அதற்க்கு அமெரிக்கர்களுடன் நட்பை ஏற்ப்படுத்திக் கொள்வதுதான், ஒரே வழி. ஆகா! 6000 ஆண்டுகளை கடந்தாலும், நாம் நம் மரபையே சார்ந்திருக்கிறோம், என்பது எவ்வளவு ஆச்சர்யம் பாருங்களேன்! தன் எதிரியை விட பலம் கொண்டவரிடம் நட்பை ஏற்ப்படுத்திக் கொண்டால், தன் எதிரியை வீழ்த்துவது சுலபம். சரி வரச்சொல்லுங்க, ஆனால் ஒன்றை ஞாபகம் வைத்திருங்க, ஆங்கிலேயன் வந்தான், அரசனுக்கு விளக்கு வைத்தான், அமெரிக்கர்கள் வந்து அரசியல்வாதிக்கு, விளக்கு வைத்து விட போகிறார்கள், பார்த்து ஜாக்கிரதை. இது ஒரு பக்கம் இருக்க,                                 

                                         47


                                     ஏய்! தமிழன்டா!

தமிழன், தமிழன், என்று உர்ர்ர்ர்றுமிக் கொள்(ல்)பவர்கள், தங்கள் சாதனை புத்தகத்தில், இந்த படத்தை அச்சிட்டுக் கொள்வார்களா? இது ஒரு பக்கம் இருக்க,

     உங்க அக்கப்போரில் சம்பந்தமே இல்லாத அப்பாவி பொதுமக்களும், மீனவர்களும் பாதிக்கப்படுவது, ஏன் தொடர் கதையாக இருக்கனும், ஐயா. இந்த எல்லா பக்கங்களிலும் உள்ள பல கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடித்தால்தான், தீர்வு கிடைக்கும். தமிழன், தமிழன் என்று சொல்லிக்கொண்டு, உலக சமுதாயத்திலிருந்து தயவுசெய்து தனித்து நிற்க்காதீர். கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்த குடி, எம் தமிழ்க்குடி, என்று யாரோ பாடியிருக்கலாம். அது உண்மையாகவே இருக்கட்டும்.   

     அதற்க்காக, நாம்தான் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள், மற்றவர்கள் மடையர்கள் என்று நம் சந்ததிகளுக்கு போதிப்பது சரியல்ல. தமிழ் பற்று வேறு, தமிழன் பற்று வேறு. தமிழனாக இருப்பதை விட மனிதனாக இருக்க கற்றுக் கொள்ளனும், மானத்தை விட, சத்தியத்திற்க்கு மரியாதை செய்வதைப் பற்றி சிந்திக்கனும். எல்லோரும் தங்களுடைய தவறுகளை உணரனும். இனி என்ன செய்யலாம் என்றால், இரு பிரிவினரின் மரபணு தகவல் பதிவேட்டிற்க்குள்ளும் இறங்கி, அதில் தவறாக பதிந்திருக்கும் தகவல்களான, தமிழன் தவறானவன், சிங்களன் தவறானவன் என்பதை அழிக்க முயர்ச்சித்து, அதில் வெற்றிகண்டால், அதுதான் உண்மையான வெற்றி. இதைப் பற்றிய ஒரு கட்டுரை,  

9) அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கோபப்படாதீங்க, பயப்படாதீங்க. உங்களுடைய நற்ப்பெயருக்கோ, பதவிக்கோ, கலங்கம் செய்திட மாட்டேன். மக்கள் முன்பை விட, உங்களை அதிகம் மதிக்க துவங்குவர், மக்களுக்கு பிடித்த, சிறந்த நபர்களாக நீங்கள் நிச்சயம் வரலாற்றில் இடம் பிடிப்பீர்கள். இனி வரும் காலங்களில், கேள்விகள் உங்களை கிறிஸ்மஸ் தாத்தாக்களாக, மாற்றப் போகிறது, தயாரா இருங்க.

                                         48   
    
     அதாவது, யாருக்கு எப்படி சவக்குழி தோண்டுவது, என்பதை பற்றியது இல்லை, என் முயற்சி. அது ஒருவருடைய வலிகளையும், உணர்வுகளையும், இன்னொருவருக்கு உணர்த்துவதாக இருக்கும்.

10) மாவோஸ்டுகள். யார் இவர்கள்? இவர்களுக்கும், அரசாங்கத்திற்க்கும், என்னதான் பிரச்சனை? ஏன் அரசாங்க அதிகாரிகளை தாக்குகிறார்கள்? ஒரு ஜனநாயக நாடாக இருந்தால், யாரும் எதற்க்கும் போராட வேண்டிய அவசியங்கள் இருக்காது. ஆனால் அன்றாடம் இவ்வளவு போராட்டங்கள் இந்தியாவில் நடக்கிறது என்றால், அப்போது இது ஜனநாயக நாடுதானா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. இதைப் பற்றிய ஒரு கட்டுரை,

11) தீவிரவாதம். தீவிரவாதிகள் பாக், ஆப்கானில் மட்டும்தான், உருவாகிறார்கள் என்று பல பேர் நினைக்கிறார்கள். அது தவறு. அவர்கள் எங்கேயும் உருவாகிறார்கள். எந்த இடத்தில் அன்பும், கருனையும், நல்வழிகாட்டுதலும் கிடைக்கப் பெருவதில்லையோ, அங்கெல்லாம் வன்முறையாளர்கள் உருவாகிறார்கள். இதை தடுப்பதைப் பற்றிய ஒரு கட்டுரை,

12) கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு, மூடநம்பிக்கையை பின்பற்றுவதை தடுத்து, உண்மையான இறைவனை உணரச்செய்வது,

     இப்படி பலவிதமான கட்டுரைகளையும், பலகோடிக் கணக்கான கேள்விகளையும், உள்ளடக்கியவன் நான். அதையெல்லாம், மக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மக்களையும், கேள்விகள் கேட்கச் செய்திட வேண்டும். அரசியல்வாதிகளிடமும், ஆபாச நடிகைகளிடமும் தான், கேள்விகள் கேட்கனும், என்பதில்லை.

     உதாரணத்திற்க்கு, மின்சாரத்தால் இயங்கும் வாகன உற்ப்பத்தி நிறுவனங்கள், தங்களின் வாகனம், 0% கூட மாசு ஏற்ப்படுத்தாது, என்று விளம்பரம் செய்கின்றன. ஆனால் நமக்கு கிடைக்கின்ற மின்சாரத்தில், எத்தனை சதவீதம் நிலக்கரியை எரிப்பதனால், அணுவை பிளப்பதனால், கிடைக்கிறது? தெரியாது. ஒரு குறிப்பிட்ட சதவீத மின்சாரம், ஏற்க்கனவே கரும்புகையை, காற்றில் கலக்கச் செய்வதனால், கிடைக்கிறது என்றால்,  இந்த மின்சாரத்தை வாகனத்தில் சார்ஜ் செய்து ஓட்டினால், இது எப்படி 0% மாசு ஏற்ப்படுத்தாத வாகனமாகம்??? சைக்கிள் கூட 0% மாசு ஏற்ப்படுத்தாத வாகனம் கிடையாது.  காற்றாலையில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற மின்சாரம் கூட, 0% மாசு ஏற்ப்படுத்தாத மின்சாரம் கிடையாது. அதை எப்படி உற்ப்பத்தி செய்தார்கள்? எப்படி இடம் பெயரச் செய்தார்கள்? இப்படி எதைப் பார்த்தாலும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கனும்.

     அப்போது கேள்விகள் கேட்க்க படாததால்தான், தவறுகள் தொடர்ந்து நடக்கிறது. கேள்விகள் கேட்க்க ஆரம்பித்தால், என்னவாகும்? கேட்டுதான் பார்ப்போமே! பதில் இன்றைக்கே கிடைக்கலாம், நாளை கிடைக்கலாம், அல்லது பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து கூட, கிடைக்கலாம். பதிலைவிட, கேள்விகள் அதிக பலம் கொண்டது.   கேள்விகள் மட்டும்தான், நம் தவறுகளை திருத்தும் ஆற்றல் கொண்டது.       

     இதுவரை நான் செய்தவைகள் சரிதானா? சமுதாயம் என்றால் என்ன? அது, எதை சார்ந்திருக்கிறது? சமுதாயத்தை நான் எந்த அளவிற்க்கு புரிந்து வைத்திருக்கிறேன்? எனக்கு எந்த அளவிற்க்கு, தைரியம் இருக்கிறது? இனி என்னை சமுதாயம் உயிரோடு விட்டுவைக்குமா? அல்லது பைத்தியக்காரன் என்ற பட்டம் அளிக்குமா? இதை எல்லாம் நான் அனுபவரீதியாக தெரிந்துகொண்ட பிறகு, அடுத்த கட்ட செயலில் இறங்குவேன்.
                                         49
     இந்த கட்டுரையை 35 பிரதிகளாக அச்சிட்டு அதை,


பொது மக்களில், பெண்களுக்கு  17  பிரதி,
                
                                       ஆண்களுக்கு  17  பிரதி,

                    மொத்தம்  34   பிரதிகள்                                                      

     இந்த கடைசி 35 வது பிரதியை, காவல் துறையிடம் ஒப்படைத்து, கூடவே ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தையும் கொடுத்திருக்கிறேன்.
மற்றும் இதை, 193 email IDகளுக்கும் அனுப்பியுள்ளேன்.

என் வாக்குமூலத்தில் கூறப்பட்டுல்லதாவது,


அனுப்புனர்,                                                    தேதி  :  15.07.2013
           ப. சிவக்குமார்                                      இடம் :   கோவை
           21/1 ராவாளீஸ்வரன் காம்பவுண்ட்,
            3வது, வீதி, லஷ்மி நகர்,
             நல்லாம்பாளையம் சாலை,
            சங்கனூர்,
            கோயமுத்தூர் - 641027
பெருனர்,

           B9 காவல் நிலையம்,
           கோயமுத்தூர்.
          

பொருள்:  ஒப்புதல் வாக்குமூலம்.

ஐயா,
     நான் காமத்தை அடிப்படையாக கொண்டும், எதையும் முழுமையாக ஆராயப்படாமலும், சமூகத்தைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையை, தணிக்கை செய்து, காப்புரிமை பெறாமல், நானே அச்சிட்டு, அதை உலகம் முழுவதும் அனுப்பிவிட்டேன். இதை, முழு மூளையாகவும், தனி ஒருவனாகவும், சுய நினைவுடனும் செய்தவன், நான் ஒருவன் மட்டுமே.
        
     இதை படித்துப் பார்த்த மக்கள், யாரேனும் என் மீது வழக்கு தொடர்ந்தாலும், அல்லது யாருமே முன் வரவில்லை என்றாலும், சட்டத்தின் பார்வைக்கு நான் குற்றவாளியாக தெரியும் பட்சத்தில், என் மீது சுமர்த்தப்படும் குற்றங்களையும், எனக்கு வழங்கப்படும் தண்டனைகளையும், எந்த வித எதிர் வாதங்களும் இன்றி, அதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். 


                                                           இப்படிக்கு,


                                                          
                                                         ப. சிவக்குமார்.

                                         
                                         50
     சட்டம் சாவகாசமா தண்டிக்கும், அதுவரை எங்களால் பொருத்திருக்க முடியாது என்பவர்கள், தாராளமாக உங்கள் ஆத்திரம் தீர, ஆரத்தி எடுத்துக் கொள்ளலாம்.     (நான் ரொம்போ நல்லவன்.) ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, உங்களுடைய தாக்குதல், என் மீது மட்டும், இருக்க வேண்டுகிறேன். என்னைச் சார்ந்தவர்கள், என்னால் ஏற்க்கனவே பல துன்பங்களை அனுபவித்து விட்டதால், தயவுசெய்து அவர்களை ஒன்றும் செய்யக் கூடாது. சரியா. இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பருக்கும், உறவினருக்கும் கொடுங்க, முடிந்தால் ஒரு 10 பிரதிகள் எடுத்து மற்றவர்களுக்கும் கொடுங்க. ஐயோ! என் நண்பர்கள் வெளியூரில் இருக்கிறார்களே, நான் அவர்களுக்கு எப்படி இதை பகிர்ந்து கொள்வேன்? என்று கவலைப்படாதீர்.

     உங்களுக்காக ஒரு blog ஐ, உருவாக்கியுள்ளேன். இந்த இணையதள முகவரியை உங்கள் நண்பருக்கு அனுப்பி வையுங்க. அதோடு என்னுடன் நட்பு கொள்ள விரும்புபவர்கள், என் புகைப்பட ஆல்பம், என்னைப் பற்றிய மற்ற சில தகவல்களை தெரிந்து கொள்ள, மற்றும் உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள,  

www.facebook.com/ramukavis1983   

what's app:  +91 9790600183  
   
    
     உங்களுக்கு எது சாதகமாக உள்ளதோ, அதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏன் இவ்வளவு வழிகளை வைத்திருக்கிறேன் என்றால், எல்லா வழிகளையும் முடக்கம் செய்வது கடினம். அதற்க்குதான், இந்த ஏற்ப்பாடு. சரி வணக்கம் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அம்மா தாய்க்குலமே, தயவுசெய்து உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ கற்றுக் கொள்ளுங்க,  சந்ததிகளுக்கு நல்லதை கற்றுக்கொடுங்க. ஐயா, ராமசாமிகளே! கந்தசாமிகளே! குப்புச்சாமிகளே! உங்கள் மனைவி மீது அன்பை பொழிகிறேன், என்று சொல்லிக்கொண்டு நாட்டை மக்கள் தொகையால், நிரம்பி வழிய விட்டுடாதீங்க. வீட்டுக்கு செல்கையில் மல்லிகை பூ, அல்வா வாங்கும் போது, அப்படியே பக்கத்தில் மருந்துக்கடையில் காண்டோம் வாங்கிக்குங்க. இப்போதேல்லாம் விதவிதமாக நிறைய flavours கிடைக்கிறது, நீங்களும் சந்தோசமா இருங்க, மற்றவர்களையும் சந்தோசப்படுத்துங்க. சரிதானே.
    
     இதை நீங்கள் படித்து முடிக்கும் இதே நேரத்தில், நான் லாக்கப்பில் ஜட்டியோடு உட்கார்ந்திருப்பேனா? அல்லது அடித்த அடியில், மிதித்த மிதியில், மலம் கழித்து, மரணம் அடைந்திருப்பேனா? என்பது தெரியவில்லை. ஒருவேளை இதை எல்லாம் கடந்து நான் உயிரோடு இருந்தால், உங்களையேல்லாம் வேரொரு ஊடகத்தின் வாயிலாக சந்திப்பேன்.
                                நன்றி வணக்கம்.

           சத்யமேவ ஜெயதே!  சத்யமேவ ஜெயதே!! சத்யமேவ ஜெயதே!!!

                                
                                        
தாயே பராசக்தி! 2013 www.ramukavis1983.blogspot.in
லூசாப்பா, நீ? 2017 www.lusappani.blogspot.in
இப்பொழுது! 2020 www.eppoluthu.blogspot.in


 

 

1 comment:

  1. மரியாதைக்குரிய நண்பரே,வணக்கம்.தங்களது பெண் விடுதலைக்கான கட்டுரை வரவேற்க வேண்டியதாகும்.தங்களது சொல்பிழை,எழுத்துப்பிழை,வாக்கியப்பிழை,வரிப்பிழை என எந்தப்பிழை இருந்தாலும் மனித சமூகத்திற்காக நல்ல கருத்துக்களை வெளிக்கொணர வேண்டியது அவசியமே! தங்களுக்கு வாழ்த்துக்கள்.என Parameswaran,.c - Thalavady / Sathyamangalam.

    ReplyDelete